ப்ரீமியம் ஃபினிஷ்..24 ஜிபி ரேம்..ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 பிராசஸர்..! ரியல்மீ ஜிடி சீரிஸில் புதிய வரவு.!
Realme GT 5 Pro: ரியல்மீ நிறுவனம் அதன் ஜிடி சீரிஸில் கேமர்களுக்காக ஒரு அற்புதமான ஸ்மார்ட்போனை இந்த ஆண்டின் இறுதிக்குள் அறிமுகப்படுத்தவுள்ளது. அதன்படி, ரியல்மீ புதிய ஜிடி 5 ப்ரோ (Realme GT5 Pro) போனை அறிமுகம் செய்வதில் கவனம் செலுத்தி வருகிறது. அதன் 11 சீரிஸ் மற்றும் நர்சோ மாடல்களில் கவனம் செலுத்திவந்தாலும் கூட இந்த ஜிடி 5 ப்ரோ போனை வெளியிடுவதில் உறுதியாகவுள்ளது.
முன்னதாக இது குறித்த வதந்திகள் மட்டுமே பரவிவந்தது. இப்போது ரியல்மீ நிறுவனமே புதிய அறிமுகத்தை உறுதிசெய்துள்ளது. இருந்தும் ஜிடி 5 ப்ரோவில் இருக்கும் அம்சங்களை தெரிவிக்கவில்லை. ஆனால் இதன் விவரங்கள் ஆன்லைனில் கசிந்துள்ளன. கடந்த ஆகஸ்ட் மாதம் ரியல்மீ ஜிடி 5 ஸ்மார்ட்போன் கிட்டத்தட்ட ரூ.43,700 என்ற விலையில் சீனாவில் அறிமுகமானது குறிப்பிடத்தக்கது.
இனி எக்ஸில் (ட்விட்டர்) ஆடியோ மற்றும் வீடியோ கால் வசதி.! அறிமுகம் செய்து அசத்திய எலான் மஸ்க்.!
டிஸ்பிளே
ரியல்மீ ஜிடி 5 ப்ரோ ஆனது 1.5K ரெசல்யூஷன் கொண்ட 6.78 இன்ச் (17.12 செ.மீ) எஃப்எச்டி+ அமோலெட் கர்வ்டு டிஸ்பிளேவைக் கொண்டிருக்கலாம். இந்த டிஸ்பிளே 120 ஹெர்ட்ஸ் முதல் 144 ஹெர்ட்ஸ் வரையிலான ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 180 ஹெர்ட்ஸ் டச் சம்ப்ளிங் ரேட்டைக் கொண்டிருக்கலாம்.
அதோடு இன்-டிஸ்ப்ளே பிங்கர் பிரிண்ட் ஸ்கேனர் மற்றும் ஐபி68 ரேட்டிங்க்குடன் வரலாம். இதற்கு முன்னதாக வெளியான ரியல்மீ ஜிடி 5-ல் 1.5K ரெசல்யூஷன் மற்றும் 144 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்டைக் கொண்டுள்ளது.
பிராசஸர்
இந்த ஸ்மார்ட்போனில் அட்ரினோ 740 ஜிபியு உடன் இணைக்கப்பட்ட, சமீபத்தில் புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 சிப்செட் பொறுத்தப்பட உள்ளது. இதனை ரியல்மீ நிறுவனமே உறுதிப்படுத்தியுள்ளது.
இதில் ஆண்ட்ராய்டு 14 அடிப்படையிலான ரியல்மீ யுஐ 5 வரலாம். முந்தைய மாடலான ரியல்மீ ஜிடி 5 போனில் அட்ரினோ 740 ஜிபியு உடன் இணைக்கப்பட்ட குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 சிப்செட் உள்ளது.
கேமரா
ஜிடி 5 ப்ரோவின் பின்புறத்தில் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷனுடன் (OIS) கூடிய IMX966 சென்சார் கொண்ட 50 எம்பி மெயின் கேமரா, 3x ஆப்டிகல் ஜூம் உடன் கூடிய 50 எம்பி IMX890 சென்சார் கொண்ட டெலிஃபோட்டோ பெரிஸ்கோப் கேமரா மற்றும் 48 எம்பி IMX581 சென்சார் கொண்ட அல்ட்ரா வைட் கேமரா அடங்கிய டிரிபில் ரியர் கேமரா அமைப்புடன் வரலாம்.
முன்புறத்தில் செல்ஃபிக்காக 32 எம்பி கேமரா பொறுத்தப்படலாம். ஜிடி 5 ப்ரோ ஆனது 200 எம்பி டிரிபில் கேமராவுடன் வரலாம் என்றும் கூறப்படுகிறது.
ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 பிராசஸர், 50W வயர்லெஸ் சார்ஜிங்.! ஒன்பிளஸ்-ன் புது மாடல்..!
பேட்டரி
கேமரா முதல் பிராசஸர் வரை அட்டகாசமான அம்சங்களுடன் அறிமுகமாக உள்ள இந்த ஸ்மார்ட் ஃபோனை, அதிக நேரம் பயன்படுத்த 5,400 mAh பேட்டரி ஆனது பொருத்தப்படலாம் இதனை வேகமாக சார்ஜ் செய்ய டைப்-சி போர்டுடன் கூடிய 100 வாட்ஸ் வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது. அதோடு 50 வாட்ஸ் கொண்ட வயர்லெஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் வரலாம்.
ஸ்டோரேஜ் மற்றும் விலை
பல வண்ண விருப்பங்களில் வெளியாகும் இந்த ஸ்மார்ட்போன் 24 ஜிபி வரையிலான எல்பிடிடிஆர்5எக்ஸ் ரேம், மற்றும் 1 டிபி வரையிலான யுஎஃப்என் 4.0 இன்டெர்னல் ஸ்டோரேஜுடன் வரலாம்.
இருந்தும் இந்த போன் 12ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ் மற்றும் 16 ஜிபி ரேம் + 512 ஜிபி ஸ்டோரேஜ் என இரண்டு வேரியண்ட்களில் வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் வெளியாகவுள்ள இந்த ரியல்மீ ஜிடி 5 ப்ரோ விலை சுமார் 4,000 யுவான் (ரூ.45,823) ஆக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.