இந்தியாவில் இன்று இரவு அறிமுகமாகும் OnePlus 12 series!

Published by
பாலா கலியமூர்த்தி

ஒன் பிளஸ் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருந்த, ஒன் பிளஸ் 12 சீரியஸ் (OnePlus 12 series) ஸ்மார்ட்போன்கள் இன்று இரவு இந்தியாவில் அறிமுகமாகிறது. அதன்படி, “Smooth Beyond Belief,” என்ற நிகழ்ச்சியில் ஒன் பிளஸ் நிறுவனத்தின் புதிய மாடலான OnePlus 12 மற்றும் OnePlus 12R ஆகிய இரண்டு ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் இன்று இரவு அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்த நிகழ்விற்கான அனுமதிச்சீட்டுகளை பெற்றவர்கள் புது தில்லியில் உள்ள பிரகதி மைதானத்தில் இருந்து இதனை கண்டுகளிக்கலாம், மற்றவர்கள் YouTube வழியாக அதை பார்க்கலாம்.

ஒன் பிளஸ் 12 சீரியஸின் எதிர்பார்க்கும் அம்சங்கள் மற்றும் விலை குறித்த விவரங்கள்: 

ஒன்பிளஸ் 12: அறிமுகமாகவுள்ள புதிய OnePlus 12 மொபைலானது ஸ்னாப்டிராகன் 8 (Snapdragon 8 Gen-3) மூன்றாம் தலைமுறையில் இயங்கும். மேலும் 4வது Gen Hasselblad கேமரா அமைப்பு, 5,500 mAh பேட்டரி மற்றும் வயர்லெஸ் சார்ஜிங் போன்ற அம்சங்கள் இருக்கும் என எதிர்பார்க்கபடுகிறது.

மேலும், OnePlus 12 மொபைலானது 120Hz ரெஃப்ரெஷ் ரேட் உடன் 2K தெளிவுத்திறன் கொண்ட AMOLED டிஸ்பிளேவுடன் உள்ளது. OnePlus 12 நான்கு வருட அப்டெட்டுகளை பெறும் என்பதும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதன் விலை ரூ.70,000 வரை நிர்ணயம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.

அடடா! வாட்ஸ்அப்பில் புளூடூத்தை பயன்படுத்தி 2GB வரை ஷேர் செய்யலாம்!

ஒன்பிளஸ் 12ஆர்: புதிய OnePlus 12R மொபைலானது இரண்டாம் தலைமுறை ஸ்னாப்டிராகன் 8 (Snapdragon 8 Gen 2 powered) மற்றும் LTPO 120Hz ProXDR டிஸ்பிளேவை கொண்டிருக்கும். இது சிறந்த வேகம் மற்றும் நுண்ணறிவுடன் அதன் ரெஃப்ரஷ் ரேட்டை அட்ஜஸ்ட் செய்யும் வகையில் ஸ்கிரீனுக்கு உதவுகிறது.

அதேபோல OnePlus 12R கொடுக்கப்படும் LTPO 4.0 டிஸ்பிளே டெக்னலாஜியானது பலவிதமான ரெஃப்ரஷ் ரேட் ஆப்ஷன்களை கொடுக்கிறது. இந்த டெக்னலாஜியானது மொபைலின் சிறந்த செயல்திறனை உறுதி செய்கிறது. OnePlus 12R ஸ்மார்ட் ஃபோன் 5,500mAh பேட்டரியை கொண்டிருக்கும் என்றும் கூறப்படுகிறது.

இந்த ஸ்மார்ட்போன்கள் நீலம் மற்றும் கருப்பு என 2 கலர் ஆப்ஷன்களில் வெளிவரும் என்றும் OnePlus 12R பிரீமியம் ஸ்மார்ட்போன் கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் 2 ப்ரொட்டக்ஷனை கொண்டிருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. மேலும், இதில் Qualcomm Snapdragon 8 Gen 2 SoC ப்ராசஸர் இடம்பெறும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இதன் விலை ரூ.50,000 வரை நிர்ணயம் செய்யப்படலாம் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

Recent Posts

3 மணி நேரம் தாமதம்… இஸ்ரேல் – ஹமாஸ் போர் நிறுத்தம் அமல்!

காசா : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் ஹமாஸ் போர் தற்போது முதற்கட்டமாக போர் நிறுத்தத்தை தொடங்கியுள்ளது.…

34 minutes ago

தொடரும் வடகிழக்கு பருவமழை… தென் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு!

சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது வழக்கமாக அக்டோபரில் தொடங்கி டிசம்பர் வரை பெய்யும். தற்போது வடகிழக்கு பருவமழையின் தாக்கம்…

1 hour ago

நாளை பரந்தூர் பயணம்.. தவெக தொண்டர்களுக்கு விஜய் ரகசிய உத்தரவு?

காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…

3 hours ago

“போர் நிறுத்தம் கிடையாது!” ஹமாஸுக்கு பதிலடி கொடுக்கப்படும்.! இஸ்ரேல் திட்டவட்டம்!

டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…

4 hours ago

‘இனி நான் திமுக கட்சி உறுப்பினர்’ சத்யராஜ் மகள் திடீர் முடிவு!

சென்னை : திரைப்பட நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா, திமுகவுக்கு ஆதரவாக அவ்வப்போது பல்வேறு கருத்துகளை தெரிவித்து வருகிறார். அவரைப்…

5 hours ago

சட்டுனு “பத்திக்கிச்சு” பட்டய கிளப்பும் விடாமுயற்சி 2வது பாடல் இதோ…

சென்னை : அஜித் குமார் நடிப்பில் மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் விடாமுயற்சி. இப்படம் வருகிற பிப்ரவரி மாதம் 6ஆம்…

5 hours ago