தயவு செய்து இனி அதை செய்யாதீங்க… தங்கள் பயனர்களை எச்சரிக்கும் ஆப்பிள்!
Apple Warns : தண்ணீரில் விழுந்த ஆப்பிள் ஐபோனை அரிசியில் வைக்கும் பழக்கத்தை தவிர்க்குமாறு தங்களது பயனர்களுக்கு அந்நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
பொதுவாக நாம் மொபைல் தண்ணீரில் விழுந்தாலும், மழையில் நனைந்தாலும், உடனே பேட்டரியை கழட்டிவிட்டு நம் வீட்டில் உள்ள அரிசி பானை அல்லது அரிசி பையில் வைப்பது வழக்கமாக இருந்து வருகிறது. அப்படி செய்யும்பட்சத்தில் செல்போனில் புகுந்துள்ள தண்ணீர் காயக்கூடும் அல்லது குறையும் என நம்பப்படுகிறது. ஒரு குறிப்பிட்ட இடத்தில் அரிசி அடைக்கப்பட்டுள்ள நிலையில், அதில் தண்ணீரில் விழுந்த மொபைலை உள்ளே வைக்கும் போது வெப்பநிலை அதிகமாக இருக்கும் என்பதால் இதனை ஸ்மார்ட்போன் வாசிகள் செய்து வருகின்றனர்.
Read More – பாரத் மேட்ரிமோனி, ஷாதி உள்ளிட்ட பிரபலமான 10 இந்திய ஆப்ஸ்களை அதிரடியாக நீக்கும் கூகுள்
அதுவும் இந்த பழக்கம் கிராமப்புறங்களில் அதிகமாக காணப்படும். இந்த சூழலில், தண்ணீரில் விழுந்த ஆப்பிள் ஐபோனை அரிசியில் வைக்கும் பழக்கத்தை கைவிட தங்களது பயனர்களை அந்நிறுவனம் எச்சரிக்கிறது. அதாவது, ஈரப்பதத்தை உறிஞ்சுவதற்காக, தண்ணீரில் விழுந்த அல்லது ஈரமான ஐபோனை அரிசி பையில் வைப்பதற்கான பொதுவான நடைமுறைக்கு எதிராக ஆப்பிள் தங்கள் பயனர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.
இது பல ஆண்டுகளாக கிராமப்புறங்களில் ஒரு தீர்வாக இருந்துவரும் நிலையில், அப்படி செய்யும்போது அரிசி துகள்கள், சாதனத்தை சேதப்படுத்தக்கூடும் என்று ஆப்பிள் நிறுவனம் எச்சரிக்கிறது. சமைக்கப்படாத அரிசி, சாதனத்தை உலர்த்துவதில் பயனுள்ளதாக இல்லை என்று சோதனையில் தெரியவந்துள்ளது.
Read More – St.David’s Day: செயின்ட் டேவிட் தினத்தை முன்னிட்டு டிராகன் கொண்ட சிறப்பு டூடல்.!
இதனால், ஆப்பிள் நிறுவனம் தங்கள் பயனர்களுக்கு மாற்று வழிகாட்டுதலை வழங்கியுள்ளது. ஆப்பிள் கூறியதாவது, பயனர்கள் சார்ஜிங் கேபிளை இரு முனைகளிலும் அவிழ்த்து விட வேண்டும். அதிகப்படியான ஈரப்பதத்தை அகற்ற தொலைபேசியை மெதுவாக தட்ட வேண்டும், குறைந்தது அரை மணி நேரம் உலரவிட வேண்டும். மொபைல் மற்றும் சார்ஜிங் கேபிளில் ஈரப்பதம் வறண்டிருந்தால், பயனர்கள் மீண்டும் சாதனத்தை சார்ஜ் செய்ய முயற்சிக்கலாம்.
அப்போதும் சரியாகவில்லை என்றால், ஒரு நாள் கழித்து மீண்டும் முயற்சிக்க வேண்டும். பயனர்கள் வெப்பம் (external heat) அல்லது காற்றை (compressed air) பயன்படுத்தி தங்கள் ஐபோன்களை உலர வைக்க கூடாது, இதுபோன்று பருத்தி துணி அல்லது காகித துண்டுகள் போன்ற பொருட்களை இணைப்பிற்குள் செருகுவதைத் தவிர்க்க வேண்டும். மேலும் தங்களது தொலைபேசி செயல்படவில்லை என்றால், எந்த பட்டன்களையும் அழுத்தாமல் உடனடியாக மொபைலை சுவிட்ச் ஆப் செய்ய வேண்டும் என ஆப்பிள் பரிந்துரைக்கிறது.
Read More – யாரெல்லாம் இந்த ஸ்மார்ட்போன்களுக்கு வெயிட்டிங்? இம்மாதம் வெளியாகும் டாப் 4 லிஸ்ட்!
அடுத்தடுத்து குறிப்பிட்ட சூழ்நிலைகளைப் பொறுத்தது, பயனர்கள் தங்களது தொலைபேசியை ஒரு துண்டுடன் சேர்த்து, அல்லது கிடைத்தால் சிலிக்கா பாக்கெட்டுகளுடன் காற்று புகாத இடத்தில் வைக்க வேண்டும். சாதனம் முற்றிலும் வறண்டு விட்டது என்பதை உறுதிப்படுத்தியவுடன் மட்டுமே சார்ஜ் செய்ய முயற்சிக்க வேண்டும். இன்றைய ஸ்மார்ட்போன்களில் நீர் எதிர்ப்புத் திறன் கொண்டவையாக இருந்தாலும், எதிர்பாராதவிதமாக தண்ணீரில் விழும் நிகழ்வு ஏற்படலாம் என்பதால் ஆப்பிள் நிறுவனம் வலியுறுத்தியுள்ளது.