ஒன்பிளஸ் நிறுவனம் அதன் புதிய போல்டபெல் ஸ்மார்ட்போனை இந்திய சந்தைகளில் அறிமுகம் செய்யத் தயாராகி வருகிறது. இதுவரை ஒன்பிளஸ் ஓபன் ஸ்மார்ட்போனின் அறிமுகம் குறித்த உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் மட்டுமே வெளிவந்த நிலையில், தற்போது ஒன்பிளஸ் அதனை அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளது.
அதன்படி, ஒன்பிளஸ் தற்போது ஒன்பிளஸ் ஓபன் ஸ்மார்ட்போனின் டீஸர் படத்தை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. இது ஒன்பிளஸின் முதல் போல்டபெல் ஸ்மார்ட்போன் ஆகும். இந்த டீசர் படத்தை தவிர ஒன்பிளஸ், இந்த ஸ்மார்ட் போனின் எந்த ஒரு விவரத்தையும் வெளியிடவில்லை. ஆனால் இதன் சில அம்சங்கள் சமூக வலைத்தளங்களில் கசிந்திருந்தது.
டிஸ்பிளே
ஒன்பிளஸ் ஓபன் ஸ்மார்ட்போன் ஆனது 2268×2440 பிக்சல் ஹைரெசல்யூஷன் கொண்ட 7.8 இன்ச் அளவுள்ள க்யூஎச்டி பிளஸ் அமோலெட் மெயின் டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது. அதோடு வெளிப்புறம் 1116×2484 பிக்சல்கள் ரெசல்யூஷன் கொண்ட 6.3 அளவுடைய எஃப்எச்டி பிளஸ் அமோலெட் டிஸ்பிளேவுடன் வரும் என்று கூறப்படுகிறது.
இந்த இரண்டு டிஸ்ப்ளேவும் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் மூடிய நிலையில் இருக்கும்போது, மெயின் மற்றும் கவர் டிஸ்பிளே ஆகிய இரண்டிற்கும் எந்த இடைவெளியும் இருக்காது.
பிராசஸர்
அட்ரினோ ஜிபியு உடன் இணைக்கப்பட்ட குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 சிப்செட் ஆனது ஒன்பிளஸ் ஓபன் ஸ்மார்ட்போனில் பொருத்தப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு 13 அல்லது புதிய ஆண்ட்ராய்டு 14 மூலம் இயக்கப்படும் இந்த ஸ்மார்ட்போனில் நிறுவனத்தின் சொந்த ஆக்ஸிஜன் ஓஎஸ் 13.1 உள்ளது.
கேமரா
பெரும்பாலான ஒன்பிளஸ் பயனர்கள் கேமராவிற்காகவே இந்த ஸ்மார்ட்போனை வாங்குவார்கள் என்பதனால், இதில் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் அம்சம் கொண்ட 48 எம்பி மெயின் கேமரா, 48 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட்-ஆங்கிள் கேமரா மற்றும் 3x ஆப்டிகல் ஜூம் கொண்ட 64 மெகாபிக்சல் டெலிஃபோட்டோ கேமரா ஆகியவற்றைக் கொண்ட வட்ட வடிவ ட்ரிப்பில் ரியர் கேமரா அமைப்பு உள்ளதாக கூறப்படுகிறது. செல்ஃபி மற்றும் வீடியோ அழைப்புகளுக்காக 32 எம்பி கேமரா உள்ளது.
பேட்டரி
ஒன்பிளஸ் ஓபன் ஸ்மார்ட்போனை அதிக நேரம் பயன்படுத்துவதற்கு 4,800 mAh திறன் கொண்ட பேட்டரி ஆனது பொருத்தப்பட்டுள்ளது. இந்த பேட்டரியை சீக்கிரமாக சார்ஜ் செய்ய 100 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது. இதனால் பேட்டரியை பூஜ்ஜியத்திலிருந்து 100 சதவீதம் சார்ஜ் செய்ய 20 முதல் 30 நிமிடங்கள் மட்டுமே ஆகும் என்று கூறப்படுகிறது.
ஸ்டோரேஜ் மற்றும் விலை
ஒன்பிளஸ் ஓபன் ஸ்மார்ட்போனில் 16 ஜிபி ரேம் மற்றும் 1 டிபி வரையிலான ஸ்டோரேஜ் இருக்கலாம். ஒன்பிளஸ் ஓபன் இந்தியாவில் ரூ.1,10,000 முதல் ரூ.1,20,000 என்ற விலையில் விற்பனைக்கு வரலாம். இது சாம்சங் கேலக்சி Z போல்டு 5 ஐ விட குறைவாக இருக்கும். கேலக்சி Z போல்டு 5 ஆனது ரூ.1,20,000 என்ற விலையில் விற்பனையாகி வருகிறது.
வெளியீடு:
இந்த ஒன்பிளஸ் ஓபன் ஆனது அக்டோபர் இரண்டாம் பாதியில், அதாவது அக்டோபர் 19ம் தேதி அறிமுகப்படுத்தப்படும் என்று முன்னர் சில தகவல்கள் வெளிவந்தது. இந்த நிலையில், தற்போது அறிமுகத்தை உறுதிப்படுத்தும் விதமாக இந்த டீஸர் புகைப்படத்தை ஒன்பிளஸ் வெளியிட்டுள்ளது. ஆனால் அதிகாரப்பூர்வ அறிமுக தேதியை அறிவிக்கவில்லை. ஒன்பிளஸ் ஓபன் ஆனது ஒன்பிளஸ் மற்றும் ஒப்போ இணைந்து உருவாக்குகிறது என்று கூறப்படுகிறது குறிப்பிடத்தக்கது.
சென்னை : காலகலப்பு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் நடிகர் கோதண்டராமன். இவர் கடந்த சில நாட்களாகவே உடல் நிலை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகமே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இயங்கி வருகிறது. ஒருபக்கம், அம்பேத்கரை அமித்ஷா அவமதித்துவிட்டார் என காங்கிரஸ்…
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன அதன் பலன்கள் மற்றும் சிறப்புகளை இந்த செய்து குறிப்பில் காணலாம் . சென்னை :சிவபெருமானுக்கு…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் மற்றும் பாஜக எம்பிக்கள் தனி தனியாக ஆர்ப்பாட்டத்தில்…
டெல்லி : போனை தயாரிக்கும் வளர்ச்சியில் இந்தியா தற்போது அசுரத்தனமான வளர்ச்சியை கண்டுள்ளதாக கூறப்படுகிறது. ஏனென்றால். இந்தியாவில் தயாரிக்கப்படும் மொபைல் போன்களை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற கூட்டத்தொடர் சமயத்தில் ஓடிசா மாநிலம் பால்சோர் மக்களவை தொகுதி பாஜக எம்பி பிரதாப் சந்திர…