கம்மியான விலையில் தரமான ‘OnePlus Nord 3’ ஸ்மார்ட்போன்..! அப்படி என்ன இருக்கு..?

OnePlusNord3

ஒன்பிளஸ் (OnePlus) நிறுவனம், ஒன்பிளஸ் நோர்ட் 3 (OnePlus Nord 3) ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது.

மொபைல் நிறுவனங்களில் முன்னணி வகிக்கும் ஒன்பிளஸ் (OnePlus) நிறுவனம் அதன் ஒன்பிளஸ் நோர்ட் 3 (OnePlus Nord 3) ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. மொபைல் பிரியர்கள் பலரும் இந்த ஸ்மார்ட்போனிற்காக காத்துக்கொண்டிருந்த நிலையில், இந்த ஸ்மார்ட்போனின் டீசர் வெளியிடப்பட்டு அதன் அறிமுகத்தை ஒன்பிளஸ் உறுதி செய்துள்ளது.

OnePlusNord3
OnePlusNord3 [Image Source : Twitter/@stufflistings]

இந்த ஸ்மார்ட்போன் வரும் ஜூலை 5ம் தேதி இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்பொழுது, இதன் விலை மற்றும் ஸ்டோரேஜ் (Storage) விருப்பங்கள் இணையத்தில் கசிந்துள்ளன. அதன்படி, இந்தியாவில் இரண்டு விருப்ப முறைகளில் வெளியாகவுள்ளது.

அதில் 8ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி நினைவகத்துடன் வரும் மாடல் ஆன்லைன் விலையில் ரூ.32,999 ஆகும். மேலும், 16 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி நினைவகத்துடன் வரும் ஸ்மார்ட்போன் ஆன்லைன் விலையில் ரூ.36,999 ஆக விற்பனைக்கு வரவுள்ளது. தற்போது, வரவிருக்கும் அதன் சிறப்பம்சங்களை இப்போது காணலாம்.

OnePlusNord3
OnePlusNord3 [Image Source : Twitter/@Phonetown18]

OnePlus Nord 3 Display & Processor:

இந்த ஸ்மார்ட்போன் 6.7 இன்ச் ஃப்ளுஇட் அமோலேட் டிஸ்பிளேவுடன் 120Hz ரெபிரேசிங் ரெட் மற்றும் HDR10+ ஆதரவுடன் வருகின்றது. இது 1240 x 2772 பிக்சல் தெளிவுத்திறன் கொண்டிருக்கும். இதில் பாதுகாப்பிற்காக கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 உள்ளது.

ஒன்பிளஸ் நோர்ட் 3 ஸ்மார்ட்போன் மீடியாடெக் டிமென்ட்சிட்டி 9000 எஸ்ஓசி (MediaTek MT6983 Dimensity 9000) பிராசஸருடன், ஆண்ட்ராய்டு 13 மூலம் இயக்கப்படுகிறது. அதனுடன் நிறுவனத்தின் சொந்த OxygenOS 13 உள்ளதாக கூறப்படுகிறது.

OnePlusNord3
OnePlusNord3 [Image Source : Twitter/@Phonetown18]

OnePlus Nord 3 Camara & Battery:

இதில் பயன்படுத்தப்பட்டுள்ள கேமரா அமைப்பானது 50 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி அல்ட்ராவைடு மற்றும் 2 எம்பி டெப்த் சென்சார் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 5000mAh பேட்டரியுடன் 80 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் வருகிறது. இதனால் ஸ்மார்ட்போனை குறைந்த நேரத்தில் ச்ச்ர்ஜ் செய்ய முடியும்.

OnePlusNord3
OnePlusNord3 [Image Source : Twitter/@Phonetown18]

இந்த ஸ்மார்ட்போனிற்காக எதிர்பார்ப்போடு காத்துக்கொண்டிருக்கும் மொபைல் பிரியர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில், அதன் அறிமுக விலை இருக்கலாம். இருந்தும், சிலர் இதன் விலை 30 ஆயிரத்திற்கும் குறைவாக இருக்கும் என்று நினைக்கின்றனர். மேலும், சிலர் கார்டு ஆஃபர்களுடன் வந்தால் விலை குறைவாக இருக்கலாம் என்று கூறுகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்