OnePlus Ace 3 Pro 2 [file image]
ஒன்பிளஸ் ஏஸ் 3 ப்ரோ : கடந்த சில மாதங்களுக்கு முன்பு சீனாவில் அறிமுகம் செய்யப்பட்ட ‘ஒன்பிளஸ் ஏஸ் 3’ ஸ்மார்ட்போனின் அடுத்த வெறியன்ட் ஆன, ஒன்பிளஸ் ஏஸ் 3 ப்ரோ விரைவில் அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஒன்பிளஸ் நிறுவனம் அவ்வப்போது, புதிய அம்சங்களுடைய ஸ்மார்ட்போன்களை வழங்கி வருகிறது. இந்த ஆண்டு ஏஸ் ஸ்மார்ட்போன்களின் வரிசையில், ஒன்பிளஸ் ஏற்கனவே இரண்டு மாடல்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, ஏஸ் 3 மற்றும் ஏஸ் 3வி ஆகும். இப்போது, ஒன்பிளஸ் வரிசையின் அடுத்த மாடலான ஒன்பிளஸ் ஏஸ் 3 ப்ரோவுக்குத் தயாராகி வருகிறது.
இந்த ஆண்டு ஜனவரி மாதம் சினாவில் OnePlus Ace 3-யை அறிமுகம் செய்தது ஒன்பிளஸ் நிறுவனம். இந்த ஸ்மார்ட்போனானது இந்தியாவில் ஒன்பிளஸ் 12ஆர் எனும் பெயரில் அறிமுகம் செய்யப்பட்டது. விரைவில் ஒன்பிளஸ் ஏஸ் 3 ப்ரோவை சீனாவில் ஜூலை அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், இந்த சாதனம் எப்போது இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்பது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. அதற்கு மாறாக, அதன் சிறப்பு அம்சங்கள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
ஒன்பிளஸ் ஏஸ் 3 ப்ரோவானது கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்ட ஒன்பிளஸ் ஏஸ் 2 ப்ரோவின் அப்டேட் வெர்ஷனாக இருக்கும் என்று கூறப்படுகிறது. கவனிக்க கூடிய விஷயம் என்னெவன்றால், ஒன்பிளஸ் ஏஸ் 2 ப்ரோ சீனாவில் மட்டும் தான் அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால், இந்தியா உட்பட பிற சந்தைகளுக்கு இந்த ஒன்பிளஸ் ஏஸ் 2 ப்ரோ வரவில்லை.
இப்பொது, அதே சீரீஸின் கீழ் அறிமுகமாகும் ஒன்பிளஸ் ஏஸ் 3 ப்ரோ மாடலும் இந்தியாவில் வெளியாகுமா என்று தெரியவில்லை. காரணம் கடந்த 2023 ஆம் ஆண்டு டிசம்பர் 5 ஆம் தேதி ஒன்பிளஸ் 12 மற்றும் ஒன்பிளஸ் 12ஆர் ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் அறிமுகமாகியது குறிப்பிடத்தக்கது.
இந்த சிறப்பம்சங்கள் குறித்த தகவல்கள் அனைத்தும் அதிகாரப்பூர்வமாக வரும் வரை காத்திருக்க வேண்டும்.
காஷ்மீர் : பஹல்காமில் 6 நாட்களுக்கு முன்பு நடந்த பயங்கரவாத தாக்குதலின் போது, எடுக்கப்பட்ட புதிய காணொளி ஒன்று வெளியாகியுள்ளது.…
டெல்லி : நடிகர் அஜித்குமாருக்கு பத்ம பூஷன் விருதை குடியரசு தலைவர் திரவுபதி முர்மு வழங்கினார். நேற்றைய தினம் டெல்லியில்…
சென்னை : நேற்று முன் தினம் தமிழ்நாடு அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, மனோ தங்கராஜ் மீண்டும் அமைச்சர் பொறுப்பு…
ஜெய்ப்பூர் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள சவாய்…
ஜெய்ப்பூர் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள…
பஹல்காம் : கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர்…