பேடிஎம் மால்(paytm mall) தளத்தில் அட்டகாசமான சலுகைகள்..!

Default Image

 

இன்றைய சூழ்நிலையில் ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் பல அதிரடி சலுகைகளை அறிவத்த வண்ணம் உள்ளது, அதன்படி பேடிஎம் மால் வலைதளத்தில் சாம்சங் ஸ்மார்ட்போன் சாதனங்களுக்கு அதிரடி கேஷ்பேக் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது, மேலும் இந்த சலுகையை பல்வேறு மக்கள் பயன்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எஸ்8, கேலக்ஸி எஸ்8 பிளஸ், கேலக்ஸி எஸ்9, கேலக்ஸி நோட் 8 போன்ற பல்வேறு ஸ்மார்ட்போன் சாதனங்களுக்கு இப்போது கேஷ்பேக் அறிவிக்கப்பட்டுள்ளது, மேலும் இந்த ஸ்மார்ட்போன் மாடல்கள் இந்தியாவில் அதிக வரவேற்பை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சாம்சங் கேலக்ஸி நோட் 8 (ஆர்சிட் கிரே), கேலக்ஸி எஸ்9(மிட்நைட் பிளாக்) மற்றும் கேலக்ஸி எஸ்9 போன்ற ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு ரூ.9,000-வரை கேஷ்பேக் வழங்கப்படுகிறது. அதன்பின்பு கேலக்ஸி ஏ8 பிளஸ் மற்றும் கேலக்ஸி எஸ்7 போன்ற ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு ரூ.5,000-வரை கேஷ்பேக் வழங்கப்பட்டுள்ளது.   ரூ.10,000 கேஷ்பேக்: சாம்சங் நோட் 8 ஸ்மார்ட்போனின் உண்மை விலை ரூ.67,900-ஆக உள்ளது, அதன்பின்பு இப்போது அறிக்கப்பட்டுள்ள ரூ.10,000 கேஷ்பேக் மூலம் ரூ.57,900-க்கு இந்த ஸ்மார்ட்போனை வாங்க முடியும். மேலும் கேலக்ஸி எஸ்8 ஸ்மார்ட்போனின் உண்மை விலை ரூ.49,000-ஆக உள்ளது.

தற்சமயம் அறிவிக்கப்பட்டள்ள கேஷ்பேக் சலுகையின் மூலம் இந்த ஸ்மார்ட்போனை ரூ.39,990-க்கு விற்பனை செய்யப்படுகிறது. பேடிஎம் மால்: இந்த கேஷபேக் சலுகையை பெற மால் சலுகையை பெற கியூஆர் கோடினை ஸ்கேன் செய்ய வேண்டும், அதன்பின்பு பேடிஎம் செயலியில் வாங்குவோர் ப்ரோமோ கோடினை பதிவு செய்து எளிமையான சலுகையை பெற முடியும். மேலும் கேஷ்பேக் சலுகையுடன் கேலக்ஸி எஸ் 9 ஸ்மார்ட்போன் ரூ.48,900-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கேலக்ஸி எஸ்9 ஸ்மார்ட்போன் பொதுவாக 5.8-இன்ச் க்யுஎச்டி பிளஸ் சூப்பர் அமோல்ட் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின் 1080பிக்சல் தீர்மானம் கொண்டவையாக உள்ளது. மேலும் IP68- சான்றளிக்கப்பட்ட தண்ணீர் மற்றும் தூசி எதிர்ப்பு திறமைக் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.

கேலக்ஸி எஸ்9 ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின் ஆண்டராய்டு ஓரியோ 8.0 இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். மேலும் இயக்கத்திற்க்கு மிக அருமையாக இருக்கும் இந்த கேலக்ஸி எஸ்9 ஸ்மார்ட்போன்.

இந்த கேலக்ஸி எஸ்9 ஸ்மார்ட்போனில் 12எம்பி ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின் 4கே வீடியோ பதிவு செய்ய முடியும்.இதனுடைய ஏஎப் செல்பீ கேமரா 8மெகாபிக்சல் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் டூயல் எல்இடி ஃபிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது. ஒரு முக்கியமான தருணத்தில் எடுக்கப்படும் புகைப்படமானது சிறந்த முறையிலான ஒளியை பெற்றுள்ளது என்பதை எஸ்9 தொடர் ஸ்மார்ட்போன்களின் டூயல் அப்பெர்ஷர் உறுதி செய்கிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்