தொழில்நுட்பம்

OnePlus Open: கேமராவே பட்டய கிளப்புதே..! சோனியின் புதிய சென்சாருடன் அறிமுகமாகும் ஒன்பிளஸ் ஓபன்.!

Published by
செந்தில்குமார்

ஒன்பிளஸ் நிறுவனம் தனது முதல் ஃபோல்டபிள் ஸ்மார்ட்போனான ஒன்பிளஸ் ஓபனை நாளை (அக்டோபர் 19ம் தேதி) இந்தியாவில் அறிமுகம் செய்யத் தயாராகி வருகிறது. முன்னதாக, இந்த ஸ்மார்ட்போனின் அறிமுகம் குறித்து பல குழப்பங்கள் இருந்த நிலையில், அறிமுகத்தை உறுதிப்படுத்தும் விதமாக கடந்த அக்-11ம் தேதி தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவிட்டது.

அதில் அக்-19 அன்று இரவு 7.30 மணிக்கு மும்பையில் நடைபெறும் நிகழ்வில் இந்தியா உட்பட உலகளவில் வெளியிடப்போவதாக ஒன்பிளஸ் தெரிவித்துள்ளது. அறிமுகம் உறுதிசெய்யப்பட்ட பின்பும் ஸ்மார்ட்போனின் விவரங்களை ஒன்பிளஸ் வெளியிடவில்லை. இருந்தும் அறிமுகத்திற்கு முன்னதாக ஒன்பிளஸ் ஓபனின் விவரங்கள் சமூக ஊடகங்களில் கசியத் தொடங்கியுள்ளன.

அதன்படி, டிப்ஸ்டர் யோகேஷ் ப்ரார் தனது எக்ஸ் பக்கத்தில் ஒன்பிளஸ் ஓபன் ஸ்மார்ட்போனின் டிஸ்பிளே மற்றும் கேமரா குறித்த விவரங்களை வெளியிட்டுள்ளார். ஒன்பிளஸ் மற்றும் ஒப்போ இணைந்து உருவாக்குவதாக கூறப்படும் இந்த ஸ்மார்ட்போன், சந்தைகளில் பிரபலமாக இருக்கும் சாம்சங்கின்  கேலக்ஸி இசட் ஃபோல்ட் 5 ஸ்மார்ட்போனுக்குப் போட்டியாக களமிறங்கவுள்ளது.

OnePlus Open: அறிவிப்பு வந்துருச்சி..இந்த தேதியில்தான் வெளியீடு.! ஒன்பிளஸின் முதல் ஃபோல்டபிள் ஸ்மார்ட்போன்.!

டிஸ்பிளே

ஒன்பிளஸ் ஓபன் ஸ்மார்ட்போன் ஆனது 2K ஹைரெசல்யூஷன் கொண்ட 7.8 இன்ச் லிக்குய்ட்  அமோலெட் மெயின் டிஸ்ப்ளேவுடன் வரலாம். அதோடு வெளிப்புறம் 1116×2484 பிக்சல்கள் ரெசல்யூஷன் கொண்ட 6.3 அளவுடைய எஃப்எச்டி பிளஸ் அமோலெட் கவர் டிஸ்பிளேவுடன் வரலாம்.

இந்த இரண்டு டிஸ்ப்ளேவும் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 2,800 நிட்ஸ் வரையிலான பீக் பிரைட்னெஸ் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. டால்பி விஷன் ஆதரவுடன் வருவதால் படங்கள் பார்க்கும்போது சிறப்பான அனுபவம் கிடைக்கும். இந்த ஸ்மார்ட்போன் மூடிய நிலையில் இருக்கும்போது, மெயின் மற்றும் கவர் டிஸ்பிளே ஆகிய இரண்டிற்கும் எந்த இடைவெளியும் இருக்காது என கூறப்படுகிறது.

பிராசஸர்

அட்ரினோ ஜிபியு உடன் இணைக்கப்பட்ட குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 சிப்செட் ஆனது ஒன்பிளஸ் ஓபன் ஸ்மார்ட்போனில் பொருத்தப்படலாம். ஆண்ட்ராய்டு 13 அல்லது புதிதாக அறிமுகமான ஆண்ட்ராய்டு 14 மூலம் இயக்கப்படும் இந்த ஸ்மார்ட்போனில் நிறுவனத்தின் சொந்த ஆக்ஸிஜன் ஓஎஸ் 13.1 உள்ளது. இந்த பிராஸசர் மூலம் உயர்தர கிராஃபிக்ஸ் கொண்ட கேம்களைத் தடை இல்லாமல் விளையாட முடியும்.

கேமரா

தற்போது வெளியாகியத் தகவலின்படி ஒன்பிளஸ் ஓபன் பின்புறத்தில் வட்ட வடிவ ட்ரிப்பில் ரியர் கேமரா அமைப்பு இருக்கலாம். அதில் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் மற்றும் சோனியின் லிடியா-டி808 (Sony LYTIA-T808) சென்சார் கொண்ட 48 எம்பி மெயின் கேமரா உள்ளது.

மேலும், சோனி ஐஎம்எக்ஸ்581 சென்சார் கொண்ட 48 எம்பி அல்ட்ரா-வைட்-ஆங்கிள் கேமரா மற்றும் ஓம்னிவிஷன் ஓவி64பி சென்சார் மற்றும் 3x ஆப்டிகல் ஜூம் கொண்ட 64 எம்பி டெலிஃபோட்டோ கேமரா ஆகியவை அடங்கும்.

சோனியின் லிடியா சென்சார் கொண்ட முதல் ஸ்மார்ட்போன் இது ஆகும். செல்ஃபி மற்றும் வீடியோ அழைப்புகளுக்காக உள்பக்கம் 20 எம்பி கேமரா மற்றும் வெளிப்பக்கம் 32 எம்பி கேமரா பொருத்தப்படலாம்.

OnePlus Open: விரைவில் இந்தியாவில்..டீசர் வெளியிட்டு உறுதிப்படுத்திய ஒன்பிளஸ்.! என்ன மாடல் தெரியுமா.?

பேட்டரி

இந்த ஸ்மார்ட்போனை அதிக நேரம் பயன்படுத்துவதற்கு 4,805 mAh திறன் கொண்ட லித்தியம் பாலிமர் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இந்த பேட்டரியை வேகமாக சார்ஜ் செய்ய 100 வாட்ஸ் சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது. இதனால் ஒன்பிளஸ் ஓபன் ஸ்மார்ட்போன் பேட்டரியை 100 சதவீதம் சார்ஜ் செய்ய 10 முதல் 15 நிமிடங்கள் ஆகும் என்று கூறப்படுகிறது.

ஸ்டோரேஜ்  மற்றும் விலை

எமரால்டு எக்லிப்ஸ் மற்றும் வோயேஜ் பிளாக் ஆகிய இரண்டு வண்ணங்களில் ஒன்பிளஸ் ஓபன் அறிமுகமாகலாம். இதில் 12 ஜிபி முதல் 16 ஜிபி ரேம் மற்றும் 512 ஜிபி முதல் 1 டிபி வரையிலான இன்டெர்னல் ஸ்டோரேஜ் இருக்கலாம். இந்த ஸ்மார்ட்போன் இந்தியாவில் ரூ.1,10,000 முதல் ரூ.1,41,490 என்ற விலையில் விற்பனைக்கு வரலாம்.

ஆனால், சாம்சங் கேலக்சி இசட் ஃபோல்ட் 5 ஸ்மார்ட்போனிற்கு போட்டியாக களமிறங்குவதால் ஒன்பிளஸ் ஓபன், இதை விட குறைவாக இருக்கலாம். தற்போது இசட் ஃபோல்ட் 5 ஆனது ரூ.1,20,000 என்ற விலையில் விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
செந்தில்குமார்

Recent Posts

இந்தியா – பாகிஸ்தான் போட்டி: சென்னை கடற்கரையில் சிறப்பு ஏற்பாடு.!

சென்னை : இன்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா VS பாகிஸ்தான் போட்டி துபாயில் நடைபெறுகிறது. துபாயில் பிற்பகல் 2.30 மணிக்கு…

11 minutes ago

AUSvENG : ருத்ர தாண்டவம் ஆடிய ஆஸ்திரேலியா! போராடி தோற்ற இங்கிலாந்து!

லாகூர் : பாகிஸ்தானில் நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இன்றைய நாள் ஆட்டத்தில் ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான ஆஸ்திரேலியா அணியும்,…

12 hours ago

மீண்டும் மீண்டுமா?  அஜித்-ன் GBU புது அப்டேட்..! குழப்பத்தில் ரசிகர்கள்!

சென்னை : அஜித்குமார் நடிப்பில் இறுதியாக வெளியான விடாமுயற்சி திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இதனால் இப்படம் எதிர்பார்த்த வெற்றியை…

14 hours ago

AUSvENG : முடிஞ்சா தொட்டுப்பார்.! வெளுத்து வாங்கிய பென் டக்கெட்! ஆஸி.க்கு இமாலய இலக்கு!

லாகூர் : பாகிஸ்தானில் நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இன்றைய நாள் ஆட்டத்தில் ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான ஆஸ்திரேலியா அணியும்,…

16 hours ago

இது எங்க பாட்டு இல்ல., பாகிஸ்தானில் ஒலித்த ‘ஜன கன மன..,’ குழம்பிய ஆஸி. வீரர்கள்!

லாகூர் : 2025 சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நடத்தி வருகிறது. பாகிஸ்தானுக்கு இந்திய கிரிக்கெட்…

18 hours ago

ச்சீ, இதுதான் காரணமா? எலான் மஸ்க் மகனால் டிரம்ப் அலுவலகத்திற்கு புதிய மேஜை?

வாஷிங்டன்: அமெரிக்கா ஜனாதிபதியாக பொறுப்பேற்ற பிறகு டொனால்ட் டிரம்ப் செய்யும் அடுத்தடுத்த அதிரடி மாற்றங்கள் உலக அரசியலையே திரும்பி பார்க்க…

19 hours ago