5,400mAh பேட்டரி..1 டிபி ஸ்டோரேஜ்.! ஒன்பிளஸ் 12-ன் அறிமுக தேதி இதுதான்..?

OnePlus12

ஒன்பிளஸ் நிறுவனத்தின் 10வது ஆண்டு விழா டிசம்பர் 4ம் தேதி சீனாவில் நடைபெறவுள்ளது. இந்த ஆண்டு விழாவை முன்னிட்டு ஒன்பிளஸ் நிறுவனம் அதன் புதிய தயாரிப்பான ஒன்பிளஸ் 12 போனையும் அறிமுகம் செய்யவுள்ளது. தற்போது ஒன்பிளஸ் 12 (OnePlus 12) ஸ்மார்ட்போனின் அறிமுக தேதியானது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, ஒன்பிளஸ் 12 ஸ்மார்ட்போன் டிசம்பர் 5ம் தேதி சீனாவில் அறிமுகப்படுத்தப்படும் என்று ஒன்பிளஸ் உறுதிப்படுத்தியுள்ளது. இதனுடன் ஒன்பிளஸ் 12 ஆர், ஒன்பிளஸ் வாட்ச் 2 போன்ற சாதனங்களையும் அறிமுகப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக முதல் போல்டபி போனான ஒன்பிளஸ் ஓபனை அக்டோபர் 19ம் தேதி உலகளவில் அறிமுகம் செய்தது.

டிஸ்பிளே

ஒன்பிளஸ் 12 போனில் 2K (3168×1440 பிக்சல்கள்) ஹைரெசல்யூஷன் கொண்ட 6.82 இன்ச் பிஓஇ எல்டிபிஓ அமோலெட் கர்வுடு டிஸ்பிளே உள்ளது. சென்டர் பஞ்ச் ஹோல் கட்அவுட் உடன் கூடிய இந்த கர்வ்டு டிஸ்பிளே 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 2,600 நிட்ஸ் பிரைட்னஸ் கொண்டுள்ளது. நீர் மற்றும் தூசிகளில் இருந்து பாதுகாக்க ஐபி68 ரேட்டிங் மற்றும் இன்-டிஸ்ப்ளே பிங்கர் பிரிண்ட் ஸ்கேனர் உள்ளது.

இனி புதிய கேம்-ஐ டவுன்லோட் செய்ய தேவையில்லை..! யூடியூப் அசத்தல் வசதி.!

பிராசஸர்

இதில் அட்ரினோ 750 கிராஃபிக்ஸ் கார்டுடன் இணைக்கப்பட்ட குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 சிப்செட் (Snapdragon 8 Gen 3) பொருத்தப்படலாம். இதே பிராசஸர் ஐக்யூ 12 சீரிஸ், ஜிடி 5 ப்ரோ மற்றும் சியோமி 14 சீரிஸ் மாடல்களில் உள்ளது. ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் அடிப்டையாகக் கொண்டு இயங்கும் இந்த ஸ்மார்ட்போனில் ஆக்ஸிஜன் ஓஎஸ் 14 உள்ளது.

ஒன்பிளஸ் 12 ஸ்மார்ட்போனில் இன்ஃப்ராரெட் ரிமோட் கண்ட்ரோல் அம்சம் உள்ளது. இதனால் ஸ்மார்ட்போன் மூலம் டிவி மற்றும் ஏர் கண்டிஷனர்கள் போன்ற பல்வேறு மின்னணு சாதனங்களைக் கட்டுப்படுத்த முடியும்.

கேமரா

போனின் இடது புறத்தில் ஓரு அலர்ட் ஸ்லைடர் உள்ளது. கேமராவைப் பொறுத்தவரை ஹாசல்ப்ளாடிற்கான ‘எச்’ பிராண்டிங் மற்றும் எல்இடி ஃபிளாஷுடன் கூடிய டிரிபிள் ரியர் கேமரா அமைப்பு உள்ளது. அதில் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷனுடன் கூடிய சோனி IMX96 சென்சார் கொண்ட 50 எம்பி மெயின் கேமரா, சோனி IMX581 சென்சார் கொண்ட 48 எம்பி அல்ட்ரா-வைட் ஆங்கிள் கேமரா மற்றும் 3X ஆப்டிகல் ஜூம், 6X சென்சார் ஜூம் மற்றும் 120X டிஜிட்டல் ஜூம் கொண்ட 64 எம்பி பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ கேமரா பொருத்தப்படலாம். அதோடு செல்ஃபிக்காக 32 எம்பி கேமரா பொருத்தப்படலாம்.

இந்தியாவில் களமிறங்கும் இன்ஃபினிக்ஸ்-ன் பட்ஜெட் போன்.! என்ன மாடல்..எப்போ அறிமுகம் தெரியுமா..?

பேட்டரி

இதில் அதிக நேர பயன்பாட்டிற்காக 5,400 mAh திறன் கொண்ட லித்தியம் பாலிமர் பேட்டரி பொருத்தப்படலாம். இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய யுஎஸ்பி டைப்-சி போர்ட்டுடன் கூடிய 100 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி மற்றும் 50 வாட்ஸ் வயர்லெஸ் சார்ஜிங் வசதியை கொண்டிருக்கலாம். ஒன்பிளஸ் 12 ஆனது யுஎஸ்பி 3.2 ஆதரவுடன் வரும் என்று கூறப்படுகிறது.

ஸ்டோரேஜ்

கருப்பு, பச்சை மற்றும் வெள்ளை ஆகிய மூன்று வண்ணங்களில் ஒன்பிளஸ் 12 ஆனது 16ஜிபி வரை எல்பிடிடிஆர்5எக்ஸ் ரேம் மற்றும் 1 டிபி யுஎஃப்எஸ் 4.0 இன்டெர்னல் ஸ்டோரேஜைக் கொண்டிருக்கலாம். இப்போது இந்த ஸ்மார்ட்போன் சீனாவில் மட்டுமே அறிமுகமாக உள்ளது இதையடுத்து வரும் காலங்களில் அல்லது அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் உலக அளவில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tn rain news
stalin about BJP
Rohit Sharma and Agarkar
mk stalin rn ravi
PM Modi - Arvind Kejriwal - Rahul Gandhi
RNRavi