உலகளாவில் அறிமுகமாகும் ஒன்பிளஸ் 12.! அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்திய நிறுவனம்.!

OnePlus 12 Global

ஒன்பிளஸ் நிறுவனம் தான் கூறியபடியே அதன் அட்டகாசமான ஒன்பிளஸ் 12 (OnePlus 12) ஸ்மார்ட்போனை நேற்று (டிசம்பர் 5ம் தேதி) சீனாவில் அறிமுகம் செய்தது. இருந்தும் இந்த ஸ்மார்ட்போனுக்கு இந்தியா மட்டுமல்லாமல் பல நாடுகளில் உலா ஒன்பிளஸ் வடிக்கையாளர்களிடையே எப்போது நமது கைக்குக் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகமாகி வருகிறது.

இதனை இன்னும் அதிகப்படுத்தும் விதமாக நேற்றைய அறிமுகத்தின் போது ஒன்பிளஸ், இந்த புதிய ஸ்மார்ட்போனின் உலகளாவிய வெளியீடு குறித்து போஸ்டர் ஒன்றில் தெரிவித்தது. அந்த போஸ்டரின்படி, ஒன்பிளஸ் 12 ஆனது 2024 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் உலக சந்தைகளுக்கு வரும் என்று உறுதிப்படுத்தியுள்ளது.

இதற்கு முன்னதாக ஒன்பிளஸ் 12 போனிற்கான கிவ்அவேவின் போது, ஒன்பிளஸுக்கான அமெரிக்க இணையதளத்தில் கிவ்அவே விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் பக்கத்தில், 2024ம் ஆண்டு ஜனவரி 23 அன்று கிவ்அவே முடிவடையும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல ஒன்பிளஸ் 12 அறிமுகப்படுத்தப்படுவதற்கு ஒரு நாள் முன்னதாகவே கிவ்அவே முடிவடையும் என்று இந்தியன் ஒன்பிளஸ் இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உலகளவில் களமிறங்கும் ஒன்பிளஸ் 12.! எப்போ தெரியுமா.?

இப்போது வெளியான போஸ்டர் மற்றும் இந்த இணையதளத் தகவலின்படி,  ஒன்பிளஸ் 12 ஆனது அடுத்த ஆண்டு ஜனவரி 24ம் தேதி அன்று இந்தியா உட்பட உலகளவில் அறிமுகப்படுத்தப்படலாம். அதன்படி, ஒன்பிளஸ் 12 அறிமுகமானால் அதன் அம்சங்கள் சந்தைகளுக்கு ஏற்ப மாறுபடும்.

சீனாவில் அறிமுகமான ஒன்பிளஸ் 12 போனின் டிஸ்பிளேவைப் பொறுத்தவரை, 3168×1440 பிக்சல்கள் (2K) ஹைரெசல்யூஷன், 120Hz அடாப்டிவ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 240Hz டச் சம்ப்ளிங் ரேட் கொண்ட 6.82 இன்ச் க்யூஎச்டி+ (Quad High Definition) அமோலெட் கர்வுடு டிஸ்பிளே உள்ளது. 4500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொண்டுள்ளது.

பாதுகாப்பிற்காக கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் 2, இன்-டிஸ்ப்ளே பிங்கர் பிரிண்ட் ஸ்கேனர் வசதி உள்ளது. இதில் அட்ரினோ 750 கிராஃபிக்ஸ் கார்டுடன் இணைக்கப்பட்ட குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 சிப்செட் பொருத்தப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் அடிப்டையாகக் கொண்ட ஆக்ஸிஜன் ஓஎஸ் 14.0 உள்ளது.

மிரட்டல் அறிமுகம்..24ஜிபி ரேம்..5,400mAh பேட்டரி.! ஒன்பிளஸ்-இன் புதிய மாடல்.?

பின்புறத்தில் ஹாசல்பிளாடிற்கான (Hasselblad) ‘எச்’ பிராண்டிங் மற்றும் எல்இடி ஃபிளாஷுடன் கூடிய டிரிபிள் ரியர் கேமரா அமைப்பு உள்ளது. இதில் ஓஐஎஸ் அம்சம் கொண்ட 50 எம்பி மெயின் கேமரா, 48 எம்பிஅல்ட்ரா-வைட் ஆங்கிள் கேமரா மற்றும் 64 எம்பி பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ கேமரா அடங்கும். செல்ஃபிக்காக 32 எம்பி கேமரா பொருத்தப்பட்டுள்ளது.

5,400 mAh லித்தியம் பாலிமர் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. சார்ஜ் செய்ய யுஎஸ்பி டைப்-சி போர்ட்டுடன் கூடிய 100 வாட்ஸ் வயர்டு சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங், 50 வாட்ஸ் வயர்லெஸ் சார்ஜிங் வசதியும் உள்ளது. ஒன்பிளஸ் 12, 24 ஜிபி வரை எல்பிடிடிஆர்5எக்ஸ் (LPDDR5x) ரேம் மற்றும் 1 டிபி யுஎஃப்எஸ் 4.0 இன்டெர்னல் ஸ்டோரேஜைக் கொண்டுள்ளது.

அதன்படி 12 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் விலை 4,299 யுவான் (ரூ.50,635) ஆகவும், 16 ஜிபி ரேம் + 512 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் விலை 4,799 யுவான் (ரூ.56,525) ஆகவும், 16 ஜிபி ரேம் + 1 டிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் விலை 5,299 யுவான் (ரூ.62,415) ஆகவும், 24 ஜிபி ரேம் + 1 டிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் விலை 5,799 யுவான் (ரூ.68,300) ஆகவும் விற்பனைக்கு உள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்