16ஜிபி ரேம்.. 50 எம்பி கேமரா.! அறிமுகமாகிறது ஒன்பிளஸ் 12.. எப்போ தெரியுமா.?
OnePlus 12: ஒன்பிளஸ் நிறுவனம் அதன் புதிய ஸ்மார்ட்போனான ஒன்பிளஸ் 12-ஐ வரும் டிசம்பர் மாதம் அறிமுகம் செய்யவுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ போஸ்டரை ஒன்பிளஸ் நிறுவனம், சீன மைக்ரோ பிளாக்கிங் தளமான வெய்போவில் போஸ்டர் ஒன்றை பதிவிட்டு உறுதிசெய்துள்ளது.
அதன்படி, இந்த ஸ்மார்ட்போன் டிசம்பர் 4ம் தேதி சீனாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதற்கு முன்னதாக ஸ்மார்ட்போன் நிறுவனங்களின் மத்தியில் அதிகளவில் பேசப்படும் விதமாக அதன் முதல் ஃபோல்டபிள் ஸ்மார்ட்போனான ஒன்பிளஸ் ஓபனை அக்டோபர் 19ம் தேதி உலகளவில் அறிமுகம் செய்தது குறிப்பிடத்தக்கது.
டிஸ்பிளே
இது சென்ட்ரல் பஞ்ச்-ஹோல் கட்அவுட் உடன் கூடிய 2K (3168×1440 பிக்சல்கள்) ஹைரெசல்யூஷன் கொண்ட 6.82 இன்ச் பிஓஇ எல்டிபிஓ அமோலெட் கர்வுடு டிஸ்பிளேவைக் கொண்டிருக்கலாம். இந்த கர்வ்டு டிஸ்ப்ளே 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 2,600 நிட்ஸ் பிரைட்னஸ் கொண்டுள்ளது. அதோடு நீர் மற்றும் தூசிகளில் இருந்து பாதுகாக்க ஐபி68 ரேட்டிங் உள்ளது.
மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் இணையும் சாம் ஆல்ட்மேன் மற்றும் கிரெக் ப்ரோக்மேன்.!
பிராசஸர்
அட்ரினோ 750 ஜிபியு உடன் இணைக்கப்பட்ட குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 சிப்செட் ஆனது ஒன்பிளஸ் 12 இல் பொருத்தப்படலாம். இதே பிராசஸர் ஐக்யூ 12 சீரிஸ், ஜிடி 5 ப்ரோ மற்றும் சியோமி 14 சீரிஸ் மாடல்களில் உள்ளது. ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் அடிப்டையாகக் கொண்டு இயங்கும் இந்த ஸ்மார்ட்போனில் ஆக்ஸிஜன் ஓஎஸ் 14 உள்ளது.
கேமரா
ஒன்பிளஸ் 12 ஸ்மார்ட்போனில் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷனுடன் கூடிய சோனி IMX96 சென்சார் கொண்ட 50 எம்பி மெயின் கேமரா, சோனி IMX581 சென்சார் கொண்ட 48 எம்பி அல்ட்ரா-வைட் ஆங்கிள் கேமரா மற்றும் 3X ஆப்டிகல் ஜூம், 6X சென்சார் ஜூம் மற்றும் 120X டிஜிட்டல் ஜூம் கொண்ட 64 எம்பி பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ கேமரா பொருத்தப்படலாம். அதோடு செல்ஃபிக்காக 32 எம்பி கேமரா பொருத்தப்படலாம்.
பேட்டரி
இதில் 5,400 mAh திறன் கொண்ட லித்தியம் பாலிமர் பேட்டரி பொருத்தப்படலாம். இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய யுஎஸ்பி டைப்-சி போர்டுடன் கூடிய 100 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி மற்றும் 50 வாட்ஸ் வயர்லெஸ் சார்ஜிங் வசதியை கொண்டிருக்கலாம். ஒன்பிளஸ் 12 ஆனது யுஎஸ்பி 3.2 ஆதரவுடன் வரும் என்று கூறப்படுகிறது.
மிரட்டும் டிசைன்..12 ஜிபி ரேம்.. 50 எம்பி கேமரா.! அறிமுகமாகிறது ஒப்போ ரெனோ 11 சீரிஸ்.!
ஸ்டோரேஜ்
கருப்பு, பச்சை மற்றும் வெள்ளை ஆகிய மூன்று வண்ணங்களில் ஒன்பிளஸ் 12 ஆனது 16ஜிபி வரை எல்பிடிடிஆர்5எக்ஸ் ரேம் மற்றும் 256 ஜிபி யுஎஃப்எஸ் 4.0 இன்டெர்னல் ஸ்டோரேஜைக் கொண்டிருக்கலாம்.
அதோடு இன்-டிஸ்ப்ளே பிங்கர் பிரிண்ட் ஸ்கேனர் உள்ளது. ஒன்பிளஸ் 12 ஸ்மார்ட்போனில் இன்ஃப்ராரெட் ரிமோட் கண்ட்ரோல் அம்சம் உள்ளது. இதனால் ஸ்மார்ட்போன் மூலம் டிவி மற்றும் ஏர் கண்டிஷனர்கள் போன்ற பல்வேறு மின்னணு சாதனங்களைக் கட்டுப்படுத்த முடியும்.