OnePlus Open: சாம்சங் இசட் ஃபோல்ட்க்கு போட்டியா.? 5கேமரா, 16ஜிபி ரேம்..அறிமுகமானது ஒன்பிளஸ் ஓபன்.!

OnePlusOpen

ஒன்பிளஸ் நிறுவனம் தனது முதல் ஃபோல்டபிள் ஸ்மார்ட்போனான ஒன்பிளஸ் ஓபனை அக்டோபர் 19ம் தேதி அறிமுகம் செய்வதாக தெரிவித்திருந்தது. அதன்படி, இரவு 7.30 மணியளவில் மும்பையில் நடைபெற்ற நிகழ்வில் இந்தியா உட்பட உலகளவில் ஒன்பிளஸ் ஓபன் ஸ்மார்ட்போனை வெளியிட்டுள்ளது.

ஏற்கனவே ஒன்பிளஸ் ஓபன் போன்ற வடிவமைப்புடன் ஒப்போவின் பைண்ட் என்3 எனப்படும் ஃபோல்டபிள் ஸ்மார்ட்போன் அறிமுகமானது. இந்த நிலையில் ஒன்பிளஸ் மற்றும் ஒப்போ இணைந்து உருவாக்கியதாக கூறப்படும் இந்த ஸ்மார்ட்போன், பிரபலமாக இருக்கும் சாம்சங் கேலக்ஸி இசட் ஃபோல்ட் 5 ஸ்மார்ட்போனுக்குப் போட்டியாக களமிறங்கவுள்ளதாக கூறப்படுகிறது.

OnePlus Open: அறிவிப்பு வந்துருச்சி..இந்த தேதியில்தான் வெளியீடு.! ஒன்பிளஸின் முதல் ஃபோல்டபிள் ஸ்மார்ட்போன்.!

டிஸ்பிளே

ஒன்பிளஸ் ஓபன் ஸ்மார்ட்போன் ஆனது 2K ஹைரெசல்யூஷன் கொண்ட 7.82 இன்ச் லிக்குய்ட்  அமோலெட் மெயின் டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது. இது 240 ஹெர்ட்ஸ் டச் ரெஸ்பான்ஸ் ரேட்டையும் கொண்டுள்ளது. அதோடு வெளிப்புறம் 1116×2484 பிக்சல்கள் ரெசல்யூஷன் கொண்ட 6.3 அளவுடைய எஃப்எச்டி பிளஸ் அமோலெட் கவர் டிஸ்பிளேவுடன் வரலாம்.

இந்த இரண்டு டிஸ்ப்ளேவும் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 2,800 நிட்ஸ் வரையிலான பீக் பிரைட்னெஸ் கொண்டுள்ளது. டால்பி விஷன் ஆதரவுடன் வருவதால் படங்கள் பார்க்கும்போது சிறப்பான அனுபவம் கிடைக்கும். இந்த ஸ்மார்ட்போன் மூடிய நிலையில் இருக்கும்போது, மெயின் மற்றும் கவர் டிஸ்பிளே ஆகிய இரண்டிற்கும் எந்த இடைவெளியும் இருக்காது என கூறப்படுகிறது.

பிராசஸர்

ஒன்பிளஸ் ஓபன் ஸ்மார்ட்போனில் அட்ரினோ ஜிபியு உடன் இணைக்கப்பட்ட குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 சிப்செட் பொருத்தப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு 13 அடைப்படையில் இயங்கக்கூடிய இந்த ஸ்மார்ட்போனில் நிறுவனத்தின் சொந்த ஆக்ஸிஜன் ஓஎஸ் 13.1 உள்ளது.

இந்த பிராஸசர் மூலம் உயர்தர கிராஃபிக்ஸ் கொண்ட கேம்களைத் தடை இல்லாமல் விளையாட முடியும். மேலும், 5ஜி சப்போர்ட், வைஃபை 7, வைஃபை 6இ, புளூடூத் 5.3 சைடு மௌன்ட்டெட் பிங்கர் பிரிண்ட் சென்சார் மற்றும் அலர்ட் ஸ்லைடர் போன்றவை உள்ளன.

கேமரா

ஒன்பிளஸ் ஓபன் பின்புறத்தில் வட்ட வடிவ ட்ரிப்பில் ரியர் கேமரா அமைப்பு உள்ளது. அதில் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் மற்றும் சோனியின் லிடியா-டி808 (Sony LYTIA-T808) சென்சார் கொண்ட 48 எம்பி மெயின் கேமரா உள்ளது.

மேலும், சோனி ஐஎம்எக்ஸ்581 சென்சார் கொண்ட 48 எம்பி அல்ட்ரா-வைட்-ஆங்கிள் கேமரா மற்றும் ஓம்னிவிஷன் ஓவி64பி சென்சார் மற்றும் 3x ஆப்டிகல் ஜூம் கொண்ட 64 எம்பி டெலிஃபோட்டோ கேமரா ஆகியவை அடங்கும்.

சோனியின் லிடியா சென்சார் கொண்ட முதல் ஸ்மார்ட்போன் இது ஆகும். செல்ஃபி மற்றும் வீடியோ அழைப்புகளுக்காக உள்பக்கம் 20 எம்பி கேமரா மற்றும் வெளிப்பக்கம் 32 எம்பி கேமரா பொருத்தப்பட்டுள்ளது.

OnePlus Open: கேமராவே பட்டய கிளப்புதே..! சோனியின் புதிய சென்சாருடன் அறிமுகமாகும் ஒன்பிளஸ் ஓபன்.!

பேட்டரி

239 கிராம் எடை கொண்ட இந்த ஸ்மார்ட்போனில் அதிக நேரம் பயன்பாட்டிற்காக 4,805 mAh திறன் கொண்ட லித்தியம் பாலிமர் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இந்த பேட்டரியை வேகமாக சார்ஜ் செய்ய 67 வாட்ஸ் சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது. இதனால் ஒன்பிளஸ் ஓபன் ஸ்மார்ட்போன் பேட்டரியை 100 சதவீதம் சார்ஜ் செய்ய 42 நிமிடங்கள் ஆகும்.

ஸ்டோரேஜ்  மற்றும் விலை

எமரால்டு எக்லிப்ஸ் மற்றும் வோயேஜ் பிளாக் ஆகிய இரண்டு வண்ணங்களில் அறிமுகமாகவுள்ள ஒன்பிளஸ் ஓபன், 16 ஜிபி ரேம் + 512 இன்டெர்னல் ஸ்டோரேஜுடன் வெளியாகியுள்ளது. இந்த வேரியண்ட் ஸ்மார்ட்போன் இந்தியாவில் ரூ.1,39,999 என்ற விலையில் விற்பனைக்கு வரவுள்ளது.

இந்த ஸ்மார்ட்போனிற்கு நான்கு வருட ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் 5 வருட செக்யூரிட்டி அப்டேட் தரப்படும். இதற்கான ப்ரீ ஆர்டர் இன்று முதல் தொடங்குகிறது. இதன் விற்பனை ஒன்பிளஸ் ஓபன் விற்பனை அக்டோபர் 26ம் தேதி முதல் தொடங்கும் என்று ஒன்பிளஸ் தெரிவித்துள்ளது. இதற்கு போட்டியாளராக உள்ள சாம்சங் கேலக்சி இசட் ஃபோல்ட் 5 ஸ்மார்ட்போனின் 12 ஜிபி வேரியண்ட் ரூ.1,54,999 என்ற விலையில் விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 19122024
Jitin Prasada
Congress MP Rahul Gandhi - BJP MP Pratap Chandra Sarangi
suriya and bala
Congress MPs - BJP MPs Protest in Parliament
Protest against Amit shah speech
GOLD PRICE