128ஜிபி(128 GB) உடன் ஓப்போ எப்7(Oppo F7) ஸ்மார்ட்போன் அறிமுகம்..!!
ஓப்போ எஃப்7(Oppo F7) ஸ்மார்ட்போன் குறித்து, ஓப்போ நிறுவனம் ஏராளமான விளம்பரங்களை வெளியிட்டு வருகிறது. இந்த ஸ்மார்ட்போன், வரும் 26 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்பதை உறுதி செய்யும் வகையில் மும்பையில் நடைபெறும் அறிமுக நிகழ்ச்சிக்கு, ஊடகங்களுக்கு இந்நிறுவனம் அழைப்புவிடுத்துள்ளது. இந்நிலையில், ஓப்போ எஃப்7 ஸ்மார்ட்போன் இரு வகைகளில் வெளியிடப்படலாம் என்பதை குறிக்கும் ஒரு புதிய போஸ்டர் தற்போது வெளியிட்டுள்ளது.
ஜிஎஸ்எம்ஏரினா பத்திரிக்கையில் ஸ்லேஸ்லீக்ஸ் மூலம் வெளியிடப்பட்ட போஸ்டரில், ஓப்போ எஃப்7 ஸ்மார்ட்போன் இரு வகைகளில் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் உயர்தர வகையானது 128ஜிபி உள்ளக நினைவகம் கொண்டதாகவும், சாதாரண வகையில் சிறப்பம்சங்கள் குறைக்கப்பட்டு ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஓப்போ எஃப்7-னின் இரு வகைகளிலும், 25எம்பி திறன் கொண்ட செல்ஃபீ கேமரா இருக்கும் என்று நம்பப்படுகிறது. சிறப்பான செல்ஃபீ படங்களுக்கு உதவும் வகையில், ஓப்போ எஃப்5-யைப் போலவே இந்த ஸ்மார்ட்போனில் உள்ள கேமராவும் செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தும் என்று கூறப்படுகிறது. ஓப்போ எஃப்5-யை போன்று இந்த செல்ஃபீ கேமராவிலும், தோலின் நிறம், பாலினம் மற்றும் வயது ஆகியவற்றை கருத்தில் கொண்டு செல்ஃபீ படங்களை எடுக்கும் திறன் கொண்டது என்று கூறப்படுகிறது.
ஓப்போ எஃப்7 ஸ்மார்ட்போனின் 128ஜிபி உள்ளக நினைவகத்தை கொண்ட உயர்தர வகையின் படம், சமீபகால டீஸராக வெளியிடப்பட்டுள்ளது. இதன்மூலம் நடுத்தர சந்தை பிரிவில் சேரும் வகையில் இந்த ஸ்மார்ட்போனின் விலை நிர்ணயிக்கப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஓப்போ எஃப்7 ஸ்மார்ட்போனின் இரு பக்கங்களிலும் மெலிந்த பேஸில்கள் இருப்பதை காண முடிகிறது. தற்போது கிடைத்துள்ள செய்திகளின் மூலம் இதில் 6.2 இன்ச் அளவிலான டிஸ்ப்ளே, 2280 x 1080 பிக்சல் எஃப்ஹெச்டி+ 19:9 விகிதத்தில் அமைந்திருப்பதாகத் தெரிகிறது.