ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரான போகோ (POCO), போகோ எம்6 ப்ரோ 5ஜி (POCO M6 Pro 5G) ஸ்மார்ட்போனின் 4 ஜிபி ரேம் + 128 ஜிபி இன்டர்னெல் வேரியண்ட் கடந்த ஆகஸ்ட் மாதம் இந்தியாவில் அறிமுகம் செய்தது. இப்போது போகோ எம்6 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனின் 8 ஜிபி ரேம் + 286 ஜிபி இன்டர்னெல் கொண்ட மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.
இதில் சென்டர் பன்ச் ஹோல் நாட்ச்சுடன் கூடிய 6.79 இன்ச் (17.24 செ.மீ) எப்எச்டி+ டிஸ்பிளே உள்ளது. இந்த டிஸ்பிளே 90 ஹெர்ட்ஸ் அடாப்டிவ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 240 ஹெர்ட்ஸ் டச் சம்ப்ளிங் ரேட்டைக் கொண்டுள்ளது. இதனால் கேம் விளையாடுவதற்கு ஸ்மூத்தாகவும், வீடியோ பார்ப்பதற்கு சிறப்பாகவும் இருக்கும்.
அதோடு 550 நிட்ஸ் பிரைட்னஸ் உள்ளது. பாதுகாப்பிற்காக கார்னிங் கொரில்லா கிளாஸ் 3, சைடு மௌன்டெட் பிங்கர் பிரிண்ட் சென்சார் மற்றும் நீர் மற்றும் தூசியிலிருந்து பாதுகாக்க ஐபி53 ரேட் உள்ளது.
போகோ எம்6 ப்ரோ 5ஜி போனில் அட்ரினோ கிராஃபிக்ஸ் கார்டுடன் இணைக்கப்பட்ட, குவால்காம் ஸ்னாப்ட்ராகன் 4 ஜென் 2 பிராசஸர் பொருத்தப்பட்டுள்ளது. ஆன்ட்ராய்டு 13 அடிப்படையில் எம்ஐயூஐ 14 மூலம் இயங்குகிறது. விர்ச்சுவல் ப்ராக்ஸிமிட்டி, அம்பிஎண்ட் லைட் சென்சார், எலக்ட்ரானிக் காம்பஸ், ஐஆர் பிளாஸ்டர் போன்ற சென்சார்களும் உள்ளன.
எம்6 ப்ரோ 5ஜி-ல் இருக்கக்கூடிய கேமராவைப் பொறுத்தவரையில் டபுள் ரியர் கேமரா அமைப்பு உள்ளது. அதில் 50 எம்பி மெயின் கேமரா, 2 எம்பி டெப்த் கேமரா ஆகியவை அடங்கும். இந்த கேமரா மூலம் 720 பிக்சல் முதல் 1080 பிக்சல் தெளிவுடன் கூடிய வீடியோவை 30 எஃப்பிஎஸ்-ல் பதிவு செய்யலாம்.
செல்ஃபிக்காக 8 எம்பி கேமரா உள்ளது. போர்ட்ரெய்ட், 50எம்பி மோட், டைம்லேப்ஸ், கிளாசிக் ஃபிலிம் ஃபில்டர்கள், ஃபிலிம் ஃபிரேம், மூவி ஃபிரேம், எச்டிஆர், கூகுள் லென்ஸ், ஃபில்டர்கள், வாய்ஸ் ஷட்டர், டைம்லேப்ஸ், மூவி ஃப்ரேம் போன்ற கேமரா அம்சங்களும் உள்ளது.
199 கிராம் எடை கொண்ட இந்த போகோ எம்6 ப்ரோ 5ஜி போனில் 5000 mAh திறன் கொண்ட லித்தியம்-அயன் பாலிமர் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய யுஎஸ்பி டைப்-சி போர்ட்டுடன் கூடிய 18 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது. நீங்கள் போனை வாஙகும்போது உங்களுக்கு 22.5 வாட்ஸ் பவர் அடாப்டர் பாக்ஸில் இருக்கும்.
பவர் பிளாக், ஃபாரஸ்ட் கிரீன் என இரண்டு வண்ணங்களில் அறிமுகமாகியுள்ள இந்த ஸ்மார்ட்போன், இப்போது அறிமுகமாகியுள்ள வேரியண்ட்டுடன் சேர்த்து மூன்று வேரியண்ட்களில் விற்பனைக்குக் கிடைக்கும்.
அதன்படி, 4 ஜிபி ரேம் + 64 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் ரூ.9,999 என்ற விலையிலும், 6 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் ரூ.11,999 என்ற விலையிலும், 8 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் ரூ.14,999 என்ற விலையிலும் கிடைக்கிறது.
தேர்ந்தெடுக்கப்பட்ட வங்கி கிரெடிட் கார்டுகள் மூலம் போகோ எம்6 ப்ரோ 5ஜி போனை வாங்கினால் ரூ.2,000 வரைத் தள்ளுபடி வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…