பேடிஎம்(paytm)-ல் வந்துவிட்டது புதிய சேவை..!
பேடிஎம் நிறுவனம் வங்கிகளுக்கு இணையாக பணத்தை பரிமாற்றம் செய்து கொள்ளும் வசதிகளை அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய வசதி பேடிஎம் செயலிகளி, ‘மை பேமெண்ட் ஃபீச்சர்ஸ்’ என்ற பெயரில் உள்ளது. இந்த புதிய வசதி மாதாமாதாம், அதிக தொகைகள் பேமெண்ட் மற்றும் மாத செலவு வகைகளை கவனித்து கொள்கிறது. வங்கிகளில் பரிமாற்றம் செய்து கொள்வதை விட ஆறு மடங்கு இந்த பேடிஎம் செயலிகளில் செய்து கொள்ளும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய வசதியை வாடிக்கையாளர்கள் பயன்படுத்தி கொள்ள வங்கிகள் எந்த கட்டணமும் வசூலிப்பதில்லை. பேடிஎம் வேலட் பணப்பரிவர்த்தனையை யூபிஐ மற்றும் ஒருசில வழிகளின் மூலம் செய்கிறது. இதுகுறித்து பேடிஎம் சீனியர் துணை தலைவர் தீபக் அப்பாட் கூறியபோது, நாங்கள் எங்கள் வாடிக்கையாளர்களுடன் பல விதங்களில் இணைந்துள்ளோம்.
வாடிக்கையாளர்கள் பில் கட்டணம் செலுத்துவதில் இருந்து பல்வேறு வகைக்காக எங்களை அணுகுகின்றனர். நாங்கள் கவனித்ததில் இருந்து 60% வாடிக்கையாளர்களின் பரிவர்த்தனைகள் ஒருசிலருக்குக் மட்டுமே மீண்டும் மீண்டும் பரிவர்த்தனை செய்கின்றனர். இதுபோன்ற வாடிக்கையாளர்களுக்கு நாங்கள் ரிக்கரிங் வசதியையும் செய்து தருகிறோம். மேலும் பேடிஎம் தனது ஹோம் பக்கத்தில் இந்த பரிவர்த்தனை வசதி குறித்த தகவல்களை தற்போது காட்டுகிறது. இது ஒரு முழுக்க முழுக்க தனிப்பட்ட வாடிக்கையாளர்களின் பரிவர்த்தனை விஷயம் ஆகும். குறிப்பாக நீங்கள் வோடோபோன் பில் கட்டணம் கட்ட போகிறீர்கள் என்றால், மொபைல் போஸ்ட் பெய்ட் என்று காண்பிப்பதோடு வோடோபோன் லோகோவையும் காண்பிக்கும். எனவே 70% வாடிக்கையாளர்கள் இந்த புதிய வசதியை புரிந்து கொண்டு செயல்படுகின்றனர். மீதமுள்ள 30% வாடிக்கையாளர்களுக்கும் விரைவில் புரிய வைப்போம்.
பேடிஎம் அளித்துள்ள இந்த புதிய வசதியின் மூலம் சராசரியாக 3000 ரூபாய் முதல் 5000 ரூபாய் வரை பணப்பரிவர்த்தனை நடக்கும் என நம்புகிறது. இதில் பி2பி பர்வர்த்தனைகளும் அடங்கும். மேலும் இந்த வசதியில் கூடுதலாக ஆடோமெட்டிக் பேமெண்ட் ஃபீச்சர்ஸ் என்ற வசதியும் உண்டு. இந்த ஆடோமெட்டிக் பேமெண்ட் ஃபீச்சர்ஸ் வாடிக்கையாளர்களுக்கு மாதா மாதம் செலுத்த வேண்டிய பேமெண்டுக்களை கவனித்து கொள்ளும். இந்த புதிய வசதிகளின்படி ஆண்டு ஒன்றுக்கு 60 ஆயிரம் கோடி ரூபாய் பரிவர்த்தனை நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.