இந்தியர்கள்அனைவருக்கும் எட்டாக்கனியாக இருந்த இணையதள சேவையை சாமானியருக்கும் கொண்டு சென்று சேர்த்த பெருமை ஜியோ நிறுவனத்தையே சேரும். இந்த நிறுவனம் தனது அதிரடி சலுகைகளை வழங்கியதன் விளைவாக அனைத்து நிறுவனங்களும் தங்களது அதிகப்படியான விலையிலிருந்து இறங்கி சாமனியரும் பயன்படுத்தும் வகையில் குறைத்தனர்.இதற்க்கு முக்கிய காரணம் ஜியோ நிறுவனமாகும். இந்த ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் டிசம்பர் 31, 2018 வரையிலான மூன்றாவது காலாண்டு வருவாய் அறிக்கை தற்போது வெளியாகியுள்ளது. அதன் படி இந்த காலாண்டில் ஜியோவின் மொத்த […]
தற்போது மின்னல் வேகத்தில் வளர்ந்து வரும் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப 4ஜி தொடங்கி தற்போது 5ஜி என தனது எல்லையை பரப்பிக்கொண்டுவரும் இந்த சுழலில் இசட்.டி.இ. கார்ப்பரேஷன் மற்றும் சீனா யுனிகாம் நிறுவனங்கள் இணைந்து உலகின் முதல் 5ஜி வாய்ஸ் கால் மேற்கொண்டதாக அறிவித்துள்ளன. இதற்கு இசட்.டி.இ. உருவாக்கிய 5ஜி ப்ரோடோடைப் ஸ்மார்ட்போன் பயன்படுத்தப்பட்டது. ஷென்சென் 5ஜி சோதனை மையத்தில் உலகின் முதல் 5ஜி வாய்ஸ் கால் வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டுள்ளது.இந்த சோதனை முயற்சியில் வாய்ஸ் கால் மட்டுமின்றி […]
இந்தியஅசு பொதுத்துறை நிறுவனமான பாரத் சஞ்சார் நிகம் லிமிட்டெட் எனும் பி.எஸ்.என்.எல். நிறுவன பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டு வந்த ரூ.399 சலுகை தற்போது மாற்றப்பட்டுள்ளது. அதன்படி ரூ.399 சலுகையில் பயனர்களுக்கு தினமும் 3.21 ஜி.பி. டேட்டா வழங்கப்படுகிறது.முன்னதாக கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் பி.எஸ்.என்.எல். நிறுவனம் ரூ.399 விலை சலுகையை அறிவித்தது. இச்சலுகையில் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், இலவச பிரத்யேக ரிங் பேக் டோன் உள்ளிட்டவை 74 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்குகிறது. இதன்படி பயனர்களுக்கு மொத்தம் […]
ஸ்மார்ட் போன் உற்பத்தியில் சிறப்பாக செயல்படும் மோட்டோரோலா நிறுவனத்தின் பிரபல மொபைல்களில் ஒன்றாக இருந்த ரேசர்போன் தற்போது மீண்டும் விற்பனைக்கு வரயிருக்கிறது.இந்த ரக மடிக்கக்கூடிய மோட்டோ மொபைல் போன் முதற்கட்டமாக அமெரிக்காவில் விற்பனைக்கு வரும் என்றும் அடுத்த மாதம் விற்பனை துவங்கும் என வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வெளியிட்டிருக்கும் தகவல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனின் விலை $1600 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.1,12,000) வரை நிர்ணயம் செய்யப்பட்டிருக்கும் நிலையில், புதிய ரேசர் போனின் விலை 1500 டாலர்கள் (இந்திய […]
இந்த நவீன காலத்திற்கு ஏற்ற வகையில் தொழில்நுட்பம் தினம்தினம் வளர்ச்சி அடைந்து வரும் நிலையில் அதிலும் குறிப்பாக ஸ்மார்ட் போனின் வருகையும் அதிகரித்துள்ளது.இதில் ஒன்றாக ஹுவாயின் ஹானர் பிராண்டு இந்தியாவில் ஹானர் 10 லைட் ஸ்மார்ட்போனினை தற்போது அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய ஹானர் 10 லைட் ரக ஸ்மார்ட்போனில் 6.21 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் வாட்டர் டிராப் நாட்ச் டிஸ்ப்ளே, கிரின் 710 பிராசஸர், அதிகபட்சம் 6 ஜி.பி. ரேம், ஆண்ட்ராய்டு 9.0 பை […]
கொரியாவை தலைமை இடமாக செயல்படும் சாம்சங் நிறுவனம் இந்தியாவில் தனது கேலக்ஸி எம் சீரிஸ் ஸ்மார்ட்போன்களை வரும் ஜனவரி 28 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.இதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட விழாவில் சாம்சங் கேலக்ஸி எம்10, கேலக்ஸி எம்20 மற்றும் கேலக்ஸி எம்30 உள்ளிட்ட ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய இருக்கிறது.இந்நிலையில், கேலக்ஸி எம் சீரிஸ் ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளது. இதன் படி கேலக்ஸி எம்10 ஸ்மார்ட்போனில் 6.2 இன்ச் ஹெச்.டி., பிளஸ் 720×1520 பிக்சல் […]
தொழில்நுட்ப வளர்ச்சி விண்ணை முட்டும் அளவிற்கு வளர்ந்துள்ள இந்த நாகரீக உலகில் சமூக வலைத்தளங்களை தவறாக பயன்படுத்துவதை தடுக்கும் வகையில் தகவல் தொழில்நுட்ப சட்ட விதிகளில் தகுந்த திருத்தங்களை மேற்கொள்ள மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சமூக வலைதளங்களில் இனம் மற்றும் மதம் தொடர்பில் சமூக வலைத்தளங்களில் வெளியிடப்படும் தகவல்களின் காரணமாகவே பெரும்பாலான வன்முறை சம்பவங்கள் தோற்றம் பெறுகின்றன. ஆகையால் அவற்றை தடுக்கும் நோக்குடனே சட்ட விதிகளில் தகுந்த திருத்தங்களை மேற்கொள்ள தீர்மானித்துள்ளதாக […]
நிலவில் தாவரம் முளைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சீனா அனுப்பிய CHANGE – 4 விண்கலம் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தியுள்ளது. வரலாற்றில் நிகழ்ந்த அதிசய நிகழ்வாக, நிலவில் தாவரம் முளைத்துள்ளது. இந்நிலையில், இதுவரை அறியப்படாத நிலவின் தொலைதூர பகுதியில் ஜனவரி 3 ஆம் தேதி பத்திரமாக தரை இறங்கியதே இதன் முதல் சாதனையாக கருதப்படுகிறது. இதனையடுத்து இந்த விண்கலத்தில் எடுத்துச் செல்லப்பட்ட ஆய்வு சாதனங்களில் மண், பருத்தி விதைகள், உருளைக்கிழங்கு விதைகள், யீஸ்ட் நுண்ணுயிர்கள் உள்ளிட்டவை இருந்தன. இந்நிலையில், […]
மிகவும் மெல்லிய எடை குறைவான மெல்லிய ஐபேட் என்று விளம்பரப்படுத்தப்பட்டுள்ள முன்னனி நிறுவனமான ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐபேட் ப்ரோ, மெலிதாக இருந்தாலும் மிக எளிதில் உடையக்கூடிய தன்மை இருப்பது தற்போது தெரியவந்துள்ளது.இந்த ஐ பேடு பார்க்க கவர்ச்சியாக இருக்கும் வகையில் இந்த கருவியை உருவாக்கிய ஆப்பிள் நிறுவனம், அதன் வலிமையைக் கவனிக்காமல் விட்டுவிட்டது. பிரபல யூடியூப் பதிவர் ஜெர்ரி ரிக் எவ்ரிதிங் என்பவர், புதிய ஐபேட் ப்ரோ எவ்வளவு எளிதில் உடைகிறது, சிராய்ப்புகள் ஏற்படுகிறது,அதன் தன்மைகளை […]
இந்தியாவில் வளர்ந்துவரும்,தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக தொழில்நுட்ப சாதனங்களின் பயண்பாடு நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது.இந்நிலையில் இந்தியாவில் மிகவும் எதிர்பார்கப்பட்ட எம்.ஐ நிறுவனத்தின் தொலைக்காட்சி வகைகள் தற்போது இந்தியாவில் விற்பனைக்கு தயாராகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் தற்போது எம்.ஐ டிவி 4X ப்ரோ 55 இன்ச் மற்றும் எம்.ஐ டிவி 4A ப்ரோ 43 இன்ச் ஆகிய ரகங்கள் இந்தியச் சந்தைகளில் தற்போது விற்கப்பட உள்ளன.இந்த சீன நிறுவனமான எம்.ஐ-யின் தயாரிப்புகளுக்கு இந்திய மக்களிடையே நல்ல வரவேற்பு […]
உலக உயிர்கள் அனைத்திற்க்கும் முதன்மையானதும்,முக்கியமானதுமான சூரியன் படிப்படியாக இறந்து கொண்டு வருகிறது என அதிர்ச்சி தகவலை தற்போது ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.சூரியன் ஒரு நடுவயதுடைய நட்சத்திரம். இந்த சூரியனில் அணுக்கரு இணைவு என்னும் இரு ஹைட்ரஜன் அணுக்கள் இணைந்து,ஒவ்வொரு நொடியும் தொடர்ந்து ஒளி ஆற்றல்,வெப்ப ஆற்றல்,கதிரியக்க ஆற்றல் என வெளியிட்டுக்கொண்டே இருக்கிறது.இந்த வினையானது சூரியனில் உள்ள ஹைட்ரஜன் இருக்கும் வரை மட்டுமே நிகழும்,இந்நிலையில்,சூரியன் இறக்கும் நிலையில் நமது பூமிக்குரிய சூரியன் திடநிலை படிகமாக மாறிவருவதாக விஞ்ஞானிகள் அதிர்ச்சி தகவலை […]
சர்வதேச சந்தையில் மக்களிடம் ஏற்பட்ட அலைபேசி மோகத்தால் நல்ல முன்னேற்றமும்,விற்பனையும் என கலைகட்டி வந்த ஆப்பிள் ஐ போன் மோகம் தற்போது குறைந்துவருகிறது.இதன் தொடர்ச்சியாக சர்வதேச சந்தைகளில் விற்பனை குறைவு மற்றும் மக்களிடையே சாதனங்களுக்கான மோகம் குறைந்திருப்பதால் ஐபோன்களின் விலையை அதிரடியாக குறைக்க ஆப்பிள் நிறுவனம் முடிவெடுத்துள்ளது.அதன்படி,உலகின் மிகப்பெரிய சந்தையான சீனாவில் முதலில், ஐபோன் XR, ஐபோன் XS, ஐபோன் XS MAX, ஐபோன் 8 மற்றும் ஐபோன் 8+ உள்ளிட்ட மாடல்களின் விலையை குறைப்பதாக ஆப்பிள் […]
சுற்றுலா பயணிகளுக்கு வழி சொல்வதற்காக டோக்கியோவில் ரோபோ ஒன்றை வைத்துள்ளனர். சுற்றுலா பயணிகளுக்கு வழி சொல்வதற்காக டோக்கியோவில் ரோபோ ஒன்று பணியமர்த்தப்பட்டுள்ளது. அங்கு மக்கள் தொகை குறைவாக இருப்பதால் பல்வேறு வேலைகளை செய்வதற்கு ஆள் பற்றாக்குறையாக காணப்படுகிறது. இதனால் தான் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
ஹவாய் நிறுவனம் தற்போது புதிதாக புத்தாண்டிற்கு ஒரு மாடலை பட்ஜெட் விலையில் களமிறக்கி உள்ளது.ஆனால் இந்த மாடலை தற்போது பாகிஸ்தானில் தான் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இன்னும் இந்தியாவுக்கு விற்பனைக்கு வரவில்லை. இதன் டிஸ்பிளே அளவு 18:9 கொண்டதாக உள்ளது. இந்த கேமிரா அமைப்பு 8 மெகா பிக்சல் ஆகவும், 1ஜிபி ரேம் திறனுடன் வெளியாகியுளளது. ஆண்ட்ராயிடு 8.1 ஓரியோ வெர்ஷனுடன் இந்த மாடல் வெளியாகியுள்ளது. வாடிக்கையாளர்கள் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு 9 லையிட் அப்டேட் கிடைக்கும் என […]
கூகுள் ப்ளே ஸ்டோரில் பயணர்களுக்கு தேவையான பல விதமான ஆப்கள் கிடைக்கும். பல விதமான விளையாட்டுகள், கற்றல் ஆப்கள், வீடியோக்களுக்காக, பொழுதுபோக்கிற்காக என பல விதமாக ப்ளே ஸ்டோர் ஆப்களை தருகிறது. இந்த பயணர்களுக்கு பரிசு வழங்கும் படி புதிய ஆஃபரை கூகுள் அறிவித்துள்ளது. இதன்படி, அதிகமான ஆப்களை பயன்படுத்தும் குறிப்பிட்ட கூகுள் தேர்வு செய்த பயணர்களுக்கு மட்டும் ப்ளே ஸ்டோரில் மஞ்சள் நிற பட்டையுடன் ஒரு கூப்பன் இருக்கும் அந்த கூப்பனை, ப்ளே ஸடோரில் ஒரு […]
சீனாவை சேர்ந்த முன்னனி போன் நிறுவனமான ஜியோனி நிறுவனமானது, 2013ஆம் ஆண்டு முதல் பெரும் சரிவை சந்தித்து வருகிறது. கடந்த டிசம்பர் முதல் முதல் இந்தாண்டு ஆகஸ்ட் வரை அதன் கடன் நிலுவை தொகை மட்டுமே, 20,300 கோடியாக உயர்ந்துள்ளது. இந்த நிறுவனம் சூதாட்டத்தில் பெரும் பணத்தை இழந்தது என கூறப்பட்டு வருகிறது. இந்த கடன் தொகை மற்றும் சூதாட்ட புகார் பற்றி, அதன் தலைவர் கூறுகையில் , ஜியோனி நிறுவனம் அதிகமான கடன் பெற்றிருப்பது உண்மைதான். […]
ஸ்மார்ட் போன் தயாரிப்பில் இருக்கும் நிறுவனமான கூல்பேட் நிறுவனம் தற்போது புதிய மூன்று மாடல்களை களமிறங்கியுள்ளது. அந்த மாடல்கள், கூல்பேட் மெகா 5, கூல்பேட் மெகா 5சி, கூல்பேட் மெகா 5எம் என புதிய மாடல்களை ஸ்மார்ட் போன் சந்தையில் களமிறங்கியுள்ளது. கூல்பேட் மெகா 5 மாடலானது, 6,999/- ருபாய் எனவும், கூல்பேட் மெகா 5சி மாடல் 4,499 ருபாய் எனவும், கூல்பேட் மெகா 5எம் 3,999/- ருபாய் எனவும் விலைகள் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கூல்பேட் மெகா […]
இந்தியாவில் 5ஜி சேவைக்கான சோதனையை செய்ய தற்போது சீன நிறுவனமான ஹவாய் நிறுவனத்திற்கு இந்திய தோலை தொடர்பு துறை அனுமதியளித்துள்ளது. இந்நிலையில் இந்த ஹவாய் நிறுவனம் சீன ராணுவத்துடன் மிகவும் நெருங்கிய தொடர்பு வைத்துள்ள நிறுவனம் என்ற தகவல்கள் வெளியாகி தற்போது பலருக்கும் அதிர்ச்சியை அளித்துள்ளது. எற்கனவே நோக்கியா, எரிக்சன் , சாம்சங் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு இந்தியாவில் 5ஜி சேவையை நிறுவ சோதனை முயற்சிக்கு அனுமதி அளிக்கப்பட்டது. அப்போதே ஹவாய் நிறுவனத்திற்கு சோதனைகான அனுமதி மறுக்கப்பட்டது. இதற்கு […]
இந்தியாவில் ஜியோ நெட்வொர்க்கின் ஆதிக்கம் தொடங்கிய பிறகு எம்என்பி மூலம் மற்ற நெட்வொர்க்கிற்கு மாறும் வழக்கம் அதிகமாகி வருகிறது. இதனால் மற்ற நெட்வொர்க்கின் லாபம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் ஏர்டெல், வோடபோன், ஐடியா போன்ற முக்கிய நெட்வொர்க் நிறுவனங்கள் மாதம் குறைந்தபட்சம் தொகையை ரீசார்ச் செய்யாத வாடிக்கையாளர்களின் இன்கம்மிங்கை கட் செய்யும் முடிவில் இருந்தது. இதனை எதிர்த்து பல வழக்குகள் போடப்பட்டது. இதனால் பல அதிரடி உத்தரவுகளை ட்ராய் கூறி வருகிறது. இதில் முக்கிமானது, குறைந்தபட்ச ரீசார்ச் […]
உலக மக்கள் தொகையில் இரண்டாம் இடத்தில் நம்நாடு உள்ளது. ஆதலால் ஸ்மார்ட் போன் பயன்படுத்துவோர்களின் எண்ணிக்கையும் இந்தியாவில் அதிமாக உள்ளது. அதில் இன்டெர்நெட், வீடியோ, கேம்ஸ் என பல விதமாக நேரத்தை ஸ்மார்ட் போன்களில் செலவிடுகின்றனர். இதனை குறித்து உலகளவில் ஓர் ஆய்வு நணத்தப்பட்டது. அதில் பப்ஜி போன்ற வீடியோ கேம்களை விளையாடுவோரின் எண்ணிக்கையையும் நேரத்தையும் கணக்கிட்டது. அதில் இந்தியாவில் ஸ்மார்ட் போன் கேம் விளையாடுவதில் இந்தியர்கள் சராசரியாக 1 மணிநேரம் செலவிடுகின்றனர். அதேபோல யூ-டியுப், நெட்ப்ளிக்ஸ் […]