1,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த பேடிஎம்! காரணம் இது தான்…

paytm

இந்த காலத்தில் ஏஐ (AI)யின் பயன்பாடு அதிகரித்து வரும் நிலையில், அதனை காரணம் காட்டி பேடிஎம் நிறுவனத்தின் ஓன்97 கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் பல பிரிவுகளில் தங்களுடைய நிறுவனங்களில் இருக்கும் 1, 000 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளனர். ஏஐ (AI) தொழில்நுட்பம் மூலம் பல வகையில் நன்மைகள் கிடைக்கிறது. குறிப்பாக சொல்லவேண்டும் என்றால், நம்மளுடைய மனிதக் குலத்தை அடுத்தகட்ட வளர்ச்சிக்கு எடுத்துச் செல்லும் ஒரு பாதையாகவும் இருந்து வருகிறது.

இருந்தாலும், இந்த ஏஐ (AI) மனிதர்கள் கணினிகளில் செய்யும் வேலைகளை அதுவே செய்துவிடுவதால் மனிதர்களுக்கு பெரிய அளவில் வேலையிழப்பு ஏற்படும் என ஆய்வாளர்கள் எச்சரித்து கொண்டு தான் இருக்கிறார்கள். இருந்தும் தற்போது ஏஐ-யை காரணம் காட்டி பேடிஎம் 1,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

எக்ஸ் செயலி மூலம் பண பரிமாற்றம்! எலான் மஸ்க் அறிவிப்பு!

முன்னதாகவே, பேடிஎம் நிறுவனத்தின் ஓன்97 கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் ஊழியர்களை பணிநீக்கம் செய்துவிட்டதாக தகவல்கள் வெளியாகி இருந்த நிலையில், தற்போது அதனை, பேடிஎம் உறுதி செய்து இருக்கிறது. விற்பனை, இன்ஜினியரிங் ஆகிய பிரிவுகளில் அதிக ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டது குறித்து பேடிஎம் செய்தி தொடர்பாளர் பேசுகையில் ” நாங்கள் அடுத்தகட்டமாக AI நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறோம். எனவே, எங்களுடைய வளர்ச்சிகளை மேம்படுத்தவேண்டும் செலவுகளை குறைக்கவேண்டும் என்ற காரணத்துக்காக ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளோம்.  இப்படி பணிநீக்கம் செய்ததன் மூலம் ஊழியர்களின் செலவில் இருந்து நாங்கள் 10-15 சதவீதத்தைச் சேமிக்க முடியும். எனவே, இதன் காரணமாக தான் ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளோம்” என்று கூறினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்