OPPOFindN3Series: உலக அளவில் ஒப்போவின் புதிய பைண்ட் என்3 சீரிஸ்.! எப்போ வெளியீடு தெரியுமா.?
ஒப்போ நிறுவனம் அதன் புதிய பைண்ட் என்3 சீரிஸை வெளியிடுவதில் அதிக கவனம் செலுத்தி வருகிறது. அதன்படி, பைண்ட் என்3 சீரிஸின் வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஒப்போ வெளியிட்ட தகவலின் படி, இந்த பைண்ட் என்3 சீரிஸ் சிங்கப்பூரில் அக்டோபர் 19 ஆம் தேதி மதியம் 2:30 மணியளவில் உலகளவில் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சீரிஸில் பைண்ட் என்3, பைண்ட் என்3 ஃபிளிப் என இரண்டு ஸ்மார்ட்போன்கள் உள்ளன. இதில் ஏற்கனவே பைண்ட் என்3 ஃபிளிப் ஆனது கடந்த ஆகஸ்ட் மாதம் சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. அதேபோல இன்று இந்தியாவிலும் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.
டிஸ்பிளே
பைண்ட் என்3 ஸ்மார்ட்போனில் 2268×2440 பிக்சல்கள் ரெசல்யூஷன் கொண்ட 7.82 இன்ச் (19.86 செமீ) அளவுள்ள ஓஎல்இடி மெயின் டிஸ்ப்ளே மற்றும் 2484×1116 பிக்சல்கள் ரெசல்யூஷன் கொண்ட 6.31 இன்ச் அளவுள்ள ஓஎல்இடி கவர் டிஸ்பிளேவும் உள்ளது. இந்த இரண்டு டிஸ்பிளேவும் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடையதாக இருக்கலாம்.
பைண்ட் என்3 ஃபிளிப் ஸ்மார்ட்போனில் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட 6.8 இன்ச் அமோலெட் மெயின் டிஸ்ப்ளே மற்றும் 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட 3.26 இன்ச் கவர் டிஸ்ப்ளே உள்ளது.
பிராசஸர்
இந்த ஸ்மார்ட்போனில் அட்ரினோ 740 ஜிபியு உடன் இணைக்கப்பட்ட ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 சிப்செட் ஆனதுபொறுத்தப்படலாம். ஆண்ட்ராய்டு 13-அடிப்படையிலான கலர் ஓஎஸ் 13.1-ல் இயங்குகிறது.
ப்ராக்ஸிமிட்டி சென்சார், கைரோஸ்கோப், காம்பஸ் போன்ற சென்சார்களும் இருக்கலாம். பைண்ட் என்3 ஃபிளிப் ஸ்மார்ட்போனில் மாலி-ஜி715 எம்பி 11 ஜிபியு உடன் இணைக்கப்பட்ட மீடியாடெக் டைமன்சிட்டி 9200 எஸ்ஓசி சிப்செட் ஆனது பொருத்தப்பட்டுள்ளது.
கேமரா
பைண்ட் என்3 ஸ்மார்ட்போனில் கேமராவைப் பொறுத்தவரையில் பின்புறம் 48 எம்பி மெயின் கேமரா, 48 எம்பி அல்ட்ரா-வைட் கேமரா மற்றும் 3X ஆப்டிகல் ஜூம் உடன் கூடிய 64 எம்பி டெலிஃபோட்டோ கேமரா கொண்ட டிரிபிள் ரியர் கேமரா அமைப்பு இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. செல்ஃபிக்காக 32 எம்பி அல்லது 20 எம்பி கேமரா பொறுத்தப்படலாம்.
பேட்டரி
பைண்ட் என்3 ஸ்மார்ட்போனில் நீண்ட நேர பயன்பாட்டிற்காக 4,805 mAh திறன் கொண்ட லித்தியம் பாலிமர் பேட்டரி பொறுத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனை வேகமாக சார்ஜ் செய்ய 100 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது.
ஸ்டோரேஜ் மற்றும் விலை
பைண்ட் என்3 ஆனது 12 ஜிபி ரேம், 16 ஜிபி ரேம், 24 ஜிபி ரேம் என்ற 3 வேரியண்ட்டுகளில் அறிமுகமாகலாம். ஸ்டோரேஜைப் பொறுத்தவரையில் 256 ஜிபி, 512 ஜிபி 1 டிபி என இன்டெர்னல் ஸ்டோரேஜ் இருக்கலாம்.
விலை குறித்த தகவலும் வெளியாகவில்லை என்றாலும், இது ரூ.96,990 என்ற விலைக்கு அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அக்டோபர் 19ம் தேதி வரவிருக்கும் ஒப்போ பைண்ட் என்3 ஆனது ஒன்பிளஸ் ஓபன் ஸ்மார்ட்போனை போல இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.