லான்ஜ் ஆனது ‘ஒன் ப்ளஸ் பட்ஸ் ப்ரோ 3’ ..! விலை விவரம், அம்சங்கள் இதோ!
சென்னை : ஒன்பிளஸ் நிறுவனம் அடுத்ததாக இந்திய சந்தையில் புதிதாக இன்று மாலை ‘ஒன் ப்ளஸ் பட்ஸ் ப்ரோ 3’-ஐ லாஞ் செய்துள்ளனர்.
ஒன்பிளஸ் ஓப்பன் அபெக்ஸ் எடிஷன் (OnePlus Open Apex Edition), ஒன்பிளஸ் நோர்ட் 4 (OnePlus Nord 4) மற்றும் ஒன்பிளஸ் பேட் 2 (OnePlus Pad 2) ஆகிய புதிய கெட்ஜெட்டுகளை இந்திய சந்தையில் சமீபத்தில் களமிறங்கி விற்பனை ஆகி வருகிறது. இந்த நிலையில் ஒன்பிளஸ் நிறுவனமானது இன்று மாலை மற்றுமொரு கேட்ஜெட்டான இயர் பட்ஸை வெளியிட்டுள்ளனர்.
தற்போது நடைபெற்ற இந்த வெளியீட்டு நிகழ்வில் ஒன்பிளஸ் நிருவத்தின் பிளாக்ஷிப் தயாரிப்பான ‘ஒன்பிளஸ் பட்ஸ் ப்ரோ 3 இயர்பட்ஸ் (OnePlus Buds Pro 3 Earbuds)’ வெளியிட்டனர். இந்த 2024 ஆம் ஆண்டில் இதுவரை வெளியான மிகவும் முக்கியமான கேட்ஜெட்டில் ஒன்றாக இந்த இயர் பட்ஸ் பார்க்கப்படுகிறது. அதற்கு காரணம் என்னவென்றால் இது டூயல் ட்ரைவர் அமைப்புடன் (Dual driver setup) உருவாகி இருக்கிறது.
அதே நேரம் முந்தய இயர்பட்ஸ் மாடலின் (ஒன்பிளஸ் பட்ஸ் ப்ரோ 2) விலையில் பலவகையான மேம்படுத்தல்களை (Upgrades) கொண்டு களமிறங்கி உள்ளது.
ஒன்பிளஸ் பட்ஸ் ப்ரோ 3 அம்சங்கள் :
- இந்த ஒன் ப்ளஸ் இயற் ப்ரோ 3 பட்ஸை பற்றி ஏற்கனவே சொன்னது தான். இது டூயல் ட்ரைவர் அமைப்புடன் உருவாக்கப்பட்டுள்ளது. டூயல் ட்ரைவ் என்றால் மிக துல்லியமான இரைச்சலையும் (Unwanted Noise) இது ஃபில்டர் செய்து விடும். இதனால், மறுமுனையில் போனில் பேசுபவர்களுக்கு நாம் பேசுவதை தெளிவுடன் கேட்பதற்காகவே உருவாக்கப்பட்டுள்ளது.
- அது மட்டுமின்றி நமக்கு பிடித்த பாடுகளில் உள்ள துல்லியமான இசையையும் இது கொடுக்கும். இதன் மூலம் நமக்கு நல்ல ஒரு பாட்டு கேட்கும் அனுபவத்தை கொடுக்கும்.
- இந்த புதிய இயர்பட்ஸ் ஆனது LHDC 5.0 கோடெக்கிற்கான ஆதரவுடன் 11mm வூஃபர் மற்றும் 6mm ட்வீட்டர் உள்ளிட்ட டூயல் ட்ரைவர் அமைப்பை கொண்டிருக்கிறது.
- இது இயற் பட்ஸ் 43 மணிநேர பேட்டரி லைஃப்பை வழங்கியுள்ளனர். இது ஒன்பிளஸ் பட்ஸ் ப்ரோ 2 மாடலை விட 4 மணிநேரம் அதிகமாகும். மேலும், இந்த பட்ஸை 10 நிமிடங்கள் சார்ஜ் செய்வதன் மூலம் 5 மணி நேரம் உபயோகிக்கலாம்.
- இந்த இயற் பட்ஸ், ஐபி55 ஸ்பிளாஷ் மற்றும் தூசி எதிர்ப்பை கொண்டிருக்கும். இதனால், இது தூசி, வியர்வை மற்றும் லேசான மழையில் கூட தாக்குப்பிடிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
விலை விவரம் .!
- இந்தியாவில் ஒன் ப்ளஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள இந்த ‘ஒன் ப்ளஸ் பட்ஸ் ப்ரோ 3’ அறிமுக விலையாக ரூ.11,999/- ரூபாய்க்கு வெளியாகி உள்ளது.
- இது கிட்டத்தட்ட ஒரு 5G ஸ்மார்ட் போனின் விலையாகும்.
- ஒன் ப்ளஸ் கேட்ஜெட்டை விரும்பும் பயனர்கள், ஒன் ப்ளஸ்ஸின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று முன்பதிவு செய்து கொள்ளலாம்.
- மேலும், வரும் ஆகஸ்ட்-23ம் தேதி, பகல் 12 மணி முதல் இது விற்பனைக்கு களமிறங்குகிறது.