இந்த நவீன கால உலகத்தில் புது புது தொழில்நுட்ப அம்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டு வருகிறது. இதனால் தொழில்நுட்ப வளர்ச்சியில் நாடு வேகமாக வளர்ந்து வருகிறது. அதில் குறிப்பாக, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் (AI) தற்போது வளம் வந்துகொண்டிருக்கிறது. நாம் பயன்படுத்தும் ஸ்மார்போன்கள் முதல் அனைத்திலும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் வர தொடங்கியுள்ளது.
இதனால் உலகில் ஏஐ கருவிகளின் பயன்பாடு என்பது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சாட்ஜிபிடியை தொடர்ந்து பல்வேறு ஏஐ தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டு வரும் நிலையில், அதை பயன்படுத்துவோரின் எண்ணிகை அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், புதிய அப்டேட்டுடன் ஒன்பிளஸ் 11 மற்றும் 12 மாடல் ஸ்மார்ட்போன்கள் AI ரேஸில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
முன்னணி ஸ்மார்ட்போன் நிறுவனங்களான கூகுள் மற்றும் சாம்சங், தங்கள் ஸ்மார்ட்போன்களில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப (AI) அம்சங்களை அறிமுகப்படுத்தியுள்ளனர். தற்போது ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன் நிறுவனமும் AI ரேஸில் இணைய தயாராகிவிட்டதாக கூறப்படுகிறது. முன்னணி ஸ்மார்ட்போன் பிராண்டான ஒன்பிளஸ் (OnePlus) அதன் பிரீமியம் மாடல்களான OnePlus 11 மற்றும் 12இல் Al அம்சங்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐபோன் 15-க்கு அதிரடி ஆஃபர்! – பிளிப்கார்ட்..!
ஒன்பிளஸ் 12 மாடல் அறிமுகத்துடன் ஏஐ அம்சங்கள் அறிவிக்கப்படும் என்று பயனர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்தாலும், அந்த அம்சங்கள் வழங்கப்படவில்லை. இப்போது, ஒன்பிளஸ் நிறுவனம் அதன் ஸ்மார்ட்போன்களில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப (AI) அம்சங்களைக் கொண்டுவர திட்டமிட்டுள்ளது. இதில் ஒரு பகுதியாக சீனாவில் ஒன்பிளஸ் ஸ்மார்ட்போனில் AI அம்சங்களை உள்ளடக்கிய புதிய அப்டேட்டுடன் வந்துள்ளதாக கூறப்படுகிறது. இது OnePlus 11 மற்றும் 12 மாடல்களில் Al அம்சங்கள் கண்டறியப்பட்டுள்ளது.
இது புகைப்பட எடிட்டிங், கட்டுரை சுருக்கங்கள், திரை உள்ளடக்கத்தை அங்கீகரிக்க ப்ரீனோ டச் போன்ற பயன்பாடுகளை மேற்கொள்ள கொண்டுவரப்பட்டுள்ளதாகவும், இருந்தாலும் சாம்சங் மற்றும் கூகுள் அம்சங்களுடன் போட்டியிடுவதில் இருந்து வெகு தொலைவில் உள்ளது எனவும் கூறப்படுகிறது. எனவே, இந்தியாவில் OnePlus 11 மற்றும் 12 மடல்களில் புதிய அப்டேட்டுடன் Al அம்சங்கள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நியூ யார்க் : மெட்டா நிறுவனத்தின் தலைமை அதிகாரி மார்க் ஸுக்கர்பர்க் அண்மையில், தி ஜோ ரோகன் எக்ஸ்பீரியன்ஸ் போட்காஸ்ட்…
புனே : இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்த பிறகு இந்திய ராணுவத்தை அதிகாரபூர்வமாக அங்கீகரித்து முதன் முறையாக இந்தியாவுக்கு என அதிகாரபூர்வ…
"கரும்பு தின்ன கூலியா' என்ற பழமொழிக்கு ஏற்ப கரும்பு சாப்பிடுவதால் பற்கள் முதல் ஜீரண மண்டலம் வரை பல நன்மைகளை…
சென்னை : வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வாடிவாசல் எனும் திரைப்படம் தயாராக உள்ளது என அறிவித்து ஆண்டுகள் கடந்து…
சென்னை : z024ஆம் ஆண்டு பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 10 நபர்களுக்கு விருதுகளையும், பரிசுத்தொகையையும் முதலமைச்சார் மு.க.ஸ்டாலின் இன்று…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் பிரமாண்ட மஹா…