Paytm : வங்கியுடனான ஒப்பந்தங்களை நிறுத்துகிறது பேடிஎம் ..! அடுத்தகட்ட திட்டம் இதுதானா ..?
Paytm : பேடிஎம் பேமென்ட்ஸ் (Paytm Payments Bank) மற்றும் அதன் தாய் நிறுவனமான (Parent Company) One97 Communications Ltd ஆகியவை பல்வேறு வங்கிகளின் இடையேயான நிறுவனங்களின் ஒப்பந்தங்களை தற்போது நிறுத்த ஒப்புக் கொண்டுள்ளோம் என இன்று (01-03-2024) பேடிஎம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளது. இந்த ஒப்பந்தத்தை பரஸ்பர சம்மதத்துடன் ஒப்புக்கொண்டுள்ளோம் என்றும் அந்த அறிக்கையில் வெளியிட்டுள்ளார்.
X தளத்தில் பேடிஎம் வெளியிட்ட அறிக்கையில், ” ஒன் 97 கம்யூனிகேஷன்ஸ் லிமிடெட் நிறுவனம் மற்றும் அதன் இணை நிறுவனமான பேடிஎம் பேமென்ட்ஸ் Bank Limited (PPBL), PPBL இன் நேர்மையான செயல்பாடுகளை நோக்கி தங்கள் அணுகுமுறையை வலுப்படுத்த கூடுதல் நடவடிக்கைகளை அறிமுகப்படுத்தியுள்ளோம் என்பதைத் தெரிவிக்க விரும்புகிறோம்.
Read More :- வந்தாச்சு புது அப்டேட்.. இனி பழைய வாட்ஸ்அப் மெசேஜை ஒரு நொடியில் பார்க்கலாம்…!
மேலும், பங்குகளை (shares) குறைப்பதற்கான இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக, Paytm மற்றும் PPBL ஆகிய நிறுவனங்கள் உடனான பல்வேறு நிறுவனங்களுக்கு இடையே உள்ள ஒப்பந்தங்களை நிறுத்துவதற்கு பரஸ்பரம் ஒப்புக் கொண்டுள்ளோம். மேலும், PPBL இன் பங்குதாரர்கள் PPBL இன் நிர்வாகத்தை ஆதரிப்பதற்காக ஒப்பந்தத்தை எளிமைப்படுத்துவதற்காகவும் ஒப்புக்கொண்டுள்ளோம்.
Read More :- புதிய அம்சத்துடன் வெளியானது Noise-ன் Fit Twist Go ஸ்மார்ட் வாட்ச் ..! விலை என்ன தெரியுமா ..?
இந்த ஒப்பந்தங்கள் மற்றும் திருத்தங்களை மார்ச் 1, 2024 அன்று செய்வதற்கு தொழிலாளர் நல வாரியம் ஒப்புதல் அளித்தது. அதன் அடிப்படையில், இந்த நடவடிக்கையை எடுத்துள்ளோம். மேலும், Paytm மற்ற வங்கிகளுடன் புதிய பார்ட்னெர்ஷிப் அமைத்து அதன் வாடிக்கையாளர்களுக்கும், வணிகர்களுக்கும் தடையற்ற சேவைகளை வழங்க நடவடிக்கை எடுப்பதாக முன்னதாக பிப்ரவரி 1, 2024 அன்று அறிவித்திருந்தை தற்போது செய்யவுள்ளோம்.
முன்பு தெரிவித்தபடி, paytm-மின் சவுண்ட்பாக்ஸ் (Sound Box) மற்றும் Paytm கார்டு உள்ளிட்ட அதன் சேவைகள் தடையின்றி தொடர்ந்து செயல்படும்”, என்றும் X தளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.