பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ கேமராவுடன் இந்தியாவில் களமிறங்கும் ‘Oppo Reno 10 series’..! எப்போ தெரியுமா..?
ஓப்போ (Oppo) நிறுவனம், ரெனோ 10 சீரிஸ் (Reno 10 series) ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது.
ஓப்போ (Oppo) நிறுவனம் அதன் ரெனோ 10 சீரிஸ் (Reno 10 series) ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் விரைவில் அறிமுகம் செய்யப்போவதை உறுதி செய்துள்ளது. இந்த ரெனோ 10 சீரிஸில், ஓப்போ ரெனோ 10 (Reno 10), ரெனோ 10 ப்ரோ (Reno 10 Pro), ரெனோ 10 ப்ரோ பிளஸ் (Reno 10 Pro+) ஆகிய மூன்று ஸ்மார்ட்போன்கள் வெளியாக உள்ளன.
The countdown has begun! ⏰ Get set to capture stunning pro-class portraits with the upcoming #OPPOReno10Series.#ThePortraitExpert
Know more: https://t.co/JvgemU5EzN pic.twitter.com/6AsSMCfIdH
— OPPO India (@OPPOIndia) June 26, 2023
இந்த ஸ்மார்ட்போன் சீரிஸ் வெளியாகும் தேதி அறிவிக்கப்படவில்லை. ஆனால், ஜூலை 6ம் தேதி அல்லது ஆகஸ்ட் மாதத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விரைவில் அறிமுகமாகவுள்ள இந்த ரெனோ 10 சீரிஸின் சிறப்பம்சங்களை காணலாம்.
ஓப்போ ரெனோ 10 சீரிஸ் டிஸ்பிளே (Oppo Reno 10 series Display):
இந்த ரெனோ 10 சீரிஸில் உள்ள அனைத்து மொபைல்களும் 6.7 இன்ச் வளைந்த ஓஎல்இடி டிஸ்பிளேவுடன் 120Hz ரெபிரேசிங் ரெட் மற்றும் 1400nits உச்சகட்ட பிரகாசத்துடன் (Brightness) வருகின்றது. ரெனோ 10-ல் மட்டும் உச்சகட்ட பிரகாசம் 950nits ஆகும். இது 1240 x 2772 பிக்சல் தெளிவுத்திறன் கொண்டிருக்கும்.
Capture the unreachable moments with the OPPO Reno10 Pro+ 5G! Which feature enables the camera to zoom with better clarity, ensuring clear & crisp quality while capturing those precious moments? Comment using #OPPOReno10Series and you could WIN!
????https://t.co/Ve0r3vuTLE pic.twitter.com/GS2E1YYgA1
— OPPO South Africa (@OPPOSouthAfrica) June 26, 2023
ஓப்போ ரெனோ 10 சீரிஸ் பிராசஸர் (Oppo Reno 10 series Processor):
ரெனோ 10 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 8+ ஜென் 1 (Snapdragon 8+ Gen 1), ரெனோ 10 ப்ரோ ஸ்மார்ட்போன் மீடியாடெக் டைமன்சிட்டி 8200 (MediaTek Dimensity 8200), ரெனோ 10 ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 778G (Snapdragon 778G SoC) பிராசஸர்களுடன், ஆண்ட்ராய்டு 13 மூலம் இயக்கப்படுகிறது.
ஓப்போ ரெனோ 10 சீரிஸ் கேமரா (Oppo Reno 10 series Camara):
ரெனோ 10 ப்ரோ பிளஸ்:
இதில் கேமராவைப் பொறுத்தவரை OIS உடன் 50 எம்பி சோனி IMX890 (Sony IMX890) சென்சார் கொண்ட முதன்மை கேமரா, 8 எம்பி அல்ட்ரா-வைட் லென்ஸ் மற்றும் 120x டிஜிட்டல் ஜூம் கொண்ட 64 எம்பி பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ (OV64B கேமராவுடன் வருகிறது.
ரெனோ 10 ப்ரோ:
ரெனோ 10 ப்ரோ ஆனது OIS உடன் 50 எம்பி சோனி IMX890 (Sony IMX890) சென்சார் கொண்ட முதன்மை கேமரா, 8 எம்பி அல்ட்ரா-வைட் லென்ஸ் மற்றும் 32 எம்பி டெலிஃபோட்டோ லென்ஸுடன் வருகிறது.
ரெனோ 10:
ரெனோ 10 ஆனது 64 எம்பி ஆம்னிவிஷன் OV64B சென்சார் கொண்ட முதன்மை கேமரா, 8 எம்பி அல்ட்ரா-வைட் லென்ஸ் மற்றும் 32 எம்பி டெலிஃபோட்டோ லென்ஸுடன் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. செல்ஃபி மற்றும் வீடியோ கால் செய்வதற்காக முன்புறத்தில் 32 எம்பி கேமரா உள்ளது.
ஓப்போ ரெனோ 10 சீரிஸ் பேட்டரி (Oppo Reno 10 series Battery):
இதில் ரெனோ 10 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போன் 100 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 4700mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. ரெனோ 10 மற்றும் ரெனோ 10 ப்ரோ ஸ்மார்ட்போன்கள் 80 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 4600mAh பேட்டரியைக் கொண்டுள்ளது.
ஓப்போ ரெனோ 10 சீரிஸ் நினைவகம் (Oppo Reno 10 series Storage):
ரெனோ 10 ப்ரோ பிளஸ் மற்றும் ரெனோ 10 ப்ரோ ஸ்மார்ட்போன்கள் 16ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி நினைவகத்துடனும், 16ஜிபி ரேம் மற்றும் 512 ஜிபி நினைவகத்துடனும் வருகிறது. ரெனோ 10 ஸ்மார்ட்போன் 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி நினைவகத்துடனும், 12 ஜிபி ரேம் மற்றும் 512 ஜிபி நினைவகத்துடனும் வருகிறது.
இந்த ஸ்மார்ட்போன்கள் டிரீம் கோல்ட், கான்ஃபிடென்ஷியல் பிளாக் மற்றும் சில்வர் கிரே என்ற 3 வண்ண விருப்பங்களில், இந்தியாவில் ரூ.30,000 முதல் ரூ.40,000 என்ற விலையில் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒப்போவின் ஸ்மார்ட்போன்களுக்காக காத்துக்கொண்டிருக்கும் பயனர்களுக்கு இது ஒரு ட்ரீட்டாக அமையும்.