ஆக்சிஜன் ஓஎஸ் என்பது ஆண்ட்ராய்டு அடிப்படையிலான இயங்குதளம் (OS) ஆகும். இது ஸ்மார்ட்போன் தயாரிப்பாளர்களான ஒன்பிளஸ் நிறுவனம் அவர்களின் மொபைல் போன்களுக்காக பிரத்தியேகமாக உருவாக்கிய ஓஎஸ் ஆகும். இதில் தற்போது வரை ஆக்சிஜன் ஓஎஸ் 13 உள்ளது. இந்நிலையில் புதிய ஆக்சிஜன் ஓஎஸ் 14 ஐ அறிமுகம் செய்யவுள்ளது.
அதன்படி, ஆண்ட்ராய்டு 14 அடிப்படையிலான ஆக்சிஜன் ஓஎஸ் 14 ஆனது செப்டம்பர் 25ம் தேதி அறிமுகப்படுத்த உள்ளது. இதுவரை அறிமுகமான ஓஎஸ்கள் ஆண்ட்ராய்டு 13 ஐ அடிப்படையாகக் கொண்டது. ஆனால், ஆக்சிஜன் ஓஎஸ் 14 ஆனது ஆண்ட்ராய்டு 14 ஐ அடிப்படையாகக் கொண்டு வெளியிடப்படும் முதல் ஓஎஸ் ஆகும்.
செப்டம்பர் 25 அன்று ஆக்சிஜன் ஓஎஸ் 14-ன் அறிமுகம் செய்யப்படவுள்ளதால், இந்த மாத இறுதிக்குள் அதன் நிலையான வெளியீடு (Stable Version) தொடங்கும் என்று எதிர்பார்க்கலாம். ஆக்ஸிஜன்ஓஎஸ் 14 ஆனது ஏற்கனவே பீட்டா பயனர்களுக்கு கிடைக்கிறது. இந்த ஆக்சிஜன் ஓஎஸ் 14-ல் தனியுரிம செயல்திறன் தளமான (Proprietary Performance Platform) “டிரினிட்டி இன்ஜின்”-ஐ அறிமுகப்படுத்துகிறது.
டிரினிட்டி எஞ்சின் ஆனது ஓஎஸ் அப்டேட்டைத் தொடர்ந்து, ஸ்மார்ட்போனின் செயல்திறன் அல்லது பேட்டரி போன்ற பொதுவான பிரச்சனைகளை நிவர்த்தி செய்யும் என ஒன்பிளஸ் தெரிவித்துள்ளது. டிரினிட்டி எஞ்சின் ஆனது சாப்ட்வேர் மற்றும் ஹார்ட்வேர் போன்றவற்றிற்கு இடையே அதிக ஒருங்கிணைப்பை ஏற்படுத்தி, ஸ்மார்ட்போனின் முழுத் திறனையும் வெளியே கொண்டுவரும்.
இந்த டிரினிட்டி என்ஜினில் சிபியு வைட்டலைசேஷன் (CPU Vitalization) ரேம் விட்டலைசேஷன் (RAM Vitalization), ரோம் விட்டலைசேஷன் (ROM Vitalization), ஹைப்பர்பூஸ்ட் (HyperBoost), ஹைப்பர்டச் (Hyper Touch) மற்றும் ஹைப்பர்ரெண்டரிங் (Hyper Rendering) உள்ளிட்ட ஆறு மேம்பட்ட தொழில்நுட்பங்களைக் கொண்டுள்ளது.
இந்த தொழில்நுட்பங்களால் கேமிங்கில் இருந்து நீண்ட நேர மொபைல் பயன்பாடு மட்டுமல்லாமல் மல்டி-டாஸ்கிங்கிலும் வேகமான மற்றும் மென்மையான அனுபவத்தை வழங்கும் என்று ஒன்பிளஸ் தெரிவித்துள்ளது. அதுமட்டுமல்லாமல் ஆக்சிஜன் ஓஎஸ் 14 யூஐ-ல் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி, கண்ட்ரோல் பேனல் ஆனது புதிய வடிவமைப்புடன் உள்ளது.
இதில் இருக்கும் மொபைல் ஐகான்களும் போல்ட் செய்யப்பட்டுள்ளது. இதன் முகப்புப்பக்கத்தில் தேடல் வசதி உள்ளது. இதனால் சீக்கிரமாக ஆப்களைத் கண்டுபிடிக்கலாம். இந்த ஆக்ஸிஜன் ஓஎஸ் 14 ஆனது முதற்கட்டமாக, ஒன்பிளஸ் 11 (OnePlus 11), ஒன்பிளஸ் நோர்ட் 3 (OnePlus Nord 3), ஒன்பிளஸ் 11 ஆர் (OnePlus 11 R) மற்றும் ஒன்பிளஸ் 10 ப்ரோ (OnePlus 10 Pro) ஆகிய ஸ்மார்ட்போன்களுக்கு மட்டும் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், வரும் சில நாட்களில் கூகுள் மற்றும் சாம்சங் தங்கள் ஸ்மார்ட்போன்களுக்கான ஆண்ட்ராய்டு 14 அப்டேட்டை வெளியிடும் என எதிர்பார்க்கலாம்.
சென்னை : வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாற வாய்ப்புள்ளதால் தமிழகத்தின் சில மாவட்டங்களில் இன்று கனமழைக்கு…
சென்னை : தமிழ்நாடு துணை முதலமைச்சரும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின், பிறந்தநாள் வரும் 27-ம்…
ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடரானது அடுத்த ஆண்டு மார்ச்-15ம் தேதி தொடங்கி, மே-25ம் தேதி நிறைவடையவுள்ளது. 2 மாதம்…
பெர்த் : இந்தியா - ஆஸ்திரேலியா இடையே நடைபெற்ற பார்டர் கவாஸ்கர் தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில், ஆஸ்திரேலிய அணியை…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக தமிழகத்தின் பல பகுதிகளில் மழை பெய்து வருகின்றது. இந்த…
சென்னை :சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான எபிசோடில் அண்ணாமலையின் பேச்சால் எமோஷனல் ஆகும் மீனா.. ரோகிணியின் புதிய திட்டம்.. உதவி…