அதிர்ச்சியில் மற்ற நிறுவனங்கள்..! டிஜிட்டல் துறையில் ஏர்டெல் – ஏஎல்டி பாலாஜி கூட்டணி…!
ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு, இந்த ஆண்டு ஜூன் மாதம் வரை ஏர்டெல் டிவி அப்ளிகேஷனில் வரும் அனைத்து உள்ளடக்கங்களும்(Contents) முழுக்க முழுக்க இலவசமாக வழங்கப்படுகின்றன. இந்த அறிவிப்பு போஸ்ட்பெய்டு மற்றும் ப்ரீபெய்டு பயணாளர்களுக்கும் பொருந்தும்.
பாலாஜி டெலிபிலிம்ஸ் நிறுவனத்தின் சொந்த துணை நிறுவனமான ஏஎல்டிபாலாஜி, பாரதி ஏர்டெல் நிறுவனத்துடனான பயனளிக்கும் கூட்டுறவு குறித்து அறிவித்தது. இதன்மூலம் ஏர்டெல் டிவி அப்ளிகேஷன் பயனர்களுக்கு ஏஎல்டி-யின் முதலீட்டில் இருந்து சிறப்பான டிஜிட்டல் உள்ளடக்கங்கள் அளிக்கப்பட உள்ளது.
இந்த கூட்டுறவின் மூலம் ஏஎல்டிபாலாஜியின் முழுமையான ஓரிஜினல் ஷோக்கள் மற்றும் வெற்றியடைந்த திரைப்படங்கள் ஆகியவற்றை இப்போது ஏர்டெல் டிவி அப்ளிகேஷனில் பார்க்கலாம்.
இதன்மூலம் ஏர்டெலின் விரைவாக வளர்ந்து வரும் பயனர் தளத்தில், ஏஎல்டிபாலாஜியின் உள்ளடக்க விநியோகத்தை மேலும் விரிவுப்படுத்த முடியும். இது குறித்து வெளியிடப்பட்ட பத்திரிக்கையாளர் அறிக்கையில், இந்தியாவின் பிரபல உள்ளடக்க பட்டியல்களில் இடம்பெறும் ஏர்டெல் டிவி, தனது உள்ளடக்கத்தை மேலும் பலப்படுத்தி உள்ளது. ஏர்டெல் டிவி அப்ளிகேஷன் மூலம் 350-க்கும் அதிகமான லைவ் டிவி சேனல்கள் மற்றும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரைபடங்கள் மற்றும் ஷோக்கள் ஆகியவற்றை வாடிக்கையாளர்கள் தேர்ந்தெடுக்கலாம்.
இந்த கூட்டுறவு குறித்து வின்ங் சிஇஓ சமீர் பாட்ரா கூறுகையில், “ஏஎல்டிபாலாஜி உடன் கூட்டுறவு அமைத்து, அவர்களின் பிரபலமான உள்ளடக்கத்தை ஏர்டெல் டிவி அப்ளிகேஷனில் கொண்டு வருவதில் மகிழ்ச்சி அடைகிறோம். இதன்மூலம் எங்கள் பயனர்களுக்கு சிறப்பான டிஜிட்டல் உள்ளடக்கங்களை பெருவாரியாக அளிக்க முடியும்.
ஏர்டெல் டிவி தொடர்ந்து தனது பயனர் தளத்தை விரிவுப்படுத்தி வரும் நிலையில், வெவ்வேறு விதமான பொழுதுபோக்கு உள்ளடக்கங்களை வரிசைப்படுத்தி, அவற்றை எங்கள் பயனர்கள் எளிதாக அணுகும் வகையில் அளிப்பதில் தொடர்ந்து கவனம் செலுத்த உள்ளோம்” என்று கூறினார்.