பான் கார்டு தொலைந்துவிட்டதா..? இனி கவலை வேண்டாம் சுலபமாக பெறலாம்..!!
இணையவழியில் புதிதாக பான்கார்டுக்கு விண்ணப்பிப்பது மிகவும் எளிதானது. ஃபான் கார்டை தொலைத்துவிட்டாலோ, பெயர் அல்லது இதர விவரங்களை மாற்ற வேண்டும் என்றாலோ எளிதாக இணையவழியில் செய்யலாம். இதன் மூலம் ஃபான் கார்டை மீண்டும் பிரிண்ட் செய்யலாம் அல்லது பெயர், புகைப்படம், பிறந்ததேதி தவறாக இருந்தால் மாற்றம் செய்யலாம்.
டிரஸ்ட், நிறுவனம் போன்றவற்றின் ஃபான் கார்டுகளுக்கு வழிமுறை வேறாக இருக்கலாம்.இதன் மூலம் பெயர் உள்பட அனைத்து திருத்தங்களும் செய்யலாம். தவறான ஸ்பெல்லிங், பெயர் மாற்றம் போன்ற பல காரணங்களுக்காக பான்கார்டில் மாற்றம் தேவைப்படும். கீழே உள்ள வழிமுறையில் ஆதார் பயன்படுத்தப்படுவதால் , அதில் பெயர் சரியாக இருந்தால் இந்த வழிமுறை மூலம் பான்கார்டில் பெயர் மாற்றம் செய்யலாம்.
இல்லையென்றால், பெயர் மாற்றம் செய்யப்பட்ட அல்லது தவறாக உள்ளதற்கான ஆவணங்களை சமர்பிக்க வேண்டும். பெயர் மாற்றத்திற்கான அரசாணை, திருமண பத்திரிக்கையுடன் திருமண சான்றிதழ் அல்லது பாஸ்போர்ட் போன்ற ஆவணங்கள் தேவை.
https://www.onlineservices.nsdl.com/paam/endUserRegisterContact.html அல்லது https://www.utiitsl.com/UTIITSL_SITE/pan/#six மூலம் விண்ணப்பிக்கலாம். இதில் NSDL வழிமுறையில் விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. https://www.onlineservices.nsdl.com/paam/endUserRegisterContact.html இணையதளத்திற்கு சென்று ‘Application type’ என்ற மெனுவை கிளிக் செய்து ‘ Changes or correction in existing PAN data/ Reprint of PAN Card( No changes in existing PAN data) தேர்வு செய்யவும்.
- பின்னர் அனைத்து தகவல்களையும் உள்ளீடு செய்து, Captcha வை உள்ளீடு செய்து ‘ Submit’ ஐ கிளிக் செய்யவும். அடுத்த நிலையில், எந்த வழியில் ஆவணங்களை சமர்பிக்க விரும்புகிறீர்கள் என்பதை தேர்வு செய்யலாம்.e-KYC மூலம் செய்வதற்கு ஆதார் கார்டும், e-sign மூலம் சமர்பிக்க ஸ்கேன் செய்த ஆவணங்களும் தேவை. அல்லது நேரிடையாக அஞ்சல் வழியாகவும் ஆவணங்களை அனுப்பலாம்.
- இங்கு e-KYC வாயிலாக ஆதார் மூலம் ஆவணங்களை சமர்பிக்கும் முறையை காணலாம். இது மற்றவற்றிலிருந்து சிறிது வேறுபடும். சிவப்பு நட்சத்திரமிட்ட பீல்டுகளில் தகவலை உள்ளீடு செய்து ‘Next’ ஐ கிளிக் செய்யவும்.
- தனிநபர் தகவல்களை சிவப்பு நட்சத்திரமிட்ட பீல்டுகளில் தகவலை உள்ளீடு செய்து ‘Next’ ஐ கிளிக் செய்யவும்.
- ஆதாரில் உள்ளபடியே தகவல்களை உள்ளீடு செய்யவும். தவறாக இருந்தால் பணம் திருப்பியளிக்கப்பட மாட்டாது.
- விண்ணப்பத்துடன் சமர்பிக்க விரும்பும் ஆவணத்தை தேர்வு செய்யுங்கள். E-KYC கிளிக் செய்து தகவல்களை உள்ளீடு செய்து ‘ Proceed’ ஐ கிளிக் செய்யவும்.
- இப்போது கட்டணங்களை(ஆன்லைன் கட்டணமும் சேர்த்து) காண இயலும். பான்கார்டு திருத்தம் அல்லது மறுபதிப்பு செய்ய இந்தியர்களுக்கு ரூ120 ம், வெளிநாடுகளில் வசிப்பவர்களுக்கு ரூ.1040 ம் கட்டணம். ‘Pay confirm’ ஐ கிளிக் செய்யவும்.
- பேமெண்ட் தகவல்களை அளித்து செயல்முறையை முடிக்கவும். பணபரிவர்த்தனை முடிந்தபின் வங்கி அடையாள எண் மற்றும் பரிவர்த்தனை எண் வழங்கப்படும். பின்னர் ‘ continue’ கிளிக் செய்யவும்.
- பின்னர் ஆதார் மூலம் சரிபார்க்க வேண்டும். ஆதார் எண்ணுக்கு கீழே உள்ள பெட்டியை டிக் செய்து ‘ Authenticate’ என்பதை கிளிக் செய்யவும்.
- ஆதாரில் உள்ள தகவல்கள் உங்கள் தகவலுடன் ஒத்துப்போனால் ‘ Continue with e-sign / e-KYC ‘ ஐ கிளிக் செய்யலாம்.
- செக் பாக்ஸ் ஐ டிக் செய்து ‘ Generate OTP’ கிளிக் செய்யவும்.
- பின்னர் OTP யை உள்ளீடு ‘Submit’ ஐ கிளிக் செய்யவும்.
- உடனே சமர்பித்த விண்ணப்பம் உள்ள பக்கத்திற்கு செல்லும். இதை PDF வடிவில் மாற்றி பதிவிறக்கம் செய்து சேமித்துக்கொள்ளவும்.
மின்னஞ்சல் வழியாகவும் ஒப்புகை கிடைக்கும். இந்த செயல்முறை மூலம் ஃபான் கார்டில் திருத்தம் அல்லது மறுபதிப்பு செய்யலாம். விண்ணப்பம் பரிசீலக்கப்பட்ட பின்னர் பான்கார்டு பிரிண்ட் செய்யப்பட்டு உங்கள் முகவரிக்கு அனுப்பப்படும்.