paytm [File Image]
இந்த காலத்தில் ஏஐ (AI)யின் பயன்பாடு அதிகரித்து வரும் நிலையில், அதனை காரணம் காட்டி பேடிஎம் நிறுவனத்தின் ஓன்97 கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் பல பிரிவுகளில் தங்களுடைய நிறுவனங்களில் இருக்கும் 1, 000 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளனர். ஏஐ (AI) தொழில்நுட்பம் மூலம் பல வகையில் நன்மைகள் கிடைக்கிறது. குறிப்பாக சொல்லவேண்டும் என்றால், நம்மளுடைய மனிதக் குலத்தை அடுத்தகட்ட வளர்ச்சிக்கு எடுத்துச் செல்லும் ஒரு பாதையாகவும் இருந்து வருகிறது.
இருந்தாலும், இந்த ஏஐ (AI) மனிதர்கள் கணினிகளில் செய்யும் வேலைகளை அதுவே செய்துவிடுவதால் மனிதர்களுக்கு பெரிய அளவில் வேலையிழப்பு ஏற்படும் என ஆய்வாளர்கள் எச்சரித்து கொண்டு தான் இருக்கிறார்கள். இருந்தும் தற்போது ஏஐ-யை காரணம் காட்டி பேடிஎம் 1,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
எக்ஸ் செயலி மூலம் பண பரிமாற்றம்! எலான் மஸ்க் அறிவிப்பு!
முன்னதாகவே, பேடிஎம் நிறுவனத்தின் ஓன்97 கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் ஊழியர்களை பணிநீக்கம் செய்துவிட்டதாக தகவல்கள் வெளியாகி இருந்த நிலையில், தற்போது அதனை, பேடிஎம் உறுதி செய்து இருக்கிறது. விற்பனை, இன்ஜினியரிங் ஆகிய பிரிவுகளில் அதிக ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டது குறித்து பேடிஎம் செய்தி தொடர்பாளர் பேசுகையில் ” நாங்கள் அடுத்தகட்டமாக AI நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறோம். எனவே, எங்களுடைய வளர்ச்சிகளை மேம்படுத்தவேண்டும் செலவுகளை குறைக்கவேண்டும் என்ற காரணத்துக்காக ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளோம். இப்படி பணிநீக்கம் செய்ததன் மூலம் ஊழியர்களின் செலவில் இருந்து நாங்கள் 10-15 சதவீதத்தைச் சேமிக்க முடியும். எனவே, இதன் காரணமாக தான் ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளோம்” என்று கூறினார்.
அகமதாபாத் : ஐபிஎல் தொடரில் முதல் போட்டியில் தோல்வியடைந்த குஜராத் - மும்பை அணிகள் இன்று மோதுகின்றனர். அகமதாபாத் நரேந்திர…
அமெரிக்கா : உலகின் மிகப் பெரிய பணக்காரரான எலோன் மஸ்க், முன்னதாக ட்விட்டர் என்று அழைக்கப்பட்ட X-ஐ, தனது சொந்த…
சென்னை : இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ள "குட் பேட் அக்லி" திரைப்படம் வரும் ஏப்ரல் 10 ஆம் தேதி…
சென்னை : நடிகர் கமல்ஹாசனுக்கு சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் (RKFI) ஒரு முக்கியமான எச்சரிக்கை அறிவிப்பை…
மதுரை : மதுரை மாவட்டம் கள்ளபட்டியைச் சேர்ந்த முத்துக்குமார் உசிலம்பட்டி காவல் நிலையத்தில் முதல் நிலைக் காவலராகவும், காவல் ஆய்வாளரின்…
சென்னை : ஐபிஎல்-ல் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான நேற்றைய போட்டியில், பெங்களூரு…