கேமராவிற்காகவே பிரசித்தி பெற்ற ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரான ‘ஒப்போ’ அதன் புதிய ஃபைண்ட் என்3 ஃபிளிப் (Find N3 Flip) ஸ்மார்ட்போனை அக்டோபர் 12ம் தேதி இரவு 7 மணியளவில் இந்தியாவில் அறிமுகப்படுத்தவுள்ளதாக கூறியிருந்தது.
அதன்படி, தற்போது பக்கவாட்டில் பொருத்தப்பட்ட பிங்கர் பிரிண்ட் சென்சார், டால்பி அட்மோஸுடன் கூடிய டூயல் ஸ்பீக்கர்கள் கொண்ட ஒப்போ ஃபைண்ட் என்3 ஃபிளிப் ஸ்மார்ட்போனை இந்திய சந்தைகளில் அறிமுகப்படுத்தியுள்ளது.
டிஸ்பிளே
ஃபைண்ட் என்3 ஃபிளிப் ஆனது 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட 6.8 இன்ச் அளவுள்ள எஃப்எச்டி பிளஸ் அமோலெட் மெயின் டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது. அதோடு, 30 ஹெர்ட்ஸ் முதல் 30 ஹெர்ட்ஸ் வரையிலான ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட 3.26 இன்ச் அளவுள்ள அமோலெட் கவர் டிஸ்ப்ளே உள்ளது. பாதுகாப்பிற்காக கொரில்லா கிளாஸ் விக்டஸ் உள்ளது.
இந்த கவர் டிஸ்ப்ளே ஆனது கேலக்ஸி Z ஃபிளிப் 5 மற்றும் மோட்டோரோலா ரேசர் பிளஸ் ஸ்மார்ட்போன்களில் உள்ள கவர் டிஸ்பிளேவில் இருந்து சற்று வித்தியாசமானதாக இருக்கும். இதில் ஸ்விக்கி, சொமேட்டோ, புக் மை ஷோ மற்றும் பல இந்திய பயன்பாடுகள் உட்பட 40க்கும் மேற்பட்ட ஆப்ஸ், கவர் ஸ்கிரீன் விட்ஜெட்டுகள் மற்றும் பல கவர்-டிஸ்ப்ளே ஸ்டைல்களை பயன்படுத்த முடியும்.
பிராசஸர்
ஏஆர்எம் இம்மார்டலிஸ்-ஜி715 எம்சி 11 ஜிபியு உடன் இணைக்கப்பட்ட மீடியாடெக் டைமன்சிட்டி 9200 எஸ்ஓசி சிப்செட் ஆனது பைண்ட் என்3 ஃபிளிப் ஸ்மார்ட்போனில் பொருத்தப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு 13-அடிப்படையிலான கலர் ஓஎஸ் 13.2-ல் இயங்குகிறது. கலர் டெம்பரேச்சர் சென்சார், ஜியோமேக்னடிக் சென்சார், டூயல் ப்ராக்ஸிமிட்டி சென்சார்கள், ஹால் சென்சார், இரட்டை கைரோஸ்கோப் போன்ற சென்சார்கள் உள்ளன.
கேமரா
இந்த ஸ்மார்ட்போனில் இருக்கக்கூடிய கேமரா அமைப்பை பொருத்தவரை பின்புறத்தில் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் அம்சத்துடன் கூடிய 50 எம்பி மெயின் கேமரா, 48 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமரா மற்றும் 32 எம்பி டெலிஃபோட்டோ கேமரா கொண்ட ட்ரிபிள் ரியல் கேமரா அமைப்பு உள்ளது. முன்புறம் செல்ஃபி மற்றும் வீடியோ அழைப்புகளை செய்ய 32 எம்பி கேமரா உள்ளது.
பேட்டரி
ஃபைண்ட் என்3 ஃபிளிப் ஸ்மார்ட்போனில் நீண்ட நேர பயன்பாட்டிற்காக 4,300 mAh திறன் கொண்ட பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இதனை வேகமாக சார்ஜ் செய்ய 44 வாட்ஸ் சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது. இந்த பேட்டரியை 56 நிமிடங்களில் பூஜ்ஜியத்திலிருந்து நூறு சதவீதம் வரை சார்ஜ் செய்யமுடியும். இதில் இருக்கும் அலர்ட் ஸ்லைடர் ஸ்மார்ட்போனை சைலெண்ட், ரிங் அல்லது வைப்ரேட்டில் வைக்க பயன்படுத்தலாம்.
ஸ்டோரேஜ் மற்றும் விலை
கிரீம் கோல்ட் மற்றும் ஸ்லீக் பிளாக் என இரண்டு வண்ணங்களில் வெளியாகியுள்ள என்3 ஃபிளிப் ஆனது 12 ஜிபி ரேம் + 256 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜுடன் அறிமுகமாகியுள்ளது. இந்த 12 ஜிபி வேரியண்ட் விலை ரூ.94,999 ஆகும். தற்போது அதிகமாக அறிமுகமாகியுள்ள ஓப்போ ஃபைண்ட் என்3 ஃபிளிப் ஸ்மார்ட்போன் அக்டோபர் 22ம் தேதி மாலை 6:00 மணி முதல் விற்பனைக்கு வரவுள்ளது.
சலுகை
எஸ்பிஐ, ஐசிஐசிஐ, கோடக் பேங்க் மற்றும் பஜாஜ் பின்சர்ப் கார்டுகளை பயன்படுத்தி இந்த ஸ்மார்ட்போனை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு ரூபாய் 15,000 வரையிலான கேஷ்பேக் மற்றும் 24 மாதங்களுக்கான நோ காஸ்ட் இஎம்ஐ வசதி உள்ளது. மேலும், கூடுதலாக ரூ.8000 வரை எக்சேஞ்ச் போனஸ் வழங்கப்படும் என்றும், ஒன் டைம் ஸ்கிரீன் ரீப்ளேஸ்மென்ட் செய்து தரப்படும் எனவும் ஓப்போ உறுதி அளித்துள்ளது.
டெல்லி: உடல்நலக்குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் (92) சிகிச்சை பலனின்றி நேற்று முன்…
சென்னை: விஜயகாந்தின் முதலாமாண்டு நினைவு தினத்தையொட்டி, அவரது நினைவிடத்தில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்களும், தேமுதிக தொண்டர்களும்…
நியூயார்க்: உலகின் நம்பர்-1 செஸ் வீரரான நோர்வே சதுரங்க கிராண்ட் மாஸ்டர் மேக்னஸ் கார்ல்சன், சர்வதேச செஸ் கூட்டமைப்பு (FIDE)…
சென்னை: பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் சாட்டையடி போராட்டம் நடத்தியது போல், நேற்று மாலை நடிகர் கூல் சுரேஷ் தனக்கு…
ஜப்பான்: சுசூகி மோட்டார்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் ஒசாமு சுசூகி (94) காலமானார். லிம்போமா என்ற ஒருவகை புற்றுநோயால் பாதிக்கப்பட்ட…
சென்னை: கேப்டன் என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்படும் 'விஜயகாந்த்' மறைந்து இன்றுடன் ஓராண்டாகிறது. மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் முதலாம்…