ஸ்னாப்டிராகன் 8 Gen..100W ஃபாஸ்ட் சார்ஜிங்.! வருகிறது OnePlus-ன் புதிய மாடல்.!

OnePlus Ace 3 Pro 2 (1)

ஒன்பிளஸ் ஏஸ் 3 ப்ரோ : கடந்த சில மாதங்களுக்கு முன்பு சீனாவில் அறிமுகம் செய்யப்பட்ட ‘ஒன்பிளஸ் ஏஸ் 3’ ஸ்மார்ட்போனின் அடுத்த வெறியன்ட் ஆன, ஒன்பிளஸ் ஏஸ் 3 ப்ரோ விரைவில் அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஒன்பிளஸ் நிறுவனம் அவ்வப்போது, புதிய அம்சங்களுடைய ஸ்மார்ட்போன்களை வழங்கி வருகிறது. இந்த ஆண்டு ஏஸ் ஸ்மார்ட்போன்களின் வரிசையில், ஒன்பிளஸ் ஏற்கனவே இரண்டு மாடல்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, ஏஸ் 3 மற்றும் ஏஸ் 3வி ஆகும். இப்போது, ​​ஒன்பிளஸ் வரிசையின் அடுத்த மாடலான ஒன்பிளஸ் ஏஸ் 3 ப்ரோவுக்குத் தயாராகி வருகிறது.

இந்த ஆண்டு ஜனவரி மாதம் சினாவில் OnePlus Ace 3-யை அறிமுகம் செய்தது ஒன்பிளஸ் நிறுவனம். இந்த ஸ்மார்ட்போனானது இந்தியாவில் ஒன்பிளஸ் 12ஆர் எனும் பெயரில் அறிமுகம் செய்யப்பட்டது. விரைவில் ஒன்பிளஸ் ஏஸ் 3 ப்ரோவை சீனாவில் ஜூலை அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், இந்த சாதனம் எப்போது இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்பது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. அதற்கு மாறாக, அதன் சிறப்பு அம்சங்கள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. 

OnePlus Ace 3 Pro

ஒன்பிளஸ் ஏஸ் 3 ப்ரோவானது கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்ட ஒன்பிளஸ் ஏஸ் 2 ப்ரோவின் அப்டேட் வெர்ஷனாக இருக்கும் என்று கூறப்படுகிறது. கவனிக்க கூடிய விஷயம் என்னெவன்றால், ஒன்பிளஸ் ஏஸ் 2 ப்ரோ சீனாவில் மட்டும் தான் அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால், இந்தியா உட்பட பிற சந்தைகளுக்கு இந்த ஒன்பிளஸ் ஏஸ் 2 ப்ரோ வரவில்லை.

இப்பொது, அதே சீரீஸின் கீழ் அறிமுகமாகும் ஒன்பிளஸ் ஏஸ் 3 ப்ரோ மாடலும் இந்தியாவில் வெளியாகுமா என்று தெரியவில்லை. காரணம் கடந்த 2023 ஆம் ஆண்டு டிசம்பர் 5 ஆம் தேதி ஒன்பிளஸ் 12 மற்றும் ஒன்பிளஸ் 12ஆர் ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் அறிமுகமாகியது குறிப்பிடத்தக்கது.

ஒன்பிளஸ் ஏஸ் 3 ப்ரோ சிறப்பம்சங்கள் :

  • 6.78 இன்ச் BOE 8T LTPO AMOLED டிஸ்ப்ளே உடன் வருகிறது. இது1.6K ரெசல்யூஷனை ஆதரிக்கும் என்று கூறப்படுகிறது. இது 120Hz வரை புதுப்பிக்க முடியும்.
  • 16MP மெகாபிக்சல் செல்ஃபி கேமராவும், 50MP மெகாபிக்சல் பிரதான கேமராவுடன் 8MP மெகாபிக்சல் கேமரா மற்றும் 2MP மெகாபிக்சல் கேமரா ஆகியவற்றைக் கொண்ட மூன்று பின்புற கேமரா அமைப்பைக் கொண்டிருக்கும்.
  • 24GB LPDDR5x ரேம் மற்றும்1TB ஸ்டோரேஜ் உடன் கிடைக்கும்.
  • டிப்ஸ்டர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜெனரல் 3 சிப்பை அடிப்படை செயலியாக கொண்டிருக்கும். இது அதன் முன்னோடியை விட 20 சதவீதம் அதிக செயல்திறன் கொண்டதாகவும், அதிக சக்தி வாய்ந்தது என்றும் கூறப்படுகிறது.
  • OnePlus Ace 3 Pro ஆனது 100W வயர்டு சார்ஜிங் ஆதரவுடன் டூயல்-செல் 6100mAh பேட்டரி உடன் வருகிறது. இது 2 நாள் வரை பேட்டரி ஆயுளை கொண்டிருக்கும்.

இந்த சிறப்பம்சங்கள் குறித்த தகவல்கள் அனைத்தும் அதிகாரப்பூர்வமாக வரும் வரை காத்திருக்க வேண்டும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்