OnePlusPadGo: அறிமுகத்திலேயே அசத்தும் ஒன்பிளஸ் பேட் கோ டேப்லெட்.! ப்ரீ ஆர்டரிலேயே ரூ.2,000 தள்ளுபடி.!

OnePlus Pad Go

ஒன்பிளஸ் நிறுவனம் தனது பயனர்களுக்காக புதுப்புது தயாரிப்புகளை சந்தைகளில் அறிமுகம் செய்து வருகிறது. அந்தவகையில் தற்போது ஒன்பிளஸ் பேட் கோ (OnePlus Pad Go) டேப்லெட்டை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த டேப்லெட் ஆனது சந்தைகளில் விற்பனையாகி வரும் ஒன்பிளஸ் பேட்-இன் வடிவமைப்புடன், டிஸ்பிளே, பிராசஸர் மற்றும் விலையில் மாற்றங்கள் செய்யப்பட்டு அறிமுகமாகியுள்ளது.

டிஸ்பிளே:

ப்ளூ-லைட் ஃபில்டர் பாதுகாப்புடன் 2408 x 1720 பிக்சல் ரெசல்யூஷன் கொண்ட 11.35 இன்ச் (28.85 செமீ) அளவுள்ள ஐ-கேர் எல்சிடி டிஸ்பிளே ஒன்பிளஸ் பேட் கோ டேப்லெட்டில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த டிஸ்பிளே 90 ஹெர்ட்ஸ் வரையிலான ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 180 ஹெர்ட்ஸ் வரையிலான டச் சம்ப்ளிங் ரேட்டைக் கொண்டுள்ளதால், பயன்படுத்துவதற்கு அருமையாக இருக்கும். இதில் 400 நிட்ஸ் வரையிலான பிரைட்னஸ் உள்ளது.

பிராசஸர்:

ஒன்பிளஸ் பேட் ஆனது மீடியாடெக் டைமன்சிட்டி 9000 பிராசஸர் மூலம் இயக்கப்படுகிறது. ஆனால், ஒன்பிளஸ் பேட் கோவில் மாலி-ஜி 57 எம்பி2 ஜிபியு உடன் இணைக்கப்பட்ட மீடியாடெக் ஹீலியோ ஜி99 சிப்செட் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆன்ட்ராய்டு 13 மூலம் இயக்கப்படும் இந்த டேப்லெட்டில் ஆக்சிஜன்ஓஎஸ் 13.2 உள்ளது. மேலும், வைஃபை 5, புளூடூத் 5.2, ஜியோமேக்னடிக் சென்சார், லைட் சென்சார், கைரோஸ்கோப், ஹால் சென்சார் போன்றவை உள்ளன.

கேமரா:

இதன் கேமராவைப் பொறுத்தவரையில் பின்பிறத்தில் 8 எம்பி கேமராவும், முன்புறத்தில் செல்ஃபி மற்றும் வீடியோ அழைப்புகளுக்காக 8 எம்பி கேமராவும் பொருத்தப்பட்டுள்ளது. இந்த கேமரா  மூலம் 1080 பிக்சல் முதல் 720 பிக்சல் வரை தெளிவுடன் கூடிய வீடியோவை எடுக்க  முடியும். அதோடு, இதில் எலக்ட்ரானிக் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (EIS) உள்ளதால் வீடியோ எடுக்கும் போது நடுக்கங்கள் இல்லாமல் இருக்கும்.

பேட்டரி:

532 கிராம் எடை மற்றும் 6.89 மிமீ தடிமன் கொண்ட ஒன்பிளஸ் பேட் கோவில், நீண்ட நேர பயன்பாட்டிற்காக 8000 mAh திறன் கொண்ட லித்தியம் – அயன் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இந்த பெரிய பேட்டரியைச் சார்ஜ் செய்ய டைப்-சி போர்டுடன் கூடிய 33 வாட்ஸ் சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது. இதனால் டேப்லெட்டை 30 லிருந்து 45 நிமிடத்திற்குள் 100 சதவீதம் சார்ஜ் செய்யலாம்.

ஸ்டோரேஜ் மற்றும் விலை:

டால்பி அட்மாஸ் குவாட் ஸ்டீரியோ ஸ்பீக்கர்களுடன் ட்வின் மின்ட் வண்ணத்தில் கிடைக்கும் இந்த டேப்லெட் 3 வேரியண்ட்டுகளில் உள்ளது. அதன்படி, வைஃபையுடன் கூடிய 8 ஜிபி ரேம் + 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் கொண்ட ஒன்பிளஸ் பேட் கோ விலை ரூ.19,999 ஆகும். மேலும், எல்டிஇ (LTE) உடன் கூடிய 8 ஜிபி ரேம் + 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ், எல்டிஇ (LTE) உடன் கூடிய 8 ஜிபி ரேம் + 256 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் கொண்ட வேரியண்ட்டுகளில், 128 ஜிபி வேரியண்ட் விலை ரூ.21,999 ஆகவும், 256 ஜிபி வேரியண்ட் விலை ரூ.23,999 ஆகவும் உள்ளது.

சலுகைகள்:

ஒன்பிளஸ் பேட் கோ அக்டோபர் 20 ஆம் தேதி முதல் விற்பனைக்கு கிடைக்கும். அமேசான், பிளிப்கார்ட், ஒன்பிளஸ் போன்ற ஆன்லைன் ஸ்டோர்கள் மற்றும் ஒன்பிளஸ் எக்ஸ்பீரியன்ஸ் ஸ்டோர்களில் அக்டோபர் 12 ஆம் தேதி மதியம் 12 மணி முதல் ப்ரீ ஆர்டர் செய்து கொள்ளலாம்.

ஒன்பிளஸ் பேட் கோவை ப்ரீ ஆர்டர் செய்யும் வாடிக்கையாளர்கள் அக்டோபர் 12 முதல் ரூ.2,000 உடனடி வங்கி தள்ளுபடியைப் பெறலாம். எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் அமேசானில் வங்கிச் சலுகைகளைப் பெறலாம். ஐசிஐசிஐ வங்கி, கோடக் வங்கி மற்றும் ஆக்சிஸ் வங்கி வாடிக்கையாளர்கள் பிளிப்கார்ட்டில் வங்கிச் சலுகைகளைப் பெறலாம்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்