அட்டகாசமான சலுகைகளை வாரி வழங்குவதில் தற்போது ஜியோ தான் முதல் இடத்தில் உள்ளது. இதனால் மற்ற நிறுவனங்கள் திவால் ஆகும் நிலைக்கே தள்ளப்பட்டு விட்டது. சமீப காலமாக மற்ற தொலை தொடர்பு நிறுவனங்களை காட்டிலும் ஜியோ அதிரடியான சலுகைகளை வழங்கி வருகிறது. இது வாடிக்கையாளர்களை கவரும் விதத்தில் இருப்பதால் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு ஜியோ-வின் வாடிகையாளர்கள் கூறுவார்கள் என்று எதிர் பார்க்கப்படுகிறது. இந்நிலையில் 15000 கோடி ரூபாய் சென்ற நிதி ஆண்டில் நஷ்டம் அடைந்துள்ளதாக […]
முகநூலில் கணக்கு வைத்திருப்போர் பலரும் அவர்களுக்கென்று ஒரிஜினல் ஐ.டி வைத்திருக்கிறார்களோ இல்லையோ, பல போலி ஐ.டி-களுடனே சுற்றுகின்றனர். இதை முடிந்தளவு முகநூல் நிறுவனம் கண்காணித்து தான் வருகிறது. என்றாலும், இதையும் மீறி பலக்கோடி போலி கணக்குகள் தவறான முறையில் இதனை பயன்படுத்தி வருகின்றனர். இதில் முக்கிய இடத்தில் இருப்பது பெண்களை ஏமாற்றி ஆபாசமான படங்களை அவர்களை வற்புறுத்தியோ அல்லது அவர்களுக்கே தெரியாமல் எடுப்பது தான். இந்த நிலை நீண்ட காலமாக நடந்து வருகிறது தான். என்றாலும், இது […]
தொழிற்நுட்ப வளர்ச்சிக்கு எல்லை இல்லை என்பது நிதர்சனம் தான். என்றாலும் இதன் தாக்கம் மக்களை நல்ல முறையில் சென்றடைந்தால் அதில் தவறில்லை. ஆனால், அதுவே மிக மோசமான முறையில் சென்றடைந்தால் அதை நாம் கவனமாக கையாள வேண்டுவது அவசியம். இதே நிலை தான் தற்போது ஏற்பட்டு உள்ளது. மிக சிறிய அளவிலான கேமராக்களை கொண்டு பெண்களை தவறான முறையில் ஆபாசமான படங்களை எடுத்து, அதனை வைத்து அவர்களது வாழ்க்கையோடு சிலர் விளையாடி வருகின்றனர். இப்படிப்பட்ட ஸ்பை கேமராக்களிடம் […]
இந்த ஆண்டு ஸ்மார்ட் போன்களுக்கு பஞ்சமில்லை என்றே கூறலாம். திரும்பும் பக்கமெல்லாம் ஓர் ஸ்மார்ட் போனை காட்டி நம்மை மயக்கும் அளவிற்கு ஸ்மார்ட் போன் உலகம் மாறியுள்ளது. ஸ்மார்ட் போனில் எல்லாவித வசதியும் இருந்தால் மட்டுமே நாம் அதை விரும்பி வாங்குவோம். குறிப்பாக ட்ரெண்டுக்கு ஏற்றது போல, அதிக ஸ்டோரேஜ், அதிக RAM, அதிக நேரம் பேட்டரி நீடிப்பு இப்படி பல அம்சங்களும் பக்காவாக இருந்தால் மட்டுமே நாம் அந்த மொபைலை வாங்குவோம். இப்படிப்பட்ட ஒரு புது […]
ஒரு சிறிய செய்தியை உடனே பரவ செய்ய சமூக ஊடகங்கள் முக்கிய இடத்தில் உள்ளது. அதிலும் “சுருங்க சொல்லி விளங்க வைக்கும்” அமைப்புடன் கூடிய ட்விட்டர் தான் பலரையும் கவர்ந்து வருகிறது. இப்போதெல்லாம் ட்விட்டரில் போடும் ட்வீட்டுகள் தான் அதி பயங்கரமாக மக்களிடம் கொண்டு சேர்கின்றன. இதற்காகவே இது மிகவும் பிரபலமாக உள்ளது. ஏற்கனவே பல சிறப்பம்சங்களை இது கொண்டிருந்தாலும், மேலும் சில சிறப்பம்சங்களை இதில் சேர்த்து உள்ளதாக ட்விட்டர் நிறுவனம் கூறியுள்ளது. சிறப்பம்சம் #1 முன்பெல்லாம் […]
நேரத்தை போக்க வேண்டும் என்றால் நிச்சயம் ஏதோ ஒரு படமோ, அல்லது சீரியசோ பார்ப்பது இப்போது ட்ரெண்டாக மாறி விட்டது. இதுவும் இல்லையெனில் யூ-டியூப்பில் ஏதேனும் ஒரு வீடியோவை பார்த்து விட்டு காலத்தை போக்குவோரும் உண்டு. இப்படி பலவித மக்கள் உள்ளனர். ஆனால், எதுவாக இருந்தாலும் ஒரு விதிமுறை உள்ளது அல்லவா! யூ-டியூப்பில் விதிமுறைகளை மீறி சில விஷயங்களை நாம் செய்தால் உடனே யூ-டியூப் அதிரடி முடிவுகளை எடுக்குமாம். யூ-டியூப் சேனல் முன்பெல்லாம் யூ-டியூப் என்பதே பார்ப்பதற்கு […]
எங்கு சென்றாலும் எதையாவது போட்டோ எடுக்கும் பழக்கம்(நோய்) நமக்கு பரவி உள்ளது. தற்போதைய இளைய தலைமுறையினர் இதற்கு பெரிதும் அடிமையாகி உள்ளனர். நல்ல ஸ்மார்ட் போன் வைத்திருப்போர் சுலபமாக நல்ல புகைப்படத்தை எடுத்து முகநூல், வாட்சப் போன்றவற்றில் பதிவாக வெளியிடுவார்கள். ஆனால், என்னை போன்று மொக்கை போன் வைத்திருப்போருக்கு “ஷேரிங்” தான் ஒரே வழி. நம் நண்பரின் போனில் எடுத்த புகைப்படத்தை அப்படியே நமது போனிற்கு ஷேர் செய்து கொள்வோம். ஆனால், இதன் தரம் நிச்சயம் குறைந்திருக்கும். […]
2k கிட்ஸ் பத்தியும் 90’s கிட்ஸ் பத்தியும் நாம பல்வேறு மீம்ஸ்களை பார்த்திருப்போம். எல்லா மீம்களும் வயிறு குலுங்க சிரிக்கும் அளவுக்கே இருக்கும். எவ்ளோ மீம்ஸ் வந்தாலும், சில சமயங்களில் 2k கிட்ஸ் 90’s கிட்ஸை விட பலவித கலாசார மாற்றங்களோடு வாழ்கிறார்கள் என்றே கூறலாம். இது கலாசாரத்தில் மட்டும் கிடையாது. தொழிற்நுட்பம், உணவு முறை, பழக்க வழக்கங்கள் போன்ற பலவற்றை கூறலாம். தற்போது 2k கிட்ஸ் சந்தோஷமாக தங்களது வாழ்வை தொடங்க முகநூல் நிறுவனம் ஒரு […]
நமது நினைவுகளை சேமித்து வைப்பதற்கு முன்பெல்லாம் போட்டோ ஆல்பம் போன்றவை இருந்தன. ஆனால், தற்போதைய கால சூழலில் அதையெல்லாம் பெரிய அளவில் யாரும் விரும்புவதில்லை. மாறாக அவற்றை சில தொழிற்நுட்பங்களை பயன்படுத்தி ஸ்டோர் செய்து வைத்து கொண்டு அவ்வப்போது பார்த்து மகிழ்கின்றனர். இதற்கு முக்கிய காரணமாக இருப்பவை பென்டிரைவ், SD கார்ட் போன்றவை தான். கணினி போன்றவற்றில் சேமிக்கும் போது சில நேரங்களில் இந்த வகையான தகவல்கள் வைரஸ், ஓ.எஸ் பாதிப்பு ஆகிய காரணங்களால் தகவல்கள் அழித்து […]
கால மாற்றத்திற்கு ஏற்ப எல்லாவித தொழிற்நுட்பமும் மாற்றம் பெற்று வருகின்றன. ஆனால், சில சமயங்களில் இது போன்ற தொழிற்நுட்ப மாற்றங்கள் பல தவறான முன் உதாரணமாக அமைந்து விடுகின்றன. அந்த வகையில் தான் தற்போது கூகுள் செய்த தவறும் உள்ளது. கூகுள் சர்ச்சில் பலவித குளறுபடிகள் உள்ளது என்பதை நாமே அறிந்து கொள்ள இயலும். அந்த வகையில் தான் சமீபத்தில் ஒரு சர்ச்சையும் ஏற்பட்டுள்ளது. தவறான சேர்ச் கூகுள் தேடுபொறியில் ‘bad chief minister’ என தேடினால் […]
ஸ்மார்ட் போன் எவ்வளவு தான் ஸ்மார்ட்டாக இருந்தாலும் அதிக நேரம் சார்ஜ் நிற்கவில்லை என்றால் அந்த போன் இருந்தும் இல்லாததற்கு சமம் தான். பலவித ஸ்மார்ட் போன்கள் தினமும் சந்தையில் வந்து குவிந்தாலும் ஒரு சில ஸ்மார்ட் போன்கள் மட்டுமே நீண்ட நேரம் சார்ஜ் நிற்க கூடியதாக இருக்கும். அந்த வகையில் தற்போது ஒரு நிறுவனம் ஒரு புதுவித ஸ்மார்ட் போனை அறிமுகம் செய்துள்ளது. இதன் சிறப்பம்சத்தை கேட்டால் நீங்களே வாயை பிளப்பீர்கள் மக்களே! பெயர் என்ன? […]
உலகம் முழுக்க எப்படி குப்பை கொட்டி கிடக்கிறதோ அதே போன்று தான் இன்றைய நிலையில் தொழிற்நுட்ப குப்பையும் அதிக அளவில் சேர ஆரம்பித்துள்ளது. எண்ணற்ற ஸ்மார்ட் போன்கள், எக்கசக்க செயலிகள், ஏராளமான படைப்புகள் இப்படி பலவித வகையில் தொழிற்நுட்ப வளர்ச்சி சீறி பாய்ந்துள்ளது. எவ்வளவு தான் வளர்ச்சி இருந்தாலும் எல்லாவற்றிலும் ஒரு சில போலிகள் இருக்கத்தானே செய்யும். இப்படிப்பட்ட போலிகள் நமது அந்தரங்க தகவல்களை சேகரித்து அதை வியாபாரமாக மாற்றி விடுகின்றன. அப்படித்தான் சமீபத்தில் சில செயலிகளும் […]
தொழிற்நுட்ப வளர்ச்சி கிடுகிடுவென ஏறினாலும் அதன் பாதிப்பு ஏதோ ஒரு வகையில் ஒரு சாராரை பாதிப்பதுண்டு. பல நேரங்களில் ஒட்டு மொத்த மக்களையும் இது ஆபத்தான நிலைக்கு தள்ளுகின்றது. இதில் சமூக ஊடகங்கள் தான் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. இதன் பங்கு மிக முக்கியமானது தான். என்றாலும், இதனால் ஏற்பட கூடிய மோசமான தாக்கங்களும் இதில் அடங்கும். இதில் YouTube மட்டும் விதிவிலக்கல்ல. பொதுவாகவே YouTube-யில் ஆபாசமான வீடியோக்களை அந்நிறுவனம் தடை செய்துள்ளது. இதை மீறியும் […]
மற்ற மாநிலங்களை விட எப்போதுமே கேரளா ஒரு படி மேலே உள்ளது என்பது நாம் நன்கு அறிந்த ஒன்று தான். இதை மீண்டும் மெய்ப்பிக்கும் வகையில் கேரளா அரசு ஒரு புதுவித முயற்சியை செய்துள்ளது. அதுவும் அறிவியலின் உதவியோடு இம்முறை களம் இறங்கியுள்ளது. தொழிற்நுட்பத்தை சரியான முறையில் ரோபோ வடிவில் இவர்கள் பயன்படுத்தி இருப்பதே இதன் தனி சிறப்பு என்றே சொல்லலாம். பெண் போலீஸ் ரோபோ! ஆணும் பெண்ணும் சரி சமம் என்பதை இயந்திரத்தில் கேரளா அரசு […]
சமீப காலமாக எல்லா வகையான நெட்வெர்க்குகளும் பல்வேறு ஆஃபர்களை வாரி வழங்கி வருகின்றன. இதில் குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால் தற்போது ஜியோ, பி.எஸ்.என்.எல், வோடபோன் போன்றவற்றை கூறலாம். பலவித ஆஃபர்கள் இருந்தாலும் மக்களுக்கு அதிகம் பயன்பாடாக உள்ள ஆஃபரை தான் தேர்ந்தெடுப்பார்கள். இப்படிப்பட்ட ஆஃபரை தான் தற்போது BSNL வழங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. என்ன ஆஃபர்? கடந்த சில வாரங்களாக ஆஃபர் மழையை BSNL வழங்கி வருகிறது. குறிப்பாக 4ஜி சேவை, அதிக டேட்டா […]
பல்வேறு ஸ்மார்ட் போன்கள் மலை மலையாக வந்து குவிந்தாலும் அவற்றில் மிக சில மட்டுமே மக்களுக்கு பிடித்ததாக இருக்கும். பெரும்பாலும் அதிக ஸ்டோரேஜ், அதிக செயல்திறன், சிறப்பான ஸ்க்ரீன், சிறந்த வடிவமைப்பு போன்றவை இருந்தால் தான் அதனை மக்கள் விரும்புவார்கள். மிக முக்கியமாக அதன் விலையும் மலிவாக இருத்தல் வேண்டும். இப்படி எல்லா வசதிகளுடன் சிலபல புதுமைகளும் சேர்ந்திருக்க வேண்டும். அப்படிப்பட்ட ஒரு அட்டகாசமான மொபைலை தான் ஹூவாய் நிறுவனம் தற்போது அறிமுகம் செய்ய உள்ளது. பெயர்? […]
பலவித ஆன்லைன் விளையாட்டுகள் மலை மலையாக பிளே ஸ்டோரில் குவிந்து கிடக்கின்றன. சில கேம்கள் மட்டுமே இதில் மிகவும் பிரபலமாகி வருகிறது. ஆனால், இவற்றில் பல கேம்கள் எதற்கு இருக்கிறது என்பதே தெரியவில்லை. எவ்வளவு கேம்கள் இருந்தாலும் புதுமையாகவும், வித்தியாசமாகவும் இருந்தால் மட்டுமே அதனை மக்கள் விரும்புவார்கள். அப்படிப்பட்ட கேம்கள் தான் நீண்ட நாட்கள் மக்கள் மத்தியில் பேசப்படவும் செய்யும். இப்படிப்பட்ட ஒரு வித்தியாசமான கேம் தான் இந்த Tampon Run என்கிற கேம். இந்த பதிவை […]
இன்று பல சமூக வலைத்தளங்கள் இருந்தாலும் பேஸ்புக், வாட்சப் போன்றவை தான் முன்னிலையில் உள்ளது. இவற்றை முந்துவதற்கு இன்னும் சரியான செயலிகள் வரவில்லை. தினமும் காலையில் எழுந்ததும் பேஸ்புக், வாட்ஸப் முன் கண் விழிப்பவர்கள் தான் இங்கு அதிகம். இவை நமக்கு உறவின் உறவாகவே மாறிவிட்டன. இந்த உறவை இனி தொடர வேண்டுமென்றால் கட்டாயம் வரி செலுத்த வேண்டும் என ஒரு அரசாங்கம் சட்டம் கொண்டு வந்துள்ளது. இதை பற்றிய முழு விவரத்தையும் இந்த தொகுப்பில் அறியலாம். […]
எவ்வளவோ தொழிற்நுட்பங்கள் வந்தாலும், அதற்கு ஈடாகவே சில மோசமான விளைவுகளும் ஏற்படுகின்றன. உதாரணத்திற்கு நாம் எல்லா வசதிகள் கொண்ட ஸ்மார்ட் போன் வைத்திருந்தால் அதில் பலவித ஹேக்கிங் சார்ந்த விஷயங்கள் நம்மை மீறி நடந்து வருகின்றன. இது போன்ற நிலையை தவிர்க்கவே “ட்ரூ காலர்” உள்ளது. இதனை பயன்படுத்துவோரின் மொபைலில் ஏதேனும் தவறான அல்லது ஆள் தெரியாத எண்கள் வந்தால் இதில் காட்டி கொடுத்து விடும். இது மக்களும் மிகவும் உதவுவதாக அந்நிறுவனம் கூறியுள்ளது. இந்நிலையில் தற்போது […]
பலவித நிறுவனங்களும் தங்களது தொழிற்நுட்பங்களை போட்டி போட்டு கொண்டு வெளியிடுகின்றன. ஒரு நிறுவனம் சில சிறப்புகளை மட்டுமே வெளியிட்டால். வேறொரு நிறுவனம் அதை விட பல மடங்கு வசதி படைத்த தொழிற்நுட்பத்தை மிக விரைவிலே வெளியிடும். இது இப்போதெல்லாம் மிக ட்ரெண்டான விஷயமாக மாறி விட்டது. அந்த வகையில் தற்போது உலகின் முதல் பணக்காரர் லிஸ்டில் உள்ள அமேசான் நிறுவனத்தின் உரிமையாளர் பலவித புதுமையான விஷயங்களை செய்து வருகின்றார். தற்போது கூட பணம் பரிவர்த்தனை செய்ய கூடிய […]