மகிழ்ச்சியான செய்தி மக்களே ..! சாட் ஜிபிடியில் குரல் அம்சத்தை வெளியிட போகும் ஓபன் AI ..!
சாட் ஜிபிடி : அதிக தகவல்களை நொடி பொழுதில் தெரிந்து கொள்வதற்கு சாட் ஜிபிடி மிகவும் பயனுள்ளதாகவே இருந்து வருகிறது. இதை பயனர்களின் பயப்பட்டிற்கு கொண்டு வந்த போது இதனை உபயோகபடுத்திய பயனர்கள் ஒரு சிலர்,இது சிறப்பாக உள்ளது என கருத்துக்களை தெரிவித்தனர்.
மேலும் ஒரு சிலர் இதில் தெளிவான விளக்கங்களுடன் கேள்வி எழுப்பினாலே அது நமக்கு தகுந்த தகவலை தருகிறது எனவும் இதனால் அதை பயன்படுத்துவதற்கு சற்று கடினமாக உள்ளது எனவும் கருத்துக்களை தெரிவித்தனர். அதன்படி, குரல் மூலம் கேள்வி எழுப்பினால் நன்றாக இருக்கும் அது மேலும் எளிதாக அமையும் என கருத்தை முன்வைத்தனர்.
அதிக எதிர்பார்ப்புக்குப் பிறகு, ஓபன் AI இறுதியாக சாட் ஜிபிடியில் குரல் பயன்முறையை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. இந்த முயற்சியில் பல பின்னடைவை சந்தித்த பிறகு, சாட் ஜிபிடியில் மேம்பட்ட குரல் பயன்முறையை அறிமுகப்படுத்துகிறது. அதன்படி இதில் நாம் கேள்விகள், தகவல்கள் மற்றும் கதைகள் வரை நமக்கு பிடித்த மொழிகளில் கெடுக்கலாம் என கூறி உள்ளனர்.
இது தற்போது முதல் நிலையில் அதாவது தேர்வு நிலையில் இருப்பதால் படிப்படியாக மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என சாட் ஜிபிடி நிறுவனர்கள் கூறியுள்ளனர். இதில் 4 குரல்கள் உள்ளதாகவும் நம் தேவைக்கேற்ப எந்த குரல் வேண்டுமோ அதை பயன்படுத்தி கொள்ளலாம் எனவும்கூறுகின்றனர்.
அவை ப்ரீஸ், கோவ், எம்பர் மற்றும் ஜூனிபர் ஆகிய குரல்கள் ஆகும், இவை கடந்த 2023-ம் ஆண்டு ஓபன்ஏஐ இல் குரல் கொடுக்கும் நடிகர்களால் உருவாக்கப்பட்டதாகும் என்று தெரிவித்துள்ளனர்.
the long awaited Advanced Voice Mode
now beginning to roll out! https://t.co/DHgsm23A4R
— ChatGPT (@ChatGPTapp) July 30, 2024