தொழில்நுட்பம்

அடுத்த அறிமுகத்திற்கு தயாராகும் ஒப்போ.! எந்த மாடல்.. எப்போ வெளியீடு தெரியுமா.?

Published by
செந்தில்குமார்

Oppo A2 5G: ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரான ஒப்போ தனது ஏ-சீரிஸில் பல மாடல் ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் கடந்த அக்டோபர் 11ம் தேதி ஒப்போ ஏ2x 5ஜி ஸ்மார்ட்போனை சீனாவில் அறிமுகப்படுத்தியது. அடுத்த மாடலான ஒப்போ ஏ2எம் என்ற புதிய 5ஜி ஸ்மார்ட்போனை தயாரிப்பதில் கவனம் செலுத்தி வருகிறது.

ஏற்கனவே ஒரு மாடல் நிலுவையில் இருக்கும் நிலையில் ஏ-சீரிஸில் அடுத்த மாடல் ஸ்மார்ட்போனை வெளியிட உள்ளது. அதன்படி, புதிய ஒப்போ ஏ2 5ஜி (Oppo A2 5G) ஸ்மார்ட்போனை ஒப்போ வெளியிட உள்ளது. இந்த தகவல் சீன தொலைத்தொடர்பு ஆணையமான டிஇஎன்ஏஏ தளத்தில் வெளிவந்துள்ளது.

டிஸ்பிளே

ஒப்போ ஏ2 5ஜி ஆனது 6.72-இன்ச் அளவுள்ள எஃப்எச்டி+ எல்சிடி பஞ்ச்-ஹோல் டிஸ்ப்ளேவைக் கொண்டிருக்கலாம். இது 90 ஹெர்ட்ஸ் முதல் 120 ஹெர்ட்ஸ் வரையிலான ரெஃப்ரெஷ் ரேட்டுடன் வரலாம். 3.5 மிமீ ஆடியோ ஜாக், புளூடூத், வைஃபை மற்றும் டூயல் சிம் கார்டு ஸ்லாட் போன்றவை இருக்கும். இன்னும் தயாரிப்பில் இருப்பதாக கூறப்படும் ஒப்போ ஏ2எம் ஸ்மார்ட்போனில் இதைவிட 0.16 இன்ச் குறைந்த வாட்டர் டிராப் நாட்ச் உடன் கூடிய  6.56 இன்ச் டிஸ்பிளே உள்ளது.

பிராசஸர்

இதில் நல்ல பெர்ஃபார்மன்ஸைத் தரக்கூடிய 2.2 ஜிகா ஹெர்ட்ஸ் கிளாக் ஸ்பீட் கொண்ட ஆக்டா-கோர் பிராஸசர் பொறுத்தப்படலாம். அதோடு ஆன்ட்ராய்டு 13 அடிப்படையிலான நிறுவனத்தின் சொந்த கலர் ஓஎஸ் 13 இருக்கலாம். மேலும், ஒப்போ ஏ2எம் ஸ்மார்ட்போனில் மாலி-ஜி57 எம்பி2 ஜிபியு உடன் இணைக்கப்பட்ட மீடியாடெக்கின் ஆக்டா-கோர் டைமன்சிட்டி 700 எஸ்ஓசி சிப்செட் பொருத்தப்படலாம்.

கேமரா மற்றும் பேட்டரி

இதன் கேமரா அமைப்பைப் பொறுத்தவரையில் எல்இடி ஃபிளாஷுடன் கூடிய 50 எம்பி மெயின் கேமரா மற்றும் 2 எம்பி டெப்த் கேமராவும் பொருத்தப்படலாம் என்று கூறப்படுகிறது. செல்ஃபிக்காக  8 எம்பி கேமராவும் பொறுத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

193 கிராம் எடையும், 7.9 மிமீ தடிமனும் கொண்ட இந்த ஸ்மார்ட்போனில் 5,000 mAh திறன் கொண்ட பேட்டரி பொருத்தப்படலாம்.  ஆனால் இதில் எத்தனை வாட்ஸுக்கான வேகமான சார்ஜிங் வசதி உள்ளது என்பது பற்றி எந்த தகவலும் இல்லை.

ஸ்டோரேஜ் மற்றும் அறிமுகம்

ஒப்போ ஏ2 5ஜி ஸ்மார்ட்போன் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ், 12 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ் மற்றும் 12 ஜிபி ரேம் + 512 ஜிபி ஸ்டோரேஜ் என மூன்று வேரியண்ட்களில் வரலாம். இத்தகைய அம்சங்களும் வரும் இந்த ஒப்போ ஏ2 5ஜி ஸ்மார்ட்போனின் வெளியீட்டு தேதி குறித்து அதிகாரப்பூர்வ தகவல் இல்லை என்றாலும், ஒப்போ ஏ2 போன் சீனாவில் வரும் நவம்பர் 11ஆம் தேதி தொடங்கப்படும் டபுள் லெவன் ஷாப்பிங் திருவிழாவின் போது அறிமுகம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது.

Published by
செந்தில்குமார்

Recent Posts

உள்ளாட்சி இடைத்தேர்தலை நடத்த தடை – உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு.!

மதுரை : மாநிலம் முழுவதும் உள்ளாட்சி அமைப்புகளில் காலியாகவுள்ள இடங்களுக்கு இடைத்தேர்தல் நடத்த இடைக்காலத் தடை விதித்து, மதுரை ஐகோர்ட்…

14 minutes ago

விவாகரத்து வழக்கு: ரவி மோகனிடம் மாதம் ரூ.40 லட்சம் ஜீவனாம்சம் கேட்கும் ஆர்த்தி.!

சென்னை: கடந்த 2024 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம், ரவி மோகன் தனது மனைவி ஆர்த்தியிடமிருந்து விவாகரத்து கோரி சென்னை…

37 minutes ago

MI vs DC: பிளே ஆஃப் செல்ல கேள்வி குறி? குறுக்கை வரும் மழை.., போட்டி நடக்குமா?

மும்பை : ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் மும்பை வான்கடே மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெற உள்ள ஆட்டத்தில்…

52 minutes ago

இயக்குநர் அட்லீக்கு கவுரவ டாக்டர் பட்டம்! குவியும் வாழ்த்துக்கள்!

சென்னை : இந்திய சினிமாவில் தரமான படங்களை கொடுத்துவரும் இயக்குநர் அட்லீக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்படவுள்ளது. சென்னையில் அமைந்துள்ள…

9 hours ago

போஸ் கொடுப்பது மட்டும்தான் பிரதமரின் வேலையா? – மல்லிகார்ஜுன கார்கே கேள்வி!

டெல்லி : இந்திய தேசிய காங்கிரஸின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் வெளியுறவுக்…

9 hours ago

தமிழகத்தில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் தகவல்!

சென்னை : தென்மேற்கு பருவமழை, கேரளாவில் அடுத்த 4-5 தினங்களில் துவங்குவதற்கான வாய்ப்புள்ளது. அதே சமயத்தில் தமிழகத்தில் சில பகுதிகளிலும்…

10 hours ago