தொழில்நுட்பம்

புதிய மார்பிள் ஒடிஸி நிறத்துடன் இந்தியாவில் அறிமுகமாகும் ‘OnePlus 11 5G’ ..! விலை எவ்வளவு தெரியுமா..?

Published by
செந்தில்குமார்

ஒன்பிளஸ் நிறுவனம் இந்தியாவில் ஒரு புதிய மார்பில் ஒடிசி (Marble Odyssey Colour) நிறத்துடன் ஒன்பிளஸ் 11 5G ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தவுள்ளது.

ஸ்மார்ட்போன் பிரியர்கள் அனைவராலும் அதிகம் விரும்பப்படும் ஒன்பிளஸ் நிறுவனத்தின் ஸ்மார்ட்போன், கேமரா மட்டுமல்லாமல் அனைத்து வித பயன்பாட்டிற்கும் அருமையாக இருக்கும். தற்பொழுது, ஒன்பிளஸ் நிறுவனம் அதன் சாதன வெளியீட்டு நிகழ்வில் பல அட்டகாசமான சாதனங்களுடன் ஒன்பிளஸ் 11 5G (OnePlus 11 5G) ஸ்மார்ட்போனை வெளியிட்டது.

OnePlus 11 5G [Image source : @valismind]

இந்த நிகழ்வில் ஒன்பிளஸ் 11 5G ஸ்மார்ட்போன் ஆனது இந்தியாவில் ஒரு புதிய மார்பில் ஒடிசி (Marble Odyssey Colour) நிறத்துடன் அறிமுகம் செய்யப்பட உள்ளது என நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த போன் தற்போது டைட்டன் பிளாக் (Titan Black), எடேர்னல் க்ரீன் (Eternal Green) என இரண்டு வண்ணங்களில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போனின் விலை மற்றும் சிறப்பம்சங்களை காணலாம்.

டிஸ்ப்ளே (Display):

ஒன்பிளஸ் 11 5G ஸ்மார்ட்போனில் 6.7 இன்ச் அளவுடைய குவாட்-எச்டி+ (Quad-HD+ Display) டிஸ்ப்ளே பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த டிஸ்ப்ளே  1440×3216 பிக்சல்களின் முழு எச்டி ரெசொலூஷன் மற்றும் 120Hz ரெபிரெசிங் ரேட்டையும் (Refresh rate) கொண்டுள்ளது. இது கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் (Corning Gorilla Glass Victus) பாதுகாப்புடன் வருகிறது.

OnePlus 11 5G [Image source : Gagadget]

கேமரா (Camara):

ஒன்பிளஸ் 11 5G ஸ்மார்ட்போனின் பின்புற முக்கிய கேமரா 50 எம்பி கொண்ட சோனி IMX890 (Sony IMX890) சென்சாருடன் வருகிறது. 48 எம்பி கொண்ட அல்ட்ரா-வைட் கேமராவானது சோனி IMX581 (Sony IMX581) சென்சாருடன் வருகிறது. 32 எம்பி கொண்ட போர்ட்ரெய்ட் டெலி கேமராவானது சோனி IMX709 (Sony IMX709) சென்சாருடன் வருகிறது.

OnePlus 11 5G [Image source : Twitter/ @techbharatco]

இதன் மூலம் 4K முதல் 8K வரையிலான அல்ட்ரா எச்டி (Ultra HD) வீடியோவை பதிவு செய்து கொள்ள முடியும். இதன் முன்புறத்தில் 16 மெகாபிக்சல் கொண்ட சோனி IMX471 (Sony IMX471) சென்சார் உடைய கேமரா பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் 1080p வரையிலான வீடியோவை பதிவு செய்ய முடியும்.

செயலி மற்றும் உள்நினைவகம் (Processor and InteralMemory):

ஒன்பிளஸ் 11 5G ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 (Qualcomm Snapdragon 8 Gen 2 SoC) மூலம் இயக்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் 16 ஜிபி ரேம்+256 ஜிபி நினைவகத்துடன் வர உள்ளது. இரண்டு நானோ சிம் ஆதரவுடன் வரும் இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 13 இல் ஆக்சிஜன்ஓஎஸ் 13 (OxygenOS 13) உடன் இயங்குகிறது.

oneplus [Image source : Twitter/ @MaxJmb]

பேட்டரி:

ஒன்பிளஸ் 11 5G ஸ்மார்ட்போன் ஆனது 100W சூப்பர்வூக் (SuperVOOC) பாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 5,000mAh பேட்டரி மூலம் இயக்கப்படுகிறது. இது ஸ்மார்ட்போனை 25 நிமிடங்களில் முழுமையாக சார்ஜ் செய்யும் என்று கூறுகிறது. இது 5G, 4G, உடன் Type-C போர்ட் இணைப்பு ஆதரவையும் வழங்குகிறது.

OnePlus 11 5G [Image source : Twitter/@DH_Hindi]

விலை:

முன்பு கூறப்பட்டது போல OnePlus 11 5G ஆனது டைட்டன் பிளாக் (Titan Black), எடேர்னல் க்ரீன் (Eternal Green) என இரண்டு வண்ணங்களில் கிடைக்கிறது. நிறுவனம் விரைவில் புதிய மார்பில் ஒடிசி (Marble Odyssey Colour) நிறத்துடன் அறிமுகம் செய்யவுள்ளது. இந்த புதிய நிறத்துடன் வரும் ஸ்மார்ட்போனின் வெளியீட்டு தேதி இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. ஆனால், இந்தியாவில் OnePlus 11 5G-ன் விலை ரூ. 64,999 ஆக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Published by
செந்தில்குமார்

Recent Posts

“இந்திய அணியின் ராணி” ஸ்மிருதி மந்தனா படைத்த புது சாதனை!

குஜராத் : இந்திய மகளிர் கிரிக்கெட் அணி தற்போது அயர்லாந்துக்கு எதிராக  3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட கிரிக்கெட்…

41 minutes ago

கேம் சேஞ்சர் திரைப்படம் முதல் நாளில் எவ்வளவு வசூல் தெரியுமா?

டெல்லி : மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகியிருந்த கேம் சேஞ்சர் திரைப்படம் ஜனவரி 10 திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. ஷங்கர்…

1 hour ago

நாளை இந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் அலர்ட்!

சென்னை : நேற்று முன்தினம் தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகளில் நிலவிய…

2 hours ago

“வாய் இருக்குனு ஏதேதோ பேச கூடாது”…சீமான் பேச்சுக்கு பிரேமலதா கண்டனம்!

சென்னை :  நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அண்மையில் கடலூர் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்புகளின் போது…

3 hours ago

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் : திமுக சார்பில் வி. சி.சந்திரகுமார் போட்டி!

ஈரோடு :  காங்கிரஸ் எம்எல்ஏ ஈவிகேஎஸ்.இளங்கோவன் மறைவுக்கு பிறகு ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து, ஈரோடு கிழக்கு…

3 hours ago

விடுதலைச்சிறுத்தைகள் கட்சி அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சி – பானை சின்னம் வழங்கிய தேர்தல் ஆணையம்!

சென்னை : நாம் தமிழா் கட்சி மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆகியவற்றை அங்கீகாரம் பெற்ற மாநில கட்சிகளாக இந்திய…

3 hours ago