50 எம்பி கேமரா, 4800mAh பேட்டரி மற்றும் 80W சார்ஜிங்.! அறிமுகமானது ஒப்போ ரெனோ 11.!

OPPO Reno 11

ஸ்மார்ட்போன் பயனர்களிடையே மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஒப்போவின், ரெனோ 11 சீரிஸ் ஆனது, இன்று (நவம்பர் 23ம் தேதி) சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த சீரிஸில் ஒப்போ ரெனோ 11 மற்றும் ஒப்போ ரெனோ 11 ப்ரோ என இரண்டு மாடல்கள் அறிமுகம் ஆகியுள்ளது. இந்த ஸ்மார்ட்போன்களோடு ஒப்போ பேட் ஏர்2 என்கிற டேப்லெட்டும் அறிமுகமாகியுள்ளது.

ஒப்போ ரெனோ 11 விவரங்கள்

டிஸ்பிளே

இதில் ரெனோ 10 சீரிஸில் இருப்பது போல, 2412 × 1080 பிக்சல் ரெசல்யூஷன் கொண்ட பஞ்ச் ஹோல் கட்அவுட்வுடன் 6.7 இன்ச் ஓஎல்இடி கர்வ்டு டிஸ்பிளே கொடுக்கபட்டுள்ளது. இந்த டிஸ்பிளே 1.07 மில்லியன் நிறங்களை ஒருங்கிணைத்து காட்டுவதோடு, 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 240 ஹெர்ட்ஸ் டச் சம்ப்ளிங் ரேட்டையும் கொண்டுள்ளது. மேலும், 950 நிட்ஸ் பீக் பிரைட்னஸும் உள்ளது.

பிராசஸர்

இதில் மாலி ஜிசி8 எம்சி4 கிராஃபிக்ஸ் கார்டுடன் இணைக்கப்பட்ட, 8 கோர்களை கொண்ட மீடியாடெக் டைமன்சிட்டி 8200 எஸ்ஓசி சிப்செட் பொருத்தப்பட்டுள்ளது. இதே சிப்செட் ரெனோ 10 ப்ரோ, ஐக்யூ நியோ 7 மற்றும் விவோ வி29 ப்ரோ ஸ்மார்ட்போனில் உள்ளது. அதோடு ஆண்ட்ராய்டு 14 அடிப்படையிலான கலர் ஓஎஸ் 14.0 உள்ளது.

கேமரா

ஒப்போ ரெனோ 11 மாடலில் ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பு உள்ளது. இதில் 50 எம்பி வைட்-ஆங்கிள் மெயின் கேமரா, 32 எம்பி போர்ட்ரெய்ட் லென்ஸ் மற்றும் 2x ஹைப்ரிட் ஆப்டிகல் ஜூம், 20 x டிஜிட்டல் ஜூம் கொண்ட 8 எம்பி அல்ட்ரா-வைட்-ஆங்கிள் லென்ஸ் ஆகியவை அடங்கும்.

செல்ஃபி மற்றும் வீடியோ கால் செய்வதற்காக முன்புறத்தில் 32 எம்பி கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. இதில் ப்ரோ மோட், போர்ட்ரெய்ட், நைட் சீன், ஹை பிக்சல், பனோரமா, ஸ்லோ மோஷன், டைம்-லாப்ஸ் போட்டோ, மல்டி-வியூ வீடியோ போன்ற கேமரா அம்சங்கள் உள்ளன.

பேட்டரி

184 கிராம் எடையுள்ள இந்த போனில் 4,800 mAh திறன் கொண்ட பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இதை சார்ஜ் செய்ய யூஎஸ்பி டைப்-சி போர்ட்டுடன் கூடிய 67 வாட்ஸ் பிளாஷ் சார்ஜிங் வசதி உள்ளது.

அதோடு வைஃபை 6, புளூடூத் 5.4, டைப்-சி ஹெட்ஃபோன் ஜாக், இன்-டிஸ்பிளே பிங்கர் பிரிண்ட் சென்சார், பேஸ் லாக், ஜியோமேக்னடிக் இண்டக்டிவ், லைட் இன்டக்டிவ், ப்ராக்ஸிமிட்டி சென்சார், அண்டர் ஸ்கிரீன் லைட் சென்சார், கைரோஸ்கோப், இன்ஃப்ராரெட் ரிமோட் கண்ட்ரோல் போன்றவைகளும் உள்ளன.

ஸ்டோரேஜ் மற்றும் விலை

அப்சிடியன் பிளாக், புளோரைட் ப்ளூ மற்றும் மூன் ஸ்டோன் என மூன்று புதிய வண்ணங்களில் அறிமுகமாகியுள்ளது. ஒப்போ ரெனோ 11 மாடலில், 8 ஜிபி ரேம் + 256 ஜிபி இன்டெர்னல், 12 ஜிபி ரேம் + 256 ஜிபி இன்டெர்னல் மற்றும் 12 ஜிபி ரேம் + 512 ஜிபி இன்டெர்னல் என மூன்று வேரியண்ட்கள் உள்ளன.

இதில் 8 ஜிபி ரேம் வேரியண்ட் 2,499 யுவான் (ரூ.29,399) என்ற விலையிலும், 12 ஜிபி ரேம் வேரியண்ட் 2799 யுவான் (ரூ.33,299) என்ற விலையிலும், 512 ஜிபி இன்டெர்னல் வேரியண்ட் 2999 யுவான் (ரூ.35,299) என்ற விலையிலும் விற்பனைக்கு உள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

PahalgamTerroristAttack live
Sketches of terrorists
Terrorist Attack
j&k terror attack
trapped in Kashmir terror
Khawaja Asif
Pahalgam Terrorist Attack