Photoshop [File Image]
கம்ப்யூட்டர் சாப்ட்வேர் நிறுவனமான அடோப், புகைப்பட எடிட்டர்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் அதன் புகைப்பட எடிட்டிங் சாப்ட்வேர் ஆன ஃபோட்டோஷாப்பை இணைய சேவையில் நேரடியாக உபயோகப் படுத்திக்கொள்ளும்படி அறிமுகம் செய்துள்ளது. அதன்படி புதிதாக வெளியிடப்பட்ட அடோப் ஃபயர்ஃபிளை ஆனது செயற்கை நுண்ணறிவின் ஒரு பகுதியான ஜெனரேட்டிவ் ஏஐ அம்சங்களுடன் வெளியாகியுள்ளது.
இதில் ஜெனரேட்டிவ் ஏஐ அம்சங்களான ஜெனரேட்டிவ் ஃபில் மற்றும் ஜெனரேட்டிவ் எக்ஸ்பாண்ட் உட்பட பல அம்சங்கள் உள்ளன. இந்த ஃபோட்டோஷாப்பை இணையத்தில் பயன்படுத்த பீட்டா வெர்சன் ஆனது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் இனி போட்டோஷாப்பை பதிவிறக்கம் செய்யாமலே இணையத்தில் நேரடியாக பயன்படுத்த முடியும். இந்த அம்சங்கள் பல செயல்பாடுகளுக்கு பெரிதளவில் பயனுள்ளதாக இருக்கும்.
இந்த ஜெனரேட்டிவ் ஃபில்லைப் பயன்படுத்தும் பயனர்கள், நீங்கள் எடிட் செய்யும் படத்தில் ஏதேனும் சேர்க்கவேண்டுமென்றால், அதன் பெயரை உள்ளிடுவதன் மூலமாக சேர்க்க முடியும். அதாவது எடுத்துக்காட்டாக, நீங்கள் ஒரு கடற்கரை காட்சியை எடிட் செய்து கொண்டிருக்கும் பொழுது, உங்களுக்கு சூரியன் மறைவது போன்ற ஒரு படம் வேண்டும் என்றால், அதனை நீங்கள் டைப் செய்து உள்ளிடுவதன் மூலம் சேர்க்க முடியும். இந்த அம்சத்தை 100க்கும் மேற்பட்ட மொழிகளில் பயன்படுத்தலாம்.
இதே அம்சம் ஒரு படத்திலிருந்து பொருட்களை அகற்ற பயன்படுத்தலாம். இணையத்தில் உள்ள இந்த ஃபோட்டோஷாப் வெப் ஆனது டெஸ்க்டாப் பயன்பாட்டில் இருக்கும் ஃபோட்டோஷாப்பில் பொதுவாகப் பயன்படுத்தப்படும் கருவிகளைக் கொண்டுள்ளது. மூவ் டூல், கிராப் டூல், ட்ரான்ஸ்பார்ம் டூல், ஆப்ஜெக்ட் செலக்சன் டூல், பிரைட்னஸ் & கலர் அட்ஜஸ்ட்மெண்ட் டூல், பேக்ரவுண்ட் ரிமூவர், பிரஸ் மற்றும் எரேசர் டூல், டைபிங் டூல், ஐ டிராப்பர், பேட்ச் டூல் போன்ற டெஸ்க்டாப் பயன்பாட்டில் இருக்கும் அம்சங்களையும் கொண்டுள்ளது.
ஜெனரேட்டிவ் ஃபில் மற்றும் ஜெனரேட்டிவ் எக்ஸ்பாண்ட் ஆகிய அம்சங்கள் கடந்த ஜூன் மாதம் ஃபோட்டோஷாப் டெஸ்க்டாப்பில் வெளியிடப்பட்டது. அதை பயன்படுத்த, ஜெனரேட்டிவ் ஃபில் அம்சம், ஃபோட்டோஷாப் வெர்சன் 24.6-ஐ நிறுவியிருக்க வேண்டும். இப்பொழுது இதே அம்சம் இணையத்திலும் உள்ளது. இந்த இணைய அடிப்படையில் ஆன ஃபோட்டோஷாப் சேவையானது மூன்று விதமான கட்டணங்கள் அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதில் மாதத்திற்கு ரூ.797.68 செலுத்தினால், 20 ஜிபி கிளவுட் ஸ்டோரேஜ் மற்றும் லைட் ரூம் கிளாசிக் போன்ற அம்சங்களுடன் பிற பயன்பாடுகளுடன் கிடைக்கும். இரண்டாவது திட்டத்திற்கு மாதம் ரூ.1675.60 செலுத்த வேண்டும். இந்த திட்டத்தில் ஃபோட்டோஷாப்பை டெஸ்க்டாப் மற்றும் இணையத்தில் பயன்படுத்திக் கொள்ள முடியும். 100 ஜிபி வரை கிளவுட் ஸ்டோரேஜ் கிடைக்கும்.
மூன்றாவதாக மாதத்திற்கு ரூ.4230.30 கட்டணம் செலுத்தினால் 20க்கும் மேற்பட்ட அடோப் பயன்பாடுகள், 100 ஜிபி வரையிலான கிளவுட் ஸ்டோரேஜ் போன்ற அம்சங்களும் கிடைக்கும். இந்த திட்டங்களில் முதல் 7 நாட்கள் மட்டும் ஃபோட்டோஷாப்பை இலவசமாக பயன்படுத்திக் கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், அக்சர் படேல் தலைமையிலான…
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், அக்சர் படேல் தலைமையிலான…
ஸ்ரீநகர் : இன்று பிற்பகல் 3 மணி அளவில் ஜம்மு காஷ்மீர் அனந்த்நாக் மாவட்டத்திற்கு சுற்றுலா சென்ற பயணிகள் மீது…
பஹல்காம் : ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம், பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுற்றுலா பயணிகள் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள்…
சென்னை : நடிகர் அஜித்குமார் சினிமா, நடிப்பை தாண்டி கார் பந்தயத்திலும் மிகுந்த ஆர்வத்துடன் பங்கேற்று வருகிறார். ஏற்கனவே அஜித்குமார்…
சென்னை : இந்த வருட ஐபிஎல் சீசன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும், ரசிகர்களுக்கும் சோகமான சீசனாகவே அமைந்து வருகிறது.…