பக்காவான பெர்பார்மன்ஸ்..இந்தியாவில் களமிறங்கும் ‘OnePlus Nord 3 5G’ ஸ்மார்ட்போன்..! எப்போது அறிமுகம் தெரியுமா..?
Published by
செந்தில்குமார்
ஒன்பிளஸ் நோர்ட் 3 5ஜி (OnePlus Nord 3 5G) ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ள தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மொபைல் பிரியர்கள் பலரும் எதிர்பார்ப்புடன் காத்துக்கொண்டிருந்த, ஒன்பிளஸ் நார்ட் 3 (OnePlus Nord 3) ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படவுள்ள தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, இந்த ஸ்மார்ட்போனின் டீசர் வெளியிடப்பட்டு அதன் அறிமுகத்தை ஒன்பிளஸ் (OnePlus) உறுதி செய்தது.
இந்த ஸ்மார்ட்போனுடன் ஒன்பிளஸ் நிருவனம், அதன் ஒன்பிளஸ் நார்ட் சிஇ3 (OnePlusNordCE3) ஸ்மார்ட்போன் மற்றும் நார்ட் பட்ஸ் 2 ஆர்-ஐயும் (NordBuds2R) அறிமுகப்படுத்துகிறது. இந்த ஸ்மார்ட்போன்கள் மற்றும் பட்ஸ் ஆனது இந்தியாவில் ஜூலை 5ம் தேதி இரவு 7 மணியளவில் அறிமுகப்படுத்தப்படும் என்று ஒன்பிளஸ் அறிவித்துள்ளது.
OnePlus Nord 3 & CE 3 Display:
இந்த ஸ்மார்ட்போன் 6.74 இன்ச் 1.5K ஃப்ளுஇட் அமோலேட் டிஸ்பிளேவுடன் 120Hz ரெபிரேசிங் ரெட் மற்றும் HDR10+ ஆதரவுடன் வருகின்றது. இது 1240 x 2772 பிக்சல் தெளிவுத்திறன் கொண்டிருக்கும். இதில் பாதுகாப்பிற்காக கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 உள்ளது.
ஒன்பிளஸ் நார்ட் சிஇ3 ஸ்மார்ட்போன் 6.7 இன்ச் அமோலேட் டிஸ்பிளேவுடன் 120Hz ரெபிரேசிங் ரெட்டைக் கொண்டுள்ளது. இது 1080 x 2400 பிக்சல் தெளிவுத்திறன் மற்றும் 950nits உச்சகட்ட பிரகாசத்தைக் கொண்டிருக்கும்.
OnePlus Nord 3 & CE 3 Processor:
ஒன்பிளஸ் நார்ட் 3 ஸ்மார்ட்போன் மீடியாடெக் டிமென்ட்சிட்டி 9000 எஸ்ஓசி (MediaTek MT6983 Dimensity 9000) பிராசஸருடன், ஆண்ட்ராய்டு 13 மூலம் இயக்கப்படுகிறது. அதனுடன் நிறுவனத்தின் சொந்த OxygenOS 13 உள்ளது.
ஒன்பிளஸ் நார்ட் சிஇ3 ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 782 ஜி (Qualcomm Snapdragon 782 G) பிராசஸருடன், ஆண்ட்ராய்டு 13 மூலம் இயக்கப்படுகிறது. அதனுடன் நிறுவனத்தின் சொந்த OxygenOS 13 உள்ளது.
OnePlus Nord 3 & CE 3 Camara:
நார்ட் 3 மற்றும் நார்ட் சிஇ3 ஸ்மார்ட்போனில் கேமரா அமைப்பில் 50 மெகாபிக்சல் (MegaPixel) பிரைமரி கேமரா, 8 மெகாபிக்சல் அல்ட்ராவைடு மற்றும் 2 மெகாபிக்சல் டெப்த் சென்சார் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் முன்புறத்தில் செல்ஃபி மற்றும் வீடியோ அழைப்பிற்காக 16 மெகாபிக்சல் கேமரா உள்ளது.
OnePlus Nord 3 & CE 3 Battery:
இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களும் 5000mAh பேட்டரியுடன் 80 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் வருகிறது. இதனால் ஸ்மார்ட்போனை குறைந்த நேரத்தில் 100 சதவீதம் சார்ஜ் செய்ய முடியும்.
OnePlus Nord 3 & CE 3 Storage and Price:
8ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி நினைவகத்துடன் வரும் நார்ட் சிஇ3 ஸ்மார்ட்போன் ஆன்லைன் விலையில் ரூ.24,999 ஆக இருக்கலாம். மேலும், 8ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி நினைவகத்துடன் வரும் நார்ட் 3 ஸ்மார்ட்போன் ஆன்லைன் விலையில் ரூ.32,999 ஆகவும், 16 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி நினைவகத்துடன் ரூ.36,999 ஆக விற்பனைக்கு வரவுள்ளது.
ஸ்மார்ட்போன் பிரியர்கள் இதன் அறிமுகத்திற்க்காக மிகுந்த எதிர்பார்ப்புடனுடன் காத்துக்கொண்டிருக்கின்றனர். மேலும் சிலர் ஒரு புதிய நார்ட் பட்ஸுக்காக காத்துக்கொண்டிருக்கின்றனர். இந்த ஸ்மார்ட்போன் கார்டு ஆஃபர்களுடன் வந்தால் விலை குறைவாக இருக்கலாம் என்றும் சில பயனர்கள் கூறுகின்றனர்.
சென்னை : பொங்கல் பண்டிகை நெருங்கியுள்ள நிலையில், ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான எதிர்பார்ப்புகளும் மாடு பிடி வீரர்களுக்கு மத்தியில் அதிகமாகியுள்ளது என்று கூறலாம்.…