24ஜிபி ரேம்..5,400mAh பேட்டரி..50 எம்பி கேமரா.! நாளை அறிமுகமாகிறது ஒன்பிளஸ் 12.!
ஒன்பிளஸ் நிறுவனம் அதன் அடுத்த தயாரிப்பான ஒன்பிளஸ் 12 (OnePlus 12) ஸ்மார்ட்போனை டிசம்பர் 5ம் தேதி சீனாவில் அறிமுகப்படுத்த உள்ளது. இன்று (டிசம்பர் 4ம் தேதி) ஒன்பிளஸ் நிறுவனத்தின் 10வது ஆண்டு விழா நடைபெறவுள்ளது. இந்த விழாவைத் தொடர்ந்து ஸ்மார்ட்போன் அறிமுகமாகவுள்ளது.
இந்நிலையில் அறிமுகத்திற்கு முன்னதாக ஸ்மார்ட்போனின் அம்சங்களை அதிகாரப்பூர்வமாக நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதனுடன் ஒன்பிளஸ் 12 ஆர், ஒன்பிளஸ் வாட்ச் 2 போன்ற சாதனங்களையும் ஒன்பிளஸ் அறிமுகப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக ஒன்பிளஸ் 12 இந்தியா மற்றும் உலகளாவிய வெளியீட்டு தேதியானது தற்செயலாக அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளிப்படுத்தப்பட்டது. அதன்படி, ஒன்பிளஸ் 12 ஜனவரி 24, 2024 அன்று இந்தியா உட்பட உலகளவில் அறிமுகப்படுத்தப்படலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
AI அசிஸ்டன்ட் உடன் அறிமுகமான அமாஸ்ஃபிட் பேலன்ஸ் வாட்ச்.! விலையை கேட்ட மிரண்டுருவீங்க.!
டிஸ்பிளே
ஒன்பிளஸ் 12 போனில் 2K (3168×1440 பிக்சல்கள்) ஹைரெசல்யூஷன் கொண்ட 6.82 இன்ச் பிஓஇ எல்டிபிஓ அமோலெட் (OLED Amoled) கர்வுடு டிஸ்பிளே உள்ளது. இந்த டிஸ்பிளே 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 2,600 நிட்ஸ் பிரைட்னஸ் கொண்டுள்ளது. இந்த போனின் இடது புறத்தில் அலர்ட் ஸ்லைடர், நீர் மற்றும் தூசிலிருந்து பாதுகாக்க ஐபி65 ரேட்டிங் மற்றும் இன்-டிஸ்ப்ளே பிங்கர் பிரிண்ட் ஸ்கேனர் உள்ளது.
பிராசஸர்
அட்ரினோ 750 கிராஃபிக்ஸ் கார்டுடன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 சிப்செட் (Snapdragon 8 Gen 3) ஆனது ஒன்பிளஸ் 12 போனில் பொருத்தப்படலாம். இதில் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் அடிப்டையாகக் கொண்ட ஆக்ஸிஜன் ஓஎஸ் 14 உள்ளது.
இந்த பிராஸசர் ஐக்யூ 12 சீரிஸ், ஜிடி 5 ப்ரோ மற்றும் சியோமி 14 சீரிஸ் ஸ்மார்ட்போன்களிலும் உள்ளது. ஐஆர் பிளாஸ்டர் சென்சார் உள்ளதால் ரிமோட் ஆகவும் பயன்படுத்த முடியும். அதோடு புளூடூத் 5.4, ஜிபிஎஸ், என்எப்சி மற்றும் 5ஜி வசதி உள்ளது.
கேமரா
இதில் கேமராவைப் பொருத்தவரையில் ஹாசல்பிளாடிற்கான (Hasselblad) ‘எச்’ பிராண்டிங் மற்றும் எல்இடி ஃபிளாஷுடன் கூடிய டிரிபிள் ரியர் கேமரா அமைப்பு உள்ளது. இதில் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷனுடன் (OIS) சோனி IMX96 சென்சார் கொண்ட 50 எம்பி மெயின் கேமரா, சோனி IMX581 சென்சார் 48 எம்பி அல்ட்ரா-வைட் ஆங்கிள் கேமரா மற்றும் 3X ஆப்டிகல் ஜூம், 6X சென்சார் ஜூம் மற்றும் 120X டிஜிட்டல் ஜூம் கொண்ட 64 எம்பி பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ கேமரா பொருத்தப்படலாம். முன்புறம் செல்ஃபிக்காக 32 எம்பி கேமரா பொருத்தப்படலாம்.
அமலுக்கு வந்தது புதிய சிம் கார்டு விதிமுறை.! இனி இதெல்லாம் கட்டாயம்.?
பேட்டரி
ஒன்பிளஸ் 12 போனை அதிக நேரம் பயன்படுத்த 5,400 mAh லித்தியம் பாலிமர் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய யுஎஸ்பி டைப்-சி போர்ட்டுடன் கூடிய 100 வாட்ஸ் சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி மற்றும் 50 வாட்ஸ் வயர்லெஸ் சார்ஜிங் வசதி உள்ளது. இந்த யுஎஸ்பி டைப்-சி போர்ட்டில் யுஎஸ்பி3.2 ஜென் 1 சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.
ஸ்டோரேஜ்
பிளாக் (Black), கிரீன் (Green) மற்றும் வைட் (White) என மூன்று வண்ணங்களில் வெளியாகவுள்ள ஒன்பிளஸ் 12 ஆனது 24 ஜிபி வரை எல்பிடிடிஆர்5எக்ஸ் ரேம் மற்றும் 1 டிபி யுஎஃப்எஸ் 4.0 இன்டெர்னல் ஸ்டோரேஜைக் கொண்டுள்ளது. அதன்படி, இதில் 16 ஜிபி ரேம் + 512 ஜிபி ஸ்டோரேஜ், 16 ஜிபி ரேம் + 1 டிபி ஸ்டோரேஜ் மற்றும் 24 ஜிபி ரேம் + 1 டிபி ஸ்டோரேஜ் என மூன்று வேரியண்ட்களில் உள்ளது.