ஒப்போ நிறுவனம் எந்தவித அறிவிப்பும் அமைதியாக அதன் புதிய ஒப்போ ஏ18 (OPPO A18) ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்கு முன்னதாக டால்பி அட்மோஸுடன் கூடிய டூயல் ஸ்பீக்கர்கள் கொண்ட ஒப்போ ஃபைண்ட் என்3 ஃபிளிப் ஸ்மார்ட்போனை கடந்த அக்டோபர் 12ம் தேதி இந்தியாவில் அறிமுகப்படுத்தியது.
இதைத்தொடர்ந்து, தற்போது ஒப்போ ஏ18 ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் கடந்த அக்டோபர் 11ம் தேதி சீனாவில் அறிமுகமான ஒப்போ ஏ2x 5ஜி ஸ்மார்ட்போனில் இருக்கக்கூடிய அம்சங்களை ஒத்துள்ளது. இருந்தும் சில அம்சங்கள் வேறுபட்டுள்ளது.
டிஸ்பிளே
ஒப்போ ஏ18 ஸ்மார்ட்போனில் 1612×720 பிக்சல்கள் ரெசல்யூஷன் கொண்ட 6.5 இன்ச் (16.66 செ.மீ) அளவுள்ள எச்டி+ ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளே பொருத்தப்பட்டுள்ளது. இந்த டிஸ்பிளே 16.7 மில்லியன் வண்ணங்களை ஒன்றாக ஒருங்கிணைத்து காட்டக்கூடியது.
OPPO A2x: 6.56 இன்ச் டிஸ்ப்ளே, 5000mAh பேட்டரி.! அறிமுகமானது ஒப்போவின் புதிய பட்ஜெட் ஸ்மார்ட்போன்.!
ஒப்போ ஏ18 டிஸ்பிளே ஆனது 60 முதல் 90 ஹெர்ட்ஸ் வரையிலான ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 90 ஹெர்ட்ஸ் டச் சம்ப்ளிங் ரேட்டைக் கொண்டுள்ளது. சூரிய ஒளியில் தெளிவாக பார்ப்பதற்கு 720 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொண்டுள்ளது.
பிராசஸர்
மாலி ஜி52 எம்சி2 ஜிபியு உடன் இணைக்கப்பட்ட மீடியாடெக் ஹீலியோ ஜி85 சிப்செட் பொருத்தப்பட்டுள்ளது. ஆன்ட்ராய்டு 13-ஐ அடிப்படையாகக் கொண்டு செயல்படும் கலர் ஓஎஸ் 13.1 உள்ளது.
ஆனால் இதற்கு முன்பு அறிமுகம் செய்யப்பட்ட ஒப்போ ஏ2x ஸ்மார்ட்போனில் மாலி-ஜி57 எம்பி2 ஜிபியு உடன் இணைக்கப்பட்ட மீடியாடெக்கின் ஆக்டா-கோர் டைமன்சிட்டி 6020 சிப்செட் உள்ளது. நீர் மாற்றும் தூசியில் இருந்து பாதுகாக்க ஐபி54 ரேட்டிங் உள்ளது.
கேமரா
ஒப்போ ஏ18 பிற்புறத்தில் டபுள் ரியர் கேமரா அமைப்பு உள்ளது. அதன்படி, 8 எம்பி மெயின் கேமரா மற்றும் 2 எம்பி மோனோ கேமரா உள்ளது. முன்புறம் செல்ஃபிக்காக 5 எம்பி கேமரா பொருத்தப்பட்டுள்ளது. இதில் நைட் மோட், போர்ட்ரெய்ட், டைம்-லாப்ஸ், ஸ்டிக்கர் மற்றும் கூகுள் லென்ஸ் போன்ற கேமரா அம்சங்களும் உள்ளன.
ஒப்போ ஏ2x ஸ்மார்ட்போனில் பின்புறம் எல்இடி ஃபிளாஷ் மற்றும் ஆட்டோஃபோகஸுடன் கூடிய 13 எம்பி மெயின் கேமரா, 2 எம்பி போர்ட்ரெய்ட் கேமரா என டபுள் ரியர் கேமரா அமைப்பு உள்ளது. முன்புறம் செல்ஃபி மற்றும் வீடியோ அழைப்புக்காக 5 எம்பி கேமரா உள்ளது.
பேட்டரி
188 கிராம் மற்றும் 8.16 மிமீ தடிமன் கொண்ட இந்த ஸ்மார்ட்போனில் 5,000 mAh திறன் கொண்ட லித்தியம் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. ஜியோமேக்னடிக் சென்சார், லைட் சென்சார், ஆப்டிகல் ப்ராக்ஸிமிட்டி சென்சார், ஸ்டெப் கவுண்டர் போன்ற சென்சார்கள் உள்ளது.
இது 3.5மிமீ ஹெட்ஃபோன் ஜாக், பக்கவாட்டில் பிங்கர் பிரிண்ட் ஸ்கேனர், புளூடூத் 5.3, வைஃபை 5, ஜிபிஎஸ் மற்றும் பிற அம்சங்களுடன் வருகிறது. ஒப்போ ஏ2x ஸ்மார்ட்போனில் 5,000 mAh திறன் கொண்ட பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 10 வாட்ஸ் சார்ஜிங் வசதி உள்ளது.
ஸ்டோரேஜ் மற்றும் விலை:
கிலோவிங் ப்ளூ, கிலோவிங் பிளாக் என இரண்டு வண்ணங்களில் கிடைக்கும் ஒப்போ ஏ18, இரண்டு வேரியண்ட்களில் அறிமுகமாகியுள்ளது. அதன்படி, 4 ஜிபி ரேம் + 64 ஜிபி ஸ்டோரேஜ் மற்றும் 4 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் என இரண்டு வேரியண்ட்கள் உள்ளது.
இதில் 64 ஜிபி வேரியண்ட்டை ரூ.9,999 என்ற விலையிலும், 128 ஜிபி வேரியண்ட்டை ரூ.11,499 என்ற விலையிலும் வாங்கிக்கொள்ளலாம். தற்போது ஒப்போ ஏ18 ஸ்மார்ட்போனின் ப்ரீ-ஆர்டர் தொடங்கியுள்ளது. இதனை ஃபிளிப்கார்ட் மற்றும் ஒப்போ இணையதளத்தில் முன்பதிவு செய்துகொள்ளலாம். அக்டோபர் 25 முதல் ஷிப்பிங் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெர்த் : பார்டர்-கவாஸ்கர் கோப்பை தொடரின் முதல் போட்டி இன்று பெர்த் மைதானத்தில் தொடங்கியது. இந்த போட்டியில் முதலில் டாஸ்…
சென்னை : 2025ஆம் ஆண்டுக்கான பொது விடுமுறை நாள்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, 2025-ஆம்…
பெர்த் : ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி பெர்த் மைதானத்தில் நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடி…
சென்னை : ஏ.ஆர்.ரஹ்மானும், சாய்ரா பானுவும் 29 வருட 29 வருட திருமண வாழ்க்கைக்குப் பிறகு விவாகரத்து செய்வதாக நவம்பர்…
மும்பை : அதானி குழுமம் மீது முன்னர் அமெரிக்காவை சேர்ந்த ஹிண்டன்பர்க் நிறுவனம் குற்றசாட்டை முன்வைத்தது அப்போது அந்த அறிக்கை…
சென்னை : ஏ.ஆர்.ரஹ்மானும் மனைவி சாய்ரா பானுவும் திருமணமாகி 29 ஆண்டுகளுக்குப் பிறகு பிரிந்து வாழ முடிவு செய்துள்ளதாகவும், இருவரும்…