128ஜிபி(128 GB) உடன்  ஓப்போ எப்7(Oppo F7) ஸ்மார்ட்போன் அறிமுகம்..!!

Published by
Dinasuvadu desk

 

ஓப்போ எஃப்7(Oppo F7) ஸ்மார்ட்போன் குறித்து, ஓப்போ நிறுவனம் ஏராளமான விளம்பரங்களை வெளியிட்டு வருகிறது. இந்த ஸ்மார்ட்போன், வரும் 26 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்பதை உறுதி செய்யும் வகையில் மும்பையில் நடைபெறும் அறிமுக நிகழ்ச்சிக்கு, ஊடகங்களுக்கு இந்நிறுவனம் அழைப்புவிடுத்துள்ளது. இந்நிலையில், ஓப்போ எஃப்7 ஸ்மார்ட்போன் இரு வகைகளில் வெளியிடப்படலாம் என்பதை குறிக்கும் ஒரு புதிய போஸ்டர் தற்போது வெளியிட்டுள்ளது.

ஜிஎஸ்எம்ஏரினா பத்திரிக்கையில் ஸ்லேஸ்லீக்ஸ் மூலம் வெளியிடப்பட்ட போஸ்டரில், ஓப்போ எஃப்7 ஸ்மார்ட்போன் இரு வகைகளில் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் உயர்தர வகையானது 128ஜிபி உள்ளக நினைவகம் கொண்டதாகவும், சாதாரண வகையில் சிறப்பம்சங்கள் குறைக்கப்பட்டு ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஓப்போ எஃப்7-னின் இரு வகைகளிலும், 25எம்பி  திறன் கொண்ட செல்ஃபீ கேமரா இருக்கும் என்று நம்பப்படுகிறது. சிறப்பான செல்ஃபீ படங்களுக்கு உதவும் வகையில், ஓப்போ எஃப்5-யைப் போலவே இந்த ஸ்மார்ட்போனில் உள்ள கேமராவும் செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தும் என்று கூறப்படுகிறது. ஓப்போ எஃப்5-யை போன்று இந்த செல்ஃபீ கேமராவிலும், தோலின் நிறம், பாலினம் மற்றும் வயது ஆகியவற்றை கருத்தில் கொண்டு செல்ஃபீ படங்களை எடுக்கும் திறன் கொண்டது என்று கூறப்படுகிறது.

ஓப்போ எஃப்7 ஸ்மார்ட்போனின் 128ஜிபி உள்ளக நினைவகத்தை கொண்ட உயர்தர வகையின் படம், சமீபகால டீஸராக வெளியிடப்பட்டுள்ளது. இதன்மூலம் நடுத்தர சந்தை பிரிவில் சேரும் வகையில் இந்த ஸ்மார்ட்போனின் விலை நிர்ணயிக்கப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஓப்போ எஃப்7 ஸ்மார்ட்போனின் இரு பக்கங்களிலும் மெலிந்த பேஸில்கள் இருப்பதை காண முடிகிறது. தற்போது கிடைத்துள்ள செய்திகளின் மூலம் இதில் 6.2 இன்ச் அளவிலான டிஸ்ப்ளே, 2280 x 1080 பிக்சல் எஃப்ஹெச்டி+ 19:9 விகிதத்தில் அமைந்திருப்பதாகத் தெரிகிறது.

 

Recent Posts

மாணவர்களுக்கு குட் நியூஸ்! தென்காசியில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு!

மாணவர்களுக்கு குட் நியூஸ்! தென்காசியில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு!

தென்காசி : கடந்த நவ-20 (புதன்கிழமை) இரவு முழுவதும் இடைவிடாது கனமழை பெய்தது. தொடர்ந்து பெய்த கனமழையின் காரணமாக தென்காசி…

19 minutes ago

“2026 தேர்தல் முக்கியம்., ரிப்போர்ட் கார்டு வேண்டும்!” மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்!

சென்னை : இன்று (நவம்பர் 22) சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக…

9 hours ago

கூகுள் குரோம் பயனர்களே உஷார்! எச்சரித்த மத்திய அரசு!

டெல்லி : உலகளவில் பெரும்பாலான ஸ்மார்ட் போன் பயன்பாட்டாளர்களின் இணையவழி தேடல் எஞ்சினாக செயல்பட்டு வருகிறது கூகுள் குரோம். இந்த…

11 hours ago

மாணவர்களை கால் அழுத்திவிட கூறிய ஆசிரியர்! சஸ்பெண்ட் செய்த கல்வி அதிகாரி!

சேலம் : பள்ளி மாணவர்களை பள்ளிகளில் வேலை வாங்கும் நிகழ்வுக்கு அவ்வபோது உயர் கல்வி அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும்,…

12 hours ago

நாளை தவெக தலைவர் விஜய் வைக்கும் விருந்து! யார் யாருக்கு தெரியுமா?

சென்னை : கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலை பகுதியில் தமிழக வெற்றிக் கழகம்…

12 hours ago

“மீனவர்கள் ஆழ்கடலுக்குச் செல்ல வேண்டாம்” – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.…

13 hours ago