மிரட்டும் டிசைன்..12 ஜிபி ரேம்.. 50 எம்பி கேமரா.! அறிமுகமாகிறது ஒப்போ ரெனோ 11 சீரிஸ்.!

Oppo Reno 11 series

ஸ்மார்ட்போன் பயனர்களிடையே மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஒப்போவின், ரெனோ 11 சீரிஸ் ஆனது, வரும் நவம்பர் 23ம் தேதி சீனாவில் அறிமுகம் செய்யப்படவுள்ளது. இந்த சீரிஸில் ஒப்போ ரெனோ 11 மற்றும் ஒப்போ ரெனோ 11 ப்ரோ என இரண்டு மாடல்கள் அறிமுகம் ஆகின்றன. இதற்கான வெளியீட்டு தேதி நெருங்கி வருகிறது.

இந்நிலையில், ஒப்போ அதன் சீன மைக்ரோ பிளாக்கிங் தளமான வெய்போவில், கடந்த சில நாட்களாக அறிமுகம் செய்யப்படவுள்ள ஸ்மார்ட்போன்களின் கூடுதல் விவரங்களை அவ்வப்போது வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது பிராசஸர் மற்றும் கேமரா பற்றிய விவரத்தை வெளியிட்டுள்ளது.

டிஸ்பிளே

ரெனோ 11-ன் டிஸ்பிளே விவரங்கள் அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை. இதற்கு முன்னதாக அறிமுகம் செய்யப்பட்ட ரெனோ 10 சீரிஸில், 6.7 இன்ச் டிஸ்பிளே கொடுக்கப்பட்டது. எனவே இந்த மாடலிலும் பஞ்ச் ஹோல் கட்அவுட்வுடன் 6.7 இன்ச் கர்வ்டு ஓஎல்இடி டிஸ்பிளே கொடுக்கப்படலாம். இது 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷிங் ரேட் மற்றும் 1400 நிட்ஸ் பீக் பிரைட்னஸுடன் வரலாம்.

ரூ.18,000 பட்ஜெட்டில்..12ஜிபி ரேம், 512ஜிபி ஸ்டோரேஜ்.! அறிமுகமானது விவோவின் புதிய ஒய்100ஐ 5ஜி,!

பிராசஸர்

இதில் பயன்படுத்தப்படும் பிராசஸரை ஒப்போ உறுதிப்படுத்தியுள்ளது. அதன்படி, இதில் மாலி ஜிசி8 எம்சி4 கிராஃபிக்ஸ் கார்டுடன் இணைக்கப்பட்ட மீடியாடெக் டைமன்சிட்டி 8200 எஸ்ஓசி சிப்செட் பொருத்தப்பட்டுள்ளது. இதே சிப்செட் ஐக்யூ நியோ 7 மற்றும் விவோ வி29 ப்ரோ ஸ்மார்ட்போனில் உள்ளது. அதோடு ஆண்ட்ராய்டு 14 அடிப்படையிலான கலர் ஓஎஸ் உள்ளது. ரெனோ 10 ப்ரோவும் இதே மீடியாடெக் டைமன்சிட்டி 8200 எஸ்ஓசி சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது.

கேமரா

தற்போது வெளியாகியுள்ள விவரங்களின் படி, பின்புற வடிவமைப்பை வைத்துப் பார்க்கையில் ட்ரிப்பில் ரியர் கேமரா அமைப்பு உள்ளது. இதில் சோனி-எல்ஒய்டி 600 சென்சார் கொண்ட 50எம்பி மெயின் கேமரா, 8 எம்பி அல்ட்ராவைடு கேமரா மற்றும் 2x ஜூம் லென்ஸுடன் கூடிய 32 எம்பி டெலிஃபோட்டோ கேமரா ஆகியவை அடங்கும். செல்ஃபி மற்றும் வீடியோ கால் செய்வதற்காக முன்புறத்தில் 32 எம்பி கேமரா கொடுக்கப்படலாம்.

பேட்டரி

இந்த சீரிஸில் இருக்கக்கூடிய ரெனோ 11 மாடலில் 4,800 mAh திறன் கொண்ட பேட்டரி பொருத்தப்படலாம். இதை சார்ஜ் செய்ய 67 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது. அதேபோல ரெனோ 11 ப்ரோ மாடலில் 4,700 mAh திறன் கொண்ட பேட்டரி பொருத்தப்படலாம்.

இதை சார்ஜ் செய்ய 80 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது. இதில் டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், இன்-டிஸ்பிளே பிங்கர் பிரிண்ட் சென்சார், பேஸ் லாக், பிராக்ஸிமிட்டி சென்சார், கைரோஸ்கோப், அம்பியன்ட் லைட் சென்சார் போன்றவைகளும் உள்ளன.

சவுண்ட் சும்மா பிச்சிக்கும்..! அறிமுகமானது BoAt-ன் இம்மார்டல் கட்டானா பிளேடு இயர்பட்ஸ்.!

ஸ்டோரேஜ்

ஃப்ளோரைட் ப்ளூ, மூன்ஸ்டோன் ஒயிட், டர்க்கைஸ் மற்றும் அப்சிடியன் பிளாக் என நான்கு புதிய வண்ணங்களில் அறிமுகமாகவுள்ள இந்த சீரிஸ், 12 ஜிபி எல்பிடிடிஆர்5 ரேம் + 256 ஜிபி யுஎஃப்எஸ் 4.0 இன்டெர்னல் மற்றும் 12 ஜிபி ரேம் + 512 ஜிபி இன்டெர்னல் என 2 வேரியண்ட்களில் அறிமுகமாகலாம்.

நவம்பர் 23ம் தேதி காலை 11:30 மணிக்கு அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் இந்த சீரிஸுடன் இணைந்து ஒப்போ பேட் ஏர் 2 (Oppo Pad Air 2) அறிமுகம் செய்யப்படவுள்ளதகவும் கூறப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்