விற்பனைக்கு வந்த Oppo Find X8! சிறப்பம்சங்கள் என்னென்ன இருக்கு?
OPPO Find X8 Pro மற்றும் Find X8 டிசம்பர் 3ஆம் தேதி முதல் OPPO இ-ஸ்டோர் மற்றும் ப்ளிப்கார்ட் உட்பட ஆன்லைனில் விற்பனைக்கு வந்துள்ளது.
டெல்லி : இந்தியாவில் Oppo Find X8 போனை வாங்குவதற்காக நீங்கள் ஆர்வமான ஒருவராக இருந்தீர்கள் என்றால் உங்களுக்காகவே அசத்தலான குட் நியூஸ் வந்திருக்கிறது. அது என்னவென்றால், Oppo ஆன்லைன் ஸ்டோர், ப்ளிப்கார்ட் மற்றும் பிற சில்லறை விற்பனை நிலையங்கள் மற்றும் பல்வேறு விற்பனை நிலையங்களில் Oppo Find X8 விற்பனைக்கு வந்துள்ளது என்பது தான்.
விலை எவ்வளவு?
இந்த போன்களுடைய விலையை பற்றி பார்க்கையில் Oppo Find X8 Pro 16ஜிபி + 512ஜிபி மாறுபாட்டின் விலை ரூ.99,999க்கும், Oppo Find X8 12ஜிபி+ 256ஜிபி மாடலின் விலை ரூ. 69,999, ஆகிய விலைகளில் கிடைக்கிறது. அதே சமயம், 16ஜிபி + 512ஜிபி பதிப்பு ரூ.79,999க்கு கிடைக்கும். இந்த போனின் மீது உங்களுக்கு விருப்பம் இருக்கிறது என்றால் நீங்கள கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்தி Oppo ஆன்லைன் ஸ்டோர், ப்ளிப்கார்ட் அல்லது பிற அங்கீகரிக்கப்பட்ட ரீடெய்ல் பார்ட்னர்கள் மூலம் வாங்கும் போது 10% கேஷ்பேக் உட்பட பல சலுகைகளும் கிடைக்கின்றன. மொத்தமாக பணம் கட்டி வாங்கமுடியாதவர்களுக்கு EMI திட்டமும் இருக்கிறது.
சிறப்பு அம்சங்கள்
சிப்செட் : Oppo Find X8 Pro மற்றும் Oppo Find X8 இரண்டும் MediaTek Dimensity (மீடியாடெக்) 9,400 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது.
டிஸ்பிளே : அதைப்போல, Find X8 Pro ஆனது 120Hz ரெப்ரெஷ் ரேட் மற்றும் 6.7-இன்ச் AMOLED (அமோல்ட்) டிஸ்பிளேவை கொண்டுள்ளது. அதே நேரத்தில் Find X8 சற்று சிறிய 6.59-inch AMOLED (அமோல்ட்) டிஸ்பிளேவை கொண்டுள்ளது.
கேமரா :கேமராக்களைப் பொறுத்தவரை, இரண்டும் பெரிய அளவில் வித்தியாசம் இல்லை. Find X8 Pro அதன் குவாட்-கேமரா அமைப்புடன் தனித்து நிற்கிறது. இதில் 50எம்பி Sony IMX808 முதன்மை சென்சார், 50எம்பி அல்ட்ரா-வைட் கேமரா, 50எம்பி 3x டெலிஃபோட்டோ லென்ஸ் மற்றும் 50எம்பி 6x டெலிஃபோட்டோ லென்ஸ் ஆகியவை கொண்டுள்ளது.
அதே சமயம், Oppo Find X8 ஆனது 50எம்பி (Sony IMX) சோனி ஐமேக்ஸ் 700 சென்சார், 50எம்பி அல்ட்ரா-வைட் கேமரா மற்றும் 50எம்பி 3x டெலிஃபோட்டோ லென்ஸ் ஆகியவற்றை கொண்டுள்ளது. இரண்டும் 32 எம்பி செல்பி கேமராக்களை கொண்டு இருக்கிறது.
பேட்டரி : பேட்டரி வசதியை பொறுத்தவரையில் Oppo Find X8 Pro ஆனது 5,910mAh பேட்டரியைப் கொண்டுள்ளது. இது 80W வேகமான சார்ஜிங் வசதியை கொண்டுள்ளது. அதைப்போல, Oppo Find X8 ஆனது சற்று 5,630mAh பேட்டரியை கொண்டுள்ளது. மற்றும் 50W வயர்லெஸ் சார்ஜிங் வசதியுடன் வருகிறது.