இந்தியாவில் களமிறங்கும் ஒன்பிளஸ் வாட்ச் 2.! எப்போ வெளியீடு தெரியுமா.?

OnePlus Watch 2

கடந்த 2021ம் ஆண்டு ஒன்பிளஸ் (OnePlus) நிறுவனம் அதன் பிரீமியம் ஸ்மார்ட்வாட்ச்சான ‘ஒன்பிளஸ் வாட்ச்’ -ஐ (OnePlus Watch) இந்தியாவில் அறிமுகம் செய்தது. இப்போது அதன் வாரிசான ‘ஒன்பிளஸ் வாட்ச் 2’ -ஐ (OnePlus Watch 2) வெளியிடத் தயாராகி வருகிறது.  அதன்படி, வரும் டிசம்பர் 4ம் தேதி ஒன்பிளஸ் நிறுவனத்தின் 10வது ஆண்டு விழா சீனாவில் நடைபெறவுள்ளது.

இந்த விழாவை முன்னிட்டு டிசம்பர் 5ம் தேதி ஒன்பிளஸ் 12, ஒன்பிளஸ் 12 ஆர் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்யவுள்ளது. இதனுடன் சேர்த்து ஒன்பிளஸ் வாட்ச் 2-வும் வெளியாகலாம். இதன்பிறகு ஒன்பிளஸ் 12 ஆனது ஜனவரி 24, 2024 அன்று இந்தியா உட்பட உலகளவில் அறிமுகப்படுத்தப்படலாம். அப்போது இந்தியாவில் ஒன்பிளஸ் வாட்ச் 2 அறிமுகமாகலாம்.

5,400mAh பேட்டரி..1 டிபி ஸ்டோரேஜ்.! ஒன்பிளஸ் 12-ன் அறிமுக தேதி இதுதான்..?

இதற்கிடையில் இந்த வாட்ச் 2 வின் வடிவமைப்புகள் மற்றும் சில விவரக்குறிப்புகள் இணையத்தில் கசிந்துள்ளன. அதைவைத்துப் பார்க்கையில் முந்தைய மாடலில் உள்ளது போல வட்ட வடிவ டயல் உள்ளது. ஒரு உலோக சேஸ் மற்றும் டயலின் வலது பக்கத்தில் அமைந்துள்ள இரண்டு பொத்தான்களைக் கொண்டிருப்பதாகத் தெரிகிறது.

ஒன்பிளஸ் வாட்ச் 2 ஆனது 1.43 இன்ச் அமோலெட் டிஸ்ப்ளேவைக் கொண்டிருக்கலாம். இது குவால்காம் ஸ்னாப்டிராகன் டபிள்யூ5 ஜென் 1 சிப்செட் மூலம் இயக்கப்படும். சார்ஜிங் கனெக்டருடன் டிஸ்பிளேயின் அடிப்பக்கத்தில் தேவையான அனைத்து ஹெல்த் சென்சார்களையும் கொண்டிருக்கலாம்.

உலகளவில் களமிறங்கும் ஒன்பிளஸ் 12.! எப்போ தெரியுமா.?

அதன்படி பிளட் ஆக்சிஜன், பாரோமீட்டர் , ஸ்ட்ரெஸ், ஸ்லீப், ஸ்போர்ஸ்ட் மோட் போன்றவைகள் உள்ளன. இது கருப்பு மற்றும் வெள்ளை என இரண்டு வண்ணங்களில் ரப்பர் ஸ்ட்ராப்புகளைக் கொண்டிருக்கும். இது வியர் ஓஎஸ் 4-இல் (Wear OS 4) இயங்கும் என்று கூறப்படுகிறது. இந்த தகவல்கள் அனைத்தும் ஒன்பிளஸ் நிறுவனத்தால் அதிகாரபூர்வமாகத் தெரிவிக்கவில்லை.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

donald trump tariffs
tn rain
Kane Williamson
waqfboard - tvk vijay
Trump's tariffs full list
trump tariffs
tariffs trump