மக்களே எச்சரிக்கை..! உங்களுக்கு தெரியாமலேயே உங்கள் டேட்டாக்களை சேகரிக்கும் ஆப்ஸ்..!

Default Image

ஒரு ஆய்வில் கூகுள் டயலர் மற்றும் மெசேஜஸ் போன்ற பயன்பாடுகளில் இருந்து, நமது டேட்டாக்கள் நமக்கு தெரியாமலே சேகரிக்கப்படுவதாக கூறப்படுகிறது. 

தனியுரிமை மீறல் 

இன்று சிறியவர்கள் முதல் முதியவர்கள் வரை அனைவருமே மொபைல் போன் உபயோகிக்கின்றனர். நம்மில் பலர் நாம் உபயோகிக்கும் மொபைல் போன்கள் மூலம், நமது தனியுரிமையை பாதிக்கக் கூடிய பிரச்சனைகள் எவ்வாறு ஏற்படுகிறது, அல்லது இந்த பிரச்னை நமக்கு இருக்கிறதா என்று கூட தெரியாமல் தான் உபயோகித்து வருகின்றனர்.

தனியுரிமை சிக்கல் 

ஆண்ட்ராய்டு வாடிக்கையாளர்களின் தனியுரிமைச் சிக்கல்களை சரி செய்ய கூகுள் முயற்சித்து வருகிறது. இருப்பினும் ஒரு புத்தம் புதிய ஆய்வுக் கட்டுரையானது கூகுள் டயலர் மற்றும் மெசேஜஸ் போன்ற பயன்பாடுகளில் இருந்து, நமது டேட்டாக்கள் நமக்கு தெரியாமலே சேகரிக்கப்படுவதாக கூறப்படுகிறது.

ஆய்வு முடிவுகள் 

ஆண்ட்ராய்டில் உள்ள கூகுள் டயலர் மற்றும் மெசேஜஸ் ஆப்ஸ் என்ன தகவல்களை கூகுளுக்கு அனுப்புகிறது? என்ற தலைப்பில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. டிரினிட்டி பள்ளியில் கணினி அறிவியல் பேராசிரியராக இருக்கும் டக்ளஸ் லீத் இந்த ஆராய்ச்சியை தொகுத்துள்ளார்.

இதுகுறித்து பேராசிரியர் டக்ளஸ் லீத் கூறுகையில், இந்தப் பயன்பாடுகள் பயனர் தகவல்தொடர்புகள் பற்றிய தகவல்களைச் சேகரிக்கின்றன. இதில் செய்திகளின் SHA256 ஹாஷ் மற்றும் அவற்றின் நேர முத்திரை, தொலைபேசி எண்கள், உள்வரும் மற்றும் வெளிச்செல்லும் அழைப்புப் பதிவுகள், அழைப்பு காலம் மற்றும் நீளம் ஆகியவை அடங்கும்.

இது பின்னர் Google Play Services Clearcut logger சேவை மற்றும் Firebase Analytics சேவையைப் பயன்படுத்தி Google இன் சேவையகங்களுடன் பகிரப்படுகிறது. ஸ்பேம் வடிகட்டுதல் மற்றும் வணிக அழைப்பாளர் ஐடிகள் போன்ற அம்சங்களை இயக்கி, செய்தி அனுப்புபவர் மற்றும் பெறுநர் அல்லது அழைப்பில் உள்ள இரண்டு சாதனங்களை இணைக்க தரவு நிறுவனத்திற்கு உதவுகிறது.

கூகுள் டயலர் மற்றும் மெசேஜஸ் ஆப்ஸ் இரண்டிலும் எந்தத் தரவு சேகரிக்கப்படுகிறது என்பதை விளக்கும் தனியுரிமைக் கொள்கைகளைக் கொண்டிருக்கவில்லை என்றும் இந்த ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளதாக கூறப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்