இன்னும் 3 நாள் தான்.. இந்தியாவில் களமிறங்கும் புதிய ஒன்பிளேஸ்.. கசிந்த முக்கிய அம்சங்கள்!
OnePlus Nord CE4 : இன்னும் மூன்று நாட்களில் இந்தியாவில் அறிமுகமாகவுள்ள OnePlus Nord CE4 மாடலின் விலை விவரங்கள் கசிந்துள்ளது.
OnePlus நிறுவனம் இந்திய சந்தையில் தனது புதிய 5ஜி மாடலான OnePlus Nord CE 4 ஏப்ரல் 1 ஆம் தேதி அறிமுகம் செய்யவுள்ளது. இந்த OnePlus Nord CE 4 பட்ஜெட் பிரண்டலி ஸ்மார்ட்போனாக அறிமுகமாகவுள்ளது. இந்திய சந்தையில் ஏற்கனவே வெளியாகி சக்கபோடு போடும் OnePlus Nord CE2 மற்றும் OnePlus Nord CE3 5G இன் வரிசையில் OnePlus Nord CE 4 மொபைலானது புதிய மேம்படுத்தளுடன் களமிறங்க உள்ளது.
இந்த சூழலில் OnePlus Nord CE4 இந்தியாவில் இன்னும் 3 நாட்களில் அறிமுகமாக உள்ள நிலையில், விலை உள்ளிட்ட விவரங்கள் இணையத்தில் கசிந்துள்ளன. ஏற்கனவே வெளியான விவரங்கள் வெறும் தகவலாக இருந்த நிலையில், தற்போது விலை குறித்த உண்மையான விவரங்கள் வெளியாகியுள்ளது.
அதன்படி OnePlus Nord CE 4 இந்தியாவில் 8ஜிபி ரேம் + 128ஜிபி மாடல் ரூ.24,999 ஆரம்ப விலையில் வரும் என்றும் 8ஜிபி ரேம் + 256ஜிபி மாடலானது ரூ.26,999 விலை இருக்கும் எனவும் தெரிவிக்கப்படுகிறது. இருந்தாலும் நிறுவனம் தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வமாக விலை குறித்த விவரங்கள் அறிவிக்கப்படவில்லை.
கேமரா மற்றும் டிஸ்பிளே:
OnePlus Nord CE 4 மொபைலில் பின்புறத்தில் இரண்டு கேமராக்கள் மற்றும் ரிங் ஃப்ளாஷ்லைட்டை கொண்டுள்ளது. முதன்மை கேமரா எலக்ட்ரானிக் மற்றும் ஆப்டிகல் இமேஜ் ஸ்டேபிலைசேஷன் (OIS மற்றும் EIS) ஆகிய இரண்டையும் கொண்ட 50MP சென்சாரை கொண்டிருக்கும். இதுபோன்று, முன்பக்கம் 16MP கேமரா உள்ளது.
அதேசமயம் OnePlus Nord CE 4 ஆனது 6.7 இன்ச் ஃப்ளூயிட் AMOLED டிஸ்ப்ளேவுடன் 120Hz ரெஃப்ரஷ் ரேட்டுடன் வெளிவருகிறது. புதிய குவால்காம் ஸ்னாப்டிராகன் 7 ஜெனரல் 3 ப்ராசஸர், சிறந்த சிபியு மற்றும் ஜிபியு செயல்திறனை கொண்டுள்ளது. இருப்பினும் முழுமையான விவரங்கள் வெளியாகவில்லை.
வரவிருக்கும் OnePlus Nord CE 4 ஆனது Nord CE 3 உடன் ஒப்பிடும்போது 5,500mAh என்ற பெரிய பேட்டரி மற்றும் 100W SUPERVOOC ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவை கொண்டிருக்கும். மேலும், இந்த ஸ்மார்ட்போனில் 8GB LPDDR4x ரேம் கொண்டிருக்கும், இது மெய்நிகர் ரேம் மூலம் மேலும் 8GB வரை அதிகரிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.