அடுத்த அறிமுகத்திற்கு தயாராகும் ஒப்போ.! எந்த மாடல்.. எப்போ வெளியீடு தெரியுமா.?
Oppo A2 5G: ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரான ஒப்போ தனது ஏ-சீரிஸில் பல மாடல் ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் கடந்த அக்டோபர் 11ம் தேதி ஒப்போ ஏ2x 5ஜி ஸ்மார்ட்போனை சீனாவில் அறிமுகப்படுத்தியது. அடுத்த மாடலான ஒப்போ ஏ2எம் என்ற புதிய 5ஜி ஸ்மார்ட்போனை தயாரிப்பதில் கவனம் செலுத்தி வருகிறது.
ஏற்கனவே ஒரு மாடல் நிலுவையில் இருக்கும் நிலையில் ஏ-சீரிஸில் அடுத்த மாடல் ஸ்மார்ட்போனை வெளியிட உள்ளது. அதன்படி, புதிய ஒப்போ ஏ2 5ஜி (Oppo A2 5G) ஸ்மார்ட்போனை ஒப்போ வெளியிட உள்ளது. இந்த தகவல் சீன தொலைத்தொடர்பு ஆணையமான டிஇஎன்ஏஏ தளத்தில் வெளிவந்துள்ளது.
டிஸ்பிளே
ஒப்போ ஏ2 5ஜி ஆனது 6.72-இன்ச் அளவுள்ள எஃப்எச்டி+ எல்சிடி பஞ்ச்-ஹோல் டிஸ்ப்ளேவைக் கொண்டிருக்கலாம். இது 90 ஹெர்ட்ஸ் முதல் 120 ஹெர்ட்ஸ் வரையிலான ரெஃப்ரெஷ் ரேட்டுடன் வரலாம். 3.5 மிமீ ஆடியோ ஜாக், புளூடூத், வைஃபை மற்றும் டூயல் சிம் கார்டு ஸ்லாட் போன்றவை இருக்கும். இன்னும் தயாரிப்பில் இருப்பதாக கூறப்படும் ஒப்போ ஏ2எம் ஸ்மார்ட்போனில் இதைவிட 0.16 இன்ச் குறைந்த வாட்டர் டிராப் நாட்ச் உடன் கூடிய 6.56 இன்ச் டிஸ்பிளே உள்ளது.
பிராசஸர்
இதில் நல்ல பெர்ஃபார்மன்ஸைத் தரக்கூடிய 2.2 ஜிகா ஹெர்ட்ஸ் கிளாக் ஸ்பீட் கொண்ட ஆக்டா-கோர் பிராஸசர் பொறுத்தப்படலாம். அதோடு ஆன்ட்ராய்டு 13 அடிப்படையிலான நிறுவனத்தின் சொந்த கலர் ஓஎஸ் 13 இருக்கலாம். மேலும், ஒப்போ ஏ2எம் ஸ்மார்ட்போனில் மாலி-ஜி57 எம்பி2 ஜிபியு உடன் இணைக்கப்பட்ட மீடியாடெக்கின் ஆக்டா-கோர் டைமன்சிட்டி 700 எஸ்ஓசி சிப்செட் பொருத்தப்படலாம்.
கேமரா மற்றும் பேட்டரி
இதன் கேமரா அமைப்பைப் பொறுத்தவரையில் எல்இடி ஃபிளாஷுடன் கூடிய 50 எம்பி மெயின் கேமரா மற்றும் 2 எம்பி டெப்த் கேமராவும் பொருத்தப்படலாம் என்று கூறப்படுகிறது. செல்ஃபிக்காக 8 எம்பி கேமராவும் பொறுத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
193 கிராம் எடையும், 7.9 மிமீ தடிமனும் கொண்ட இந்த ஸ்மார்ட்போனில் 5,000 mAh திறன் கொண்ட பேட்டரி பொருத்தப்படலாம். ஆனால் இதில் எத்தனை வாட்ஸுக்கான வேகமான சார்ஜிங் வசதி உள்ளது என்பது பற்றி எந்த தகவலும் இல்லை.
ஸ்டோரேஜ் மற்றும் அறிமுகம்
ஒப்போ ஏ2 5ஜி ஸ்மார்ட்போன் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ், 12 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ் மற்றும் 12 ஜிபி ரேம் + 512 ஜிபி ஸ்டோரேஜ் என மூன்று வேரியண்ட்களில் வரலாம். இத்தகைய அம்சங்களும் வரும் இந்த ஒப்போ ஏ2 5ஜி ஸ்மார்ட்போனின் வெளியீட்டு தேதி குறித்து அதிகாரப்பூர்வ தகவல் இல்லை என்றாலும், ஒப்போ ஏ2 போன் சீனாவில் வரும் நவம்பர் 11ஆம் தேதி தொடங்கப்படும் டபுள் லெவன் ஷாப்பிங் திருவிழாவின் போது அறிமுகம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது.