OPPO A2x: 6.56 இன்ச் டிஸ்ப்ளே, 5000mAh பேட்டரி.! அறிமுகமானது ஒப்போவின் புதிய பட்ஜெட் ஸ்மார்ட்போன்.!

OPPO A2x

ஒப்போ நிறுவனம் கடந்த மார்ச் மாதம் ஒப்போ ஏ1x 5ஜி ஸ்மார்ட்போனை கிட்டத்தட்ட ரூ.19,100 என்ற விலையில் சீனாவில் அறிமுகப்படுத்தியது. இதனைத்தொடர்ந்து தற்போது எந்தவித அறிவிப்பும் இன்றி தனது அடுத்தத் தயாரிப்பான ஒப்போ ஏ2x 5ஜி ஸ்மார்ட்போனை சீனாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இது ஏ1x ஸ்மார்ட்போனில் இருக்கக்கூடிய சில அம்சங்களைக் கொண்டுள்ளதால், ஒப்போ ஏ2x ஆனது ஏ1x ஸ்மார்ட்போனின் மாறுபாடாகவே பார்க்கப்படுகிறது.

டிஸ்பிளே

ஒப்போ ஏ2x வில் 1612 × 720 பிக்சல்கள் ரெசல்யூஷன் கொண்ட 6.56 இன்ச் அளவுள்ள ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளே பொருத்தப்பட்டுள்ளது. இந்த டிஸ்பிளே 16.7 மில்லியன் வண்ணங்களை ஒன்றாக ஒருங்கிணைத்து காட்டக்கூடியது. ஒப்போ ஏ2x டிஸ்பிளே ஆனது 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 180 ஹெர்ட்ஸ் டச் சம்ப்ளிங் ரேட்டுடன் 720 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொண்டுள்ளது. இதனால் மொபைல் உபயோகிப்பதற்கு மென்மையாகவும், சூரிய ஒளியில் தெளிவாகவும் இருக்கும்.

பிராசஸர்

ஒப்போ ஏ2x ஸ்மார்ட்போனில் மாலி-ஜி57 எம்பி2 ஜிபியு உடன் இணைக்கப்பட்ட மீடியாடெக்கின் ஆக்டா-கோர் டைமன்சிட்டி 6020 சிப்செட் உள்ளது. இதில் ஆன்ட்ராய்டு 13-ஐ அடிப்படையாகக் கொண்டு செயல்படும் மேஜிக் ஓஎஸ் 7.2 உள்ளது. இதே பிராசஸர் ஆனது இதற்கு முன்பு அறிமுகம் செய்யப்பட்ட ஹானர் ப்ளே 50 பிளஸ் ஸ்மார்ட்போனிலும் உள்ளது. இதில் ஆன்ட்ராய்டு 13-ஐ அடிப்படையாகக் கொண்டு செயல்படும் கலர் ஓஎஸ் 31.1 உள்ளது. பாதுகாப்பிற்காக ஐபி54 ரேட்டிங் உள்ளது.

கேமரா

இதில் இருக்கும் கேமரா அமைப்பைப் பொறுத்தவரையில் பின்புறம் எல்இடி ஃபிளாஷ் மற்றும் ஆட்டோஃபோகஸுடன் கூடிய 13 எம்பி மெயின் கேமரா, 2 எம்பி போர்ட்ரெய்ட் கேமரா என டபுள் ரியர் கேமரா அமைப்பு உள்ளது. முன்புறம் செல்ஃபி மற்றும் வீடியோ அழைப்புக்காக 5 எம்பி கேமரா உள்ளது. நைட் சீன், வீடியோ, பனோரமா, ஸ்லோ மோஷன், டைம்-லாப்ஸ் போன்ற கேமரா அம்சங்களும் உள்ளன.

பேட்டரி

185 கிராம் மற்றும் 8.12 மிமீ தடிமன் கொண்ட இந்த ஸ்மார்ட்போனில் 5,000 mAh திறன் கொண்ட பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 10 வாட்ஸ் சார்ஜிங் வசதி உள்ளது. ஒப்போ ஏ2x ஆனது 3.5மிமீ ஹெட்ஃபோன் ஜாக், பக்கவாட்டில் பிங்கர் பிரிண்ட் ஸ்கேனர், புளூடூத் 5.3, வைஃபை 5, ஜிபிஎஸ் மற்றும் பிற அம்சங்களுடன் வருகிறது.

ஸ்டோரேஜ் மற்றும் விலை:

மூன்று வெவ்வேறு வண்ணங்களில் கிடைக்கும் இந்த ஸ்மார்ட்போன் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் மற்றும் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் என இரண்டு வேரியண்ட்களில் அறிமுகமாகியுள்ளது. இதில் 6 ஜிபி ரேம் வேரியண்ட் 1,099 யுவான் (ரூ.12,800) என்ற விலையிலும், 8 ஜிபி ரேம் வேரியண்ட் 1,399 யுவான் (ரூ.16,100) என்ற விலையிலும் கிடைக்கும். ஒப்போ ஏ2x ஆனது அக்டோபர் 14 ஆம் தேதி சீனாவில் விற்பனைக்கு வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் விரைவில் இந்தியாவில் அறிமுகமாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்