Oppo F25 Pro 5G : ஒப்போ நிறுவனம் ‘Oppo F25 Pro 5G’ போனை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய போன் ஆனது MediaTek Dimensity 7050 SoC இல் 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி வரை உள் சேமிப்பக வசதியுடன் வருகிறது. மேலும், இன்னும் இந்த போனில் என்னென்ன அம்சங்கள் இருக்கிறது விலை என்ன? என்ன கலர்களில் வந்துள்ளது என்பது பற்றி விவரமாக பார்க்கலாம்.
பின்பக்க கேமராவை பொறுத்தவரையில் இந்த போன் 64-மெகாபிக்சல் Omnivision இன் OV64 முதன்மை சென்சார், F/1.7 லென்ஸ் மற்றும் ஆட்டோஃபோகஸ் ஆகியவற்றைக் கொண்டு இருக்கிறது. மேலும், கேமரா அமைப்பில் F/2.2 லென்ஸுடன் 8-மெகாபிக்சல் ‘Sony IMX355 வைட்’-ஆங்கிள் சென்சார் மற்றும் f/2.4 லென்ஸுடன் 2-மெகாபிக்சல் மேக்ரோ சென்சார் ஆகியவையும் இருக்கிறது. மேலும் இந்த போனில் 4k வீடியோ ஆதரவும் இருக்கிறது. எனவே, வீடியோ எடுப்பவர்களுக்கு கண்டிப்பாக இந்த போன் நன்றாக உதவும்.
இந்தியாவில் Oppo F25 Pro 5Gயின் 8ஜிபி ரேம் + 128ஜிபி சேமிப்பக மாடலின் ஆரம்ப விலை ரூ.23,999,க்கு வரும் அதேசமயம் 8ஜிபி ரேம் + 256ஜிபி சேமிப்பக வசதியை கொண்ட மாடலின் விலை ரூ.25,999க்கு வரும் என்று தெரிகிறது. மேலும், இவ்வளவு சிறப்பு அம்சங்களை கொண்டு இருக்கும் இந்த போன் இது Lava Red மற்றும் கடல் வண்ண கலர் ( Ocean Blue) ஆகிய நிறங்களில் வரும் என்று கூறப்படுகிறது. மார்ச் 5 முதல் Oppo இன் இ-ஸ்டோர் , அமேசான், பிளிப்கார்ட் ஆகியவற்றில் வரும். 25, 26 ஆயிரம் பட்ஜெட்டில் போன் தேடுபவர்களுக்கு இந்த போன் நல்ல போனக இருக்கும். ஏனென்றால், அவ்வளவு சிறப்பான அம்சங்களை கொண்டு இருக்கிறது. எனவே, விருப்பம் இருப்பவர்கள் வாங்கி கொள்ளலாம்.
தெலங்காணா: 'புஷ்பா 2' திரைப்படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க ரசிகை ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில், நடிகர் அல்லு அர்ஜுன் மீது,…
டெல்லி: யூடியூப் உலகின் பல்வேறு மக்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கு மட்டும் இல்லாமல், மக்களுக்கு தேவையான வீடியோக்களை பார்ப்பதற்கும் ஒரு சமூக…
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…
தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…
ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…
சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…