OPPOFindN3Flip: ஒப்போவின் புதிய ஃபிளிப்..! அக் 12-ம் தேதி அறிமுகம்.!

OPPOFindN3Flip

சமீப நாட்களாக ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் ஃபிளிப் மாடல் ஸ்மார்ட்போன்களில் அதிக கவனம் செலுத்தி வருகின்றன. அந்தவகையில், பயனர்களிடையே அதன் கேமராவிற்காகவே பிரசித்தி பெற்ற ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரான ‘ஒப்போ’ அதன் புதிய பைண்ட் என்3 ஃபிளிப் (Find N3 Flip) ஸ்மார்ட்போனை சந்தைகளில் அறிமுகப்படுத்தவுள்ளது.

இதற்கு முன்னதாக சாம்சங், மோட்டோ போன்ற நிறுவனங்கள் தங்களது ஃபிலிப் மாடல் ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தியது. அந்த ஸ்மார்ட்போன்கள் பயனர்கள் மற்றும் பல தொழில்நுட்ப ஆர்வலர்களையும் ஈர்த்தது. தற்போது, ஒப்போவும் இந்த வரிசையில் இணைந்து, மற்ற நிறுவனங்களுடன் போட்டியிடும் விதமாக இந்த ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தவுள்ளது.

அதன்படி, ஒப்போ பைண்ட் என்3 ஃபிளிப் ஸ்மார்ட்போன் வரும் அக்டோபர் 12ம் தேதி இரவு 7 மணியளவில் இந்தியாவில் அறிமுகமாகவுள்ளது. இந்த நிலையில், என்3 ஃபிலிப்பின் உறுதிப்படுத்தப்படாத விவரக்குறிப்புகள் ஒரு சில இணையதளங்களில் கசிந்துள்ளன.

டிஸ்பிளே:

பைண்ட் என்3 ஃபிளிப் ஆனது 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட 6.8 இன்ச் அளவுள்ள எஃப்எச்டி பிளஸ் அமோலெட் மெயின் டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது. அதோடு, 30 ஹெர்ட்ஸ் முதல் 30 ஹெர்ட்ஸ் வரையிலான ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட 3.26 இன்ச் அளவுள்ள அமோலெட் கவர் டிஸ்ப்ளே உள்ளது.

இந்த கவர் டிஸ்ப்ளே ஆனது கேலக்ஸி Z ஃபிளிப் 5 மற்றும் மோட்டோரோலா ரேசர் பிளஸ் ஸ்மார்ட்போன்களில் உள்ள கவர் டிஸ்பிளேவில் இருந்து சற்று வித்தியாசமானதாக இருக்கும். இதில் 40க்கும் மேற்பட்ட ஆப்ஸ், கவர் ஸ்கிரீன் விட்ஜெட்டுகள் மற்றும் பல கவர்-டிஸ்ப்ளே ஸ்டைல்களை பயன்படுத்த முடியும்.

பிராசஸர்:

மாலி-ஜி715 எம்பி 11 ஜிபியு உடன் இணைக்கப்பட்ட மீடியாடெக் டைமன்சிட்டி 9200 எஸ்ஓசி சிப்செட் ஆனது பைண்ட் என்3 ஃபிளிப் ஸ்மார்ட்போனில் பொருத்தப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு 13-அடிப்படையிலான கலர் ஓஎஸ் 13.1-ல் இயங்குகிறது. கலர் டெம்பரேச்சர் சென்சார், ஜியோமேக்னடிக் சென்சார், டூயல் ப்ராக்ஸிமிட்டி சென்சார்கள், ஹால் சென்சார், இரட்டை கைரோஸ்கோப் போன்ற சென்சார்கள் இருக்கலாம்.

கேமரா:

இந்த ஸ்மார்ட்போனில் இருக்கக்கூடிய கேமரா அமைப்பை பொருத்தவரை பின்புறத்தில் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் அம்சத்துடன் கூடிய 50 எம்பி மெயின் கேமரா, 8 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமரா மற்றும் 32 எம்பி டெலிஃபோட்டோ கேமரா கொண்ட ட்ரிபிள் ரியல் கேமரா அமைப்பு உள்ளது. முன்புறம் செல்ஃபி மற்றும் வீடியோ அழைப்புகளை செய்ய 32எம்பி கேமரா உள்ளது.

பேட்டரி:

பைண்ட் என்3 ஃபிளிப் ஸ்மார்ட்போனில் நீண்ட நேர பயன்பாட்டிற்காக 4,300 mAh திறன் கொண்ட பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இதனை வேகமாக சார்ஜ் செய்ய 44 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது. இந்த பேட்டரியை 56 நிமிடங்களில் பூஜ்ஜியத்திலிருந்து நூறு சதவீதம் வரை சார்ஜ் செய்யமுடியும்.

ஸ்டோரேஜ் மற்றும் விலை:

என்3 ஃபிளிப் ஆனது 12 ஜிபி ரேம் + 256 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ்  மற்றும் 12 ஜிபி ரேம் + 512 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் என 2 வேரியண்ட்டுகளில் அறிமுகமாகலாம். என்3 ஃபிளிப் இன் விலையை ஒப்போ இன்னும் அறிவிக்கவில்லை. இருப்பினும், இதன் விலை சுமார் ரூ.80,000-ல் இருந்து தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்