ஒன்பிளஸ்-ன் முதல் போல்டபெல் ஸ்மார்ட்போன்..! எப்போது அறிமுகம்..? வெளியான தகவல்..!

Oneplus Fold

ஒன்பிளஸ் (OnePlus) நிறுவனம் அதன் முதல் போல்டபெல் ஸ்மார்ட்போனை ஆகஸ்ட் மாதம் அறிமுகம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஒன்பிளஸ் (OnePlus) நிறுவனம் தொடர்ந்து பலவித மாடல்களில் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்து வருகிறது. அந்தவகையில், தற்பொழுது போல்டபெல் ஸ்மார்ட்போன்கள் (Foldable Smartphone) மக்களிடையே பிரபலமாகி வரும் நிலையில், ஒன்பிளஸ் நிறுவனம் அதன் முதல் போல்டபெல் ஸ்மார்ட்போனை வரும் ஆகஸ்ட் மாதம் அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Oneplus
Oneplus [Image Source : Twitter/@Phandroid]

ஸ்மார்ட்போன்கள் உலகில் சாம்சங், கூகுள், மோட்டோரோலா, ஒப்போ மற்றும் டெக்னோ போன்ற நிறுவனங்கள் ஏற்கனவே போல்டபெல் ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தியுள்ளன. அந்தவகையில் ஒன்பிளஸ் நிறுவனம் ஒன்பிளஸ் போல்டு (OnePlus Fold) ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தி இந்த வரிசையில் இடம் பிடிக்க உள்ளது.

ஒன்பிளஸ் போல்டு டிஸ்பிளே (OnePlus Fold display):

ஒன்பிளஸ் போல்டு ஸ்மார்ட்போன், 8-இன்ச் QHD+ OLED மெயின் ஸ்கிரீன் மற்றும் வெளிப்புறம் FHD+ தெளிவுத்திறனுடன் கூடிய 6.5 இன்ச் OLED டிஸ்பிளேவுடன் வரும் என்று கூறப்படுகிறது. இது 120Hz ரெபிரேசிங் ரெட்டை (refresh rate) கொண்டிருக்கலாம்.

Oneplus
Oneplus [Image Source : Twitter/@RootNationUA]

ஒன்பிளஸ் போல்டு பிராசஸர் (OnePlus Fold Processor):

இந்த ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென்2 SoC பிராசஸருடன், ஆண்ட்ராய்டு 13 மூலம் இயக்கப்படுகிறது. அதனுடன் நிறுவனத்தின் சொந்த OxygenOS 13.1 உள்ளது.

OnePlus Fold
OnePlus Fold [Image Source : Twitter/ @4pdaru]

ஒன்பிளஸ் போல்டு கேமரா (OnePlus Fold Camara):

இதன் பின்புற கேமரா அமைப்பில் OIS உடன் 50 மெகாபிக்சல் முதன்மை கேமரா, 48 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட்-ஆங்கிள் லென்ஸ் மற்றும் 32 மெகாபிக்சல் பெரிஸ்கோப் லென்ஸ் ஆகியவை அடங்கும். முன்பக்கம் வீடியோ அழைப்பு மற்றும் செல்ஃபிக்களுக்காக 32 மெகாபிக்சல் கேமரா உள்ளது.

OnePlus Fold
OnePlus Fold [Image Source : Twitter/@TechStyle_47]

ஒன்பிளஸ் போல்டு பேட்டரி & நினைவகம் (OnePlus Fold Battery & Storage):

பேட்டரியைப் பொறுத்தவரை, ஒன்பிளஸ் போல்டு ஸ்மார்ட்போன் 4,800mAh பேட்டரியைக் கொண்டிருக்கும். இது 80 வாட் சார்ஜிங் ஆதரவை வழங்குவதாக கூறப்படுகிறது. மேலும், 16 ஜிபி ரேம் மற்றும் 512 ஜிபி வரை நினைவகத்தை கொண்டிருக்கலாம். இதன் விலை குறித்து இதுவரை எந்த தகவலும் இல்லை.

Oneplus Fold
Oneplus Fold [Image Source : Twitter/ @gagadget_de]

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்