பிரீமியம் டிசைன்..50எம்பி கேமரா..6,000mAh பேட்டரி.! நுபியா இசட்60 அல்ட்ரா வெளியீடு எப்போ.?

NubiaZ60Ultra

சீன ஸ்மார்ட்போன் உற்பத்தியாளரான நுபியா டெக்னாலஜி, தனது ஸ்மார்ட்போனான நுபியா இசட்60 அல்ட்ராவை (Nubia Z60 Ultra) அறிமுகப்படுத்தத் தயாராகி வருகிறது. இந்த ஸ்மார்ட்போனை டிசம்பர் 19ம் தேதி மதியம் 2 மணிக்கு சீனாவில் வெளியிடத் திட்டமிட்டுள்ளது. ஆனால் அறிமுகத்திற்கு முன்பே போனின் புகைப்படங்கள் மற்றும் அம்சங்கள் கசிந்துள்ளன.

முன்னதாக வெளியான டீஸர்கள் போனின் கேமரா வடிவமைப்பை உறுதிப்படுத்தியது. அதேபோல இப்போது வெளியாகியுள்ள புகைப்படம், போனின் முழு வடிவமைப்பையும் வெளிப்படுத்தியுள்ளது. அந்த படத்தின்படி, கடந்த மார்ச் மாதம் வெளியான நுபியா இசட் 50 அல்ட்ராவில் உள்ளது போல நாட்ச் இல்லாத டிசைன் கொண்ட டிஸ்ப்ளே வரலாம்.

5000mAh பேட்டரி..4ஜிபி ரேம்..வெறும் ரூ.14,000 தான்.! விவோவின் எந்த மாடல் தெரியுமா.?

இதை வைத்துப் பார்த்தால் போனில் அண்டர் டிஸ்ப்ளே செல்ஃபி கேமரா பொருத்தப்படலாம். மேலும் அனைத்து பக்கங்களிலும் சமமான பெசல்கள் கொண்ட பிளாட் டிஸ்பிளே உள்ளது. மெட்டல் பிரேம்கள் உடைய இந்த போனில் வலது புறம் ஒரு அலர்ட் ஸ்லைடர் உள்ளது. அதே பக்கத்தில் பவர் கீ மற்றும் வால்யூம் பட்டன்கள் உள்ளன. மொத்தத்தில் இந்த ஸ்மார்ட்போன் ஒரு பிரீமியம் லுக்கில் உள்ளது.

முன்னதாக வெளியான தகவலின்படி, நுபியா இசட்60 அல்ட்ரா போனில் 1.5K ரெசல்யூஷன் மற்றும் 120 ஹெர்ட்ஸ் வரை ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட 6.8 இன்ச் ஓஎல்இடி டிஸ்ப்ளே இருக்கலாம். அட்ரினோ ஜிபியு உடன் இணைக்கப்பட்ட குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 சிப்செட் (Snapdragon 8 Gen 3) பொருத்தப்படலாம். அதோடு ஆன்ட்ராய்டு 14 அடிப்படையிலான மை ஓஎஸ் உள்ளது.

ஆண்டுக்கு 50 மில்லியன் யூனிட்.! இந்தியாவில் ஐபோன் உற்பத்தியை உயர்த்தும் ஆப்பிள்.!

கேமராவைப் பொறுத்தவரையில் ஓஐஎஸ் (OIS) அம்சம் கொண்ட 50 எம்பி மெயின் கேமரா, 50 எம்பி அல்ட்ரா வைட் கேமரா மற்றும் 3x ஆப்டிகல் ஜூம் கொண்ட 64 எம்பி பெரிஸ்கோப் கேமரா கொண்ட டிரிபிள் ரியர் கேமரா அமைப்பு உள்ளது. 16 எம்பி அண்டர் டிஸ்ப்ளே செல்ஃபி கேமரா பொருத்தப்படலாம். பாதுகாப்பிற்காக அண்டர் டிஸ்பிளே ஃபிங்கர் சென்சார், தூசி மற்றும் நீர் எதிர்ப்புக்காக ஐபி68 ரேட்டிங் உள்ளது.

இந்த ஸ்மார்ட்போனில் 6,000mAh பேட்டரி பொருத்தப்படலாம். இந்த பெரிய பேட்டரியை சார்ஜ் செய்ய 80 வாட்ஸ் வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் உள்ளது. மேலும், நுபியா இசட்60 அல்ட்ரா ஸ்மார்ட்போன் 16  ஜிபி வரையிலான எல்பிடிடிஆர்5எக்ஸ் (LPDDR5x) ரேம் மற்றும் 1 டிபி யுஎஃப்எஸ் 4.0 இன்டெர்னல் ஸ்டோரேஜைக் கொண்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்